search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • “ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்” என்ற நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போலீசாரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பராகவே பார்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் பணிபுரியும் போலீசார் தினந்தோறும் பாதுகாப்பு பணி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பண்டிகை நாளிலும் குடும்பத்துடன் செலவிட முடியாமல் பணிபுரிந்து வரும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான பயிற்சிகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கந்தபுனேணி, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோரின் ஆலோசனைபடி ஜோதி அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் விதமாக "ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்" என்ற நூதன நிகழ்ச்சி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை சிக்னல் அருகே தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீசார் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பஸ், ஆட்டோ பயணிகளுக்கு லட்டுகள் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர், போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் பேசுகையில்:-

    காவல்துறையினரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பரா கவே பார்க்க வேண்டும், காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பேணும் விதத்தில்நடத்த ப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளால் பொதும க்களுக்கும், காவல்துறையி னருக்குமி டையே உள்ள இடைவெளி குறையும் என்று தெரிவித்தார் .

    இனிப்புகளை பெற்றுக்கொண்ட பொது மக்கள் காவல்துறையினரின் நூதன முயற்சியை பாராட்டி னர்.

    நிகழ்ச்சியில்போக்கு வரத்து உதவி இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன், போக்கு வரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கு மார், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்க ட்டளை மேலாளர் ஞானசு ந்தரி உள்ளிட்டோர் செய்தி ருந்தனர்.

    • ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நவராத்திரி விழாவை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பலமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான ராஜ ராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாள்தோறும் கோயிலில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைபோகத்தின் துவக்கமாக ஊர் அம்பலகாரர் ராஜா தலைமையில் பக்தர்களால் சிர்வரிசை எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்கள் சரவணன் மற்றும் ஹரி ஆகியோர் வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் புடை சூழ மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்று சென்றனர். வைபோகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    • காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் மிதக்கும் கருவிகளை கொண்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் நடந்தது.

    பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள கோவில் குளத்தில் தத்ரூபமாக நடைபெற்ற மீட்பு ஒத்திகையை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஐந்து 108 வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு சைரன் சத்தம் ஒலிக்க பரபரப்பாக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் நீரில் மூழ்கியவர்களை ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணஙகள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய வர்களை காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் பற்றி தத்ரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    ரத்த காயங்களுடன் அடிபட்டவர்களை தூக்குதல், மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது, வெள்ளத்தில் சிக்கிய–வர்களை கண்டுபிடித்து காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கைகளில் வண்ண ரிப்பன்களை கட்டுதல் போன்ற மீட்பு நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

    ஸ்கூபா போன்ற அதி நவீன மிதக்கும் கருவிகளை கொண்டு நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தண்ணீரில் தத்தளித்த கால்நடையை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால பெட்டக உபகரணங்களை ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வளர்களை பாராட்டினார்.

    ஏராளமான வாகனங்கள் சைரன் ஒளி எழுப்பி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
    • தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி,சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான மங்கலம் அக்பர் அலியின் 8-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது.மேலும் மங்கலம் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி,சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் மங்கலம் பகுதியை சேர்ந்த சலவைத்தொழிலாளி ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நலத்திட்ட உதவிகளை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் வழங்கினார்கள். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹா நசீர் தலைமையில் நடைபெற்றது. ,

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் பகுதி தலைவர் ஜக்கிரியா சேட் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,மங்கலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரபிதீன்,முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜக்கிரியா ,இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் மங்கலம் சிராஜ்தீன்,மாணவரணி மாநில துணைத்தலைவர் மங்கலம் அப்பாஸ்,காங்கிரஸ் நிர்வாகி சபாதுரை,மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் இத்ரீஸ்,எஸ்.டி.பி.ஐ.கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர்,தமுமுக. கட்சியைச் சேர்ந்த நிஷாத், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே நரசிங்கன்பேட்டை புவிசார் குறியீடு பெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியீட்டு விழா, இசைக்கருவி தயாரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா, நாதஸ்வர இசை திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வரவேற்றார்.

    நாதஸ்வர கலைமாமணி கணேசன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம், வக்கீல் சஞ்சய் காந்தி, ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய குழு துணை தலைவர்கள் அண்ணாதுரை, பத்மாவதி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நாதஸ்வரம் அஞ்சல் உரையை அஞ்சல் மண்டல தலைவர் அப்பா க்கண்ணு கோவிந்தராஜன் வெளியிட அதைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பெற்றுக் கொ ண்டார்.முன்னதாக கலைமா மணி மீனாட்சி சுந்தரம், சேஷகோபாலன் சகோத ரர்கள், வித்வான்கள் கார்த்திக், தங்க ராஜா, மனோ கரன், ராதாகிருஷ்ணன், குருநாதன் , ராஜாராமன் ஆகியோர் இணைந்து 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உஷா, ராஜா, பேரூராட்சி தலைவர்கள் புனிதா ஜெயபால் வனிதா ஸ்டாலின் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் வருவாய் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சார் ஆட்சியர் பிருத்திவிராஜ் தலைமை தாங்கினார். குளத்தில் சிக்கி ஒருவர் தத்தளிப்பது போன்றும், அவரை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் சென்று மீட்டு வருவது போன்றும் ஒத்திகை காண்பித்தனர்.

    தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் அந்தோணி, சுந்தரகுருசாமி, மாவட்ட கலால் உதவி ஆணையர் சிவகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் ராமதாஸ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், சிவகாசி சுகாதாரத்துறை இயக்குநர் கலுசிவலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், ஜோதி ஆகியோர் செய்திருந்தனர். 

    • திருமங்கலம் அருகே கூட்டுறவு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் கதிரவன் திட்ட உரையாற்றினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் முத்துராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்னக்கொடி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர் சீனியப்பா சிறப்புரையாற்றினார். மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் கதிரவன் திட்ட உரையாற்றினார்.

    இதில் 46 பயனாளிகளுக்கு ஆடு, மாடு பராமரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்டிக்கடை மற்றும் விவசாய கடன் என மொத்தம் ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. சங்க செயலாளர் பெருமாள்சாமி வரவேற்றார். எழுத்தர் பால்பாண்டி நன்றி கூறினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு

    கன்னியாகுமரி:

    தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுண்ஹால் வளாகத்தில் தீர்வு தளம் நிகழ்ச்சி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை தலைமையில் நேற்று நடந்தது. பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஆட்சி பொறுப்புக்கு வந்த நாளிலிருந்து தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குமரி மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களுக்கும் சென்று அப்பகுதிகளிலுள்ள சாதாரண ஏழை, எளிய மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தீர்வுதளம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

    பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களுடைய கோரிக்கைகள் எதுவாக இருந் தாலும், அழகிய மண்டபம் மற்றும் கருங்கல்லில் அமைந்துள்ள எனது முகாம் அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    தீர்வு தளம் திட்டத்தின் நோக்கம் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, உள் ளாட்சி அமைப்புகளின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள். நீண்டகாலமாக கிடப்பில் உள்ள பட்டா பிரச்னை, பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் உள்பட தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.

    குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் பழுநடைந்த சாலைகள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

    மாவட்ட சமூக நலத்துறை அலுவவர் சரோஜினி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சகிலா பானு, கல்குளம் வட்டாட்சியர்வினோத், அரசு வழக்கறிஞர்கள் ஜாண்சன், அரசு அலுவ லர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணி விடையும், 4.30 மணிக்கு கலி வேட்டைக்கு அய்யா புறப் படும் நிகழ்ச்சியும் நடைபெற் றது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாக னத்தில் அய்யா வீற்றிருக்க தலைமைப்பதியில் நான்கு ரதவீதிகளையும் வாக னம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனம் முத்திரி கிணற்றங்கரையை சென்றடைந்தது.

    அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. கலி வேட் டையாடும் பணிவிடைகளை குரு பாலஜனாதிபதி நிகழ்த்தினார். கலி வேட்டை நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    குருமார்கள் பால லோகா திபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் வாகன பவனி பணிவிடைகளையும், பள்ளி யறை பணிவிடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோரும் செய்தி ருந்தனர். பின்னர் பக்தர்க ளுக்கு திருப்பதம் வழங்கி சுற்றுப்பகுதி ஊர்க ளான செட்டிவிளை, சாஸ் தான் கோவில் விளை, கோட்க டையடி புதூர், சோட்டப்ப ணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகனம் பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

    பல கிராமங்களை சுற்றி வந்த வாகனம் நள்ளிரவு 12 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலுக்கு வந்தது. அங்கு அய்யா வைகுண்ட சாமி பக்தர்களுக்கு தவக்கோ லத்தில் காட்சியளித்தார். பின்னர் பணிவிடையும், பெரியயுகப்படிப்பும், வடக்கு வாசலில் அன்ன தர்மமும் நடந்தது.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு குன்னமலை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமை தாங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் குன்னமலை ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குன்னமலை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி பகுதிகளை சேர்ந்த வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது.பொதுமக்கள் துணிப்பை பயன்படுத்த வேண்டும். என் குப்பை என் பொறுப்பு. என் கிராமம் தூய்மை கிராமம் உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    அதை தொடர்ந்து நம்ம ஊரு சூப்பரு குறித்தவிழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், துணைத் தலைவர் லட்சுமி, ஊராட்சி செயலர் பரிமளம், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

    • காரைக்கால் கீழவாஞ்சூர் கிராமத்தில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஸ்கர் தலைமை தாங்கி னார். கிராம முக்கியஸ்தர்கள் செல்வராஜ், சசிகுமார், முத்துகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் ஆனந்தகுமார் அந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பள்ளிக் குளத்தின் கரையில், அழிந்துவரும் பனை மரத்தினை காத்திடும் வகையில், பனை விதைகள் நட்டார். அவரைத்தொடர்ந்து, நூற்றுக்கு மேற்பட்ட பனை விதை களை, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் நட்டனர். கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் ரோஹன்குமார் நன்றி கூறினார்.

    • குமாரபாளையம் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி தலைமை ஆசிரியர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • மேலும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்பு ணர்வு பிரச்சார நிகழ்ச்சி தலைமை ஆசிரியர்கள் ஆடலரசு, சிவகாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு போலீஸ் டி.எஸ்.பி. மகாலட்சுமி பங்கேற்று மாணவ, மாணவி யர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

    மேலும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துகொண்டனர். இதில் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம், யாரையும் அடிமையாக விட மாட்டோம், என்பது உள்ளிட்ட வாசகங்களை கூறினார்கள். இதை யடுத்து ராஜம் தியேட்டர் வாசலிலிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி. மகாலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாணவ, மாணவியரிடம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    நகரின் முக்கிய சாலைகளின் வழியாக வந்த பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. இதில் 75-வது சுதந்திரதினத்தை நினைவு படுத்தும் விதமாக ராணுவ பீரங்கி போலவும், காந்தி, நேதாஜி, பாரதமாதா, பரதநாட்டிய கலைஞர் போல வேடமணிந்து மாணவ, மனைவியர் பங்கேற்றனர். போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

    ×