search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    • திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது பாலின பாகுபாடு
    • 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    • ராமர் கோயில் கட்டுவதால் வறுமை ஒழியாது. பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது
    • ராமர் கோயில் காட்டுவதால் பாஜகவிற்கு என்ன லாபம்? அதனால் எங்கள் சகோதரிகளுக்கு என்ன லாபம்? ராமர் கோயிலை வைத்து பாஜக ஏன் ஓட்டு கேட்கிறது?

    ராமர் கோயில் கட்டுவதால் வறுமை ஒழியாது. பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை என்று சந்தோஷ் லாட் குற்றம் சாட்டியுள்ளார்.

    "ராமர் கோயில் கட்டுவதால் பாஜகவிற்கு என்ன லாபம்? அதனால் எங்கள் சகோதரிகளுக்கு என்ன லாபம்? ராமர் கோயிலை வைத்து பாஜக ஏன் ஓட்டு கேட்கிறது? இதன் மூலம் விவசாயிகள் பயன் பெற்றார்களா? அவர்கள் பயன் பெற்றிருந்தால் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? எதற்காக விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர்ப் புகை பயன்படுத்தப்படுகிறது" என அடுக்கடுக்கான கேள்விகளை சந்தோஷ் லாட் எழுப்பியுள்ளார்.

    கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட் கருத்துக்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினார். அதில், "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 62 சதவீதம் வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93 சதவீதம் வருகிறது என புள்ளி விவரங்களோடு அவர் பேச ஆரம்பித்தார்.

    இதனை பார்த்த நெட்டிசன்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் என அண்ணாமலை மாற்றி கூறியதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
    • நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

    தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

    இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திரத் திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலத்தில் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

    பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்த 'தேர்தல் பத்திர திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கும் எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 (1 ) (A) க்கு எதிராகத் தேர்தல் பத்திர திட்டம் உள்ளது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் நன்கொடை வழங்கினார்கள், எவ்வளவு வழங்கினார்கள், என்ற முழுமையான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 6 க்குள் வழங்க வேண்டுமென்றும், தேர்தல் ஆணையம் அந்த விவரங்கள் அனைத்தையும் தனது இணையப் பக்கத்தில் மார்ச் 13ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரியவரும்.

    2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் 16,518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன எனவும், அதில் சுமார் 6600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

    இந்தியாவிலேயே மிக அதிகமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள பாஜக, அதை எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றது என்பதும், அதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டன என்பதும் விரைவில் தெரியவரும்.

    நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, அடுத்து நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அது அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

    உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தன்னை இணைத்துக்கொண்டிருந்தது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியதற்கு மற்றவர்கள் குறிப்பிட்ட காரணங்களை ஆதரித்ததோடு, விசிக போன்று விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்யும் சிறிய கட்சிகளுக்கு இந்தத் திட்டம் பாகுபாடு காட்டுகிறது எனவே இதை ரத்து செய்யவேண்டும் என விசிக தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து கருத்து தெரிவித்திருந்தது.

    இந்திய தேர்தல் சனநாயகத்தைக் காப்பாற்றுவதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது. அதற்காக உச்சநீதிமன்றத்தை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம். இந்தத் தீர்ப்பை வழங்கியது போலவே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்த வழக்கையும் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு.
    • கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழு.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் இறுதி விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விசாரணையின்போது, கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • ரூ. 10 லட்சம் அல்லது ரூ. 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள்.
    • அரசியல் கட்சிக்கு ரூ. 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும் என்று நீங்கள் கற்பனை செய்யலாம்.

    தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும்.

    இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். அவர்கள் மார்ச் 31-ந்தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிக்கு செல்லும் நிதி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.

    கருப்பு பணத்தை ஒழிப்பது என்பதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறுவது நியாயம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    இந்த தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் கூறியதாவது:-

    அரசியல் கட்சிகளுக்கும், நிதி அளிப்பவர்களுக்கும் இடையிலான பிணைப்பு குறித்து நாங்கள் அறிந்து கொள்வோம். அதேபோல், பிரதிபலன் (Quid pro quo) குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவர் கூட இதுபோன்ற மிகப்பெரிய தொகையை பிரதிபலன் இல்லாமல் வழங்க மாட்டார்கள்.

    10 லட்சம் அல்லது 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள். அது கோடிக்கணக்கில் இருக்கும். எனவே அரசியல் கட்சிக்கு 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும். மேலும் அவர்கள் செயல்பாட்டில் சில சலுகைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.

    பிரதமர் மோடி ஊழல் எங்கே? ஊழல் எங்கே? என கேட்கிறார். இப்போது மோடி ஜி, உங்கள் கண்முன் உங்களுடைய ஊழல், இந்த அரசாங்க ஊழல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் "அரசியல் கட்சியின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனை இந்த தீர்ப்பு பாதுகாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.
    • தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி  தேர்தல் பத்திரங்கள் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    தலைமை நீதிபதி ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்சில் சஞ்ஜீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நிதிபதிகள் இடம் பிடித்திருந்தனர்.

    எங்களுக்குள் ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளது. எனக்கும், நீதிபதி சஞ்சய் கண்ணாவுக்கும் இடையில் இரண்டு கருத்துகள் இருந்தன. அதன்பின் ஒரே முடிவுக்கு வரப்பட்டது. முடிவுக்கு வருவதில் சிறு வேறுபாடு இருந்தது" என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
    • அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரிக்கலாம்.

    அரசியல் கட்சிகளிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.

    இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனி நபர்கள், நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.

    ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொது மக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு  அளிக்கப்படாது. எனினும், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம்.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்க இருக்கிறது. 

    • 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அத்தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், குஜராத் அரசு குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் தேவையற்றவையாகும். மேலும் அவை குஜராத் அரசு மீது தப்பெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி- அஜித் பவார் அணி என பிரிந்து செயல்பட்டது.
    • அஜித் பவார் அணிதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அஜித் பவார் தலைமையில் இயங்கும் அணிக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என அங்கீகரித்தது. மேலும், கடிகாரம் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி அளித்தது.

    இதனால் சரத் பவார் தனது அணிக்கு "தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார்" கட்சி எனப் பெயர் சூட்டினார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என சரத் பவார் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் அணியினர் முறையீடு செய்துள்ளனர்.

    முன்னதாக,

    அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து சென்று தனியாக செயல்பட்டு வந்தார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலர் அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.

    கட்சியில் இருந்து விலகி தனியாக செயல்படும் அஜித் பவார் உள்ளிட்டோரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் புகார் அளித்தனர். ஆனால், சபாநாயகர் சரத் பவார் அணியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அதனைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்தது.

    • இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்த இருக்கிறார்கள்.
    • டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அரியானா விவசாயிகள் டிராக்டர்களுடன் செல்லாத வகையில் அம்மாநில அரசு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்க தலைவர் ஆதிஷ் அகர்வாலா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுந்தியுள்ளார்.

    அதில், "இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், பாதிக்கக் கூடிய வகையிலான எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தும் வகையில், நேற்றிரவு மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

    • தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது.
    • வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.

    தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்ததற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவின் மேல்முறையீடு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. 

    அப்போது, தலைமை நீதிபதி முன் அனுமதி இல்லாமல் தனி நீதிபதி வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டதாக, தலைமை பதிவாளர் ஜோதிராமன் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    மேலும், தனி நீதிபதி தானாக வந்து வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும், நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்யும் வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியின் ஒப்புதலை தனி நீதிபதி பெற்றுள்ளார் என பதிவாளர் ஜோதிராமன் தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்குகள் இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள சூழலில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    மேலும், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பலாமா?

    அமைச்சர்களுக்கு எதிராக தானாக, தனி நீதிபதி முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு முன் தலைமை நீதிபதியிடம் கேட்டிருக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது.

    தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    ×