search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொழிபெயர்ப்பு"

    • மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் சுற்றுலா பயணி ஒருவர் போலீசில் சிக்கினார்.
    • இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    லிஸ்பன்:

    அஜர்பைஜானைச் சேர்ந்த 36 வயதான ரஷிய பேச்சாளர் ஒருவர் லிஸ்பனில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றார். அங்கு மாதுளம் பழச்சாறு ஆர்டர் செய்ய முயன்றார்.

    மாதுளை என்ற வார்த்தையை போர்ச்சுக்கீசிய மொழியில் கூறுவதற்காக அவர் மொழி பயன்பாட்டை பயன்படுத்தினார். ஆனால் அது அவருக்கு தவறான மொழிபெயர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது மாதுளம் பழச்சாறு என்பதற்கு பதிலாக, கையெறி குண்டு என வந்துள்ளது.

    இதை அறியாத அவர் ஆர்டர் செய்ததும் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் கையெறி குண்டுகளைக் காட்டி மிரட்டுவதாக கருதிய உணவக ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சுற்றுலா பயணியை பிடித்து கைது செய்தனர். அதன்பின், அவரை அருகில் உள்ள காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என உறுதி செய்தபின், அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் இல்லை என உறுதி செய்தனர்.

    விசாரணையில், மொழிபெயர்ப்பில் நடந்த பிரச்சனையால் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆசிரியர் ராமாயண காவியத்தை உருதுவில் மொழிபெயர்த்துள்ளார்.
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆசிரியை மகி தலாத் சித்திக். இவர், இதுவரை 7 புத்தங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

    இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் ராமாயணம் புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும், இஸ்லாமிய மக்கள் ராமாயணத்தை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உருதுவில் மொழிபெயர்க்க வேண்டும் என மகி தலாத்திடம் அவரது நண்பர் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில், இரண்டு வருடங்கள் செலவிட்டு ராமாயணத்தை மகி தலாத் உருதுவில் மொழிபெயர்த்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ எனக்கு அனைத்து மதங்களின் புனித நூல்களையும் பிடிக்கும். மத ரீதியாக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்காக ராமாயணத்தை உருதுவில் மொழி பெயர்க்க தொடங்கினேன்.’ என அவர் தெரிவித்தார்.
    ×