என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாத்காரம்"

    • நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.
    • சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, அக்.28-

    பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பல்லவ ராயநத்தம் முருக ன்கோயி ல்தெருவைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24), கூலி தொழிலாளி திருமணமா காதவர். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார். இதனையடுத்து இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி உடல் பாதிக்கப்பட்டார்.

    இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சிறுமியை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கடத்தி சென்று பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் சத்திரப்பட்டி தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்காக மதுரை அரண்மணலியாங்காடு பகுதிக்கு வந்தார். அப்போது அவரை ஒரு காரில் வந்த 2 பேர் வழி மறித்தனர். அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றனர். அந்த கார் அங்குள்ள ஒரு தோப்புக்குள் சென்றது. அங்கு கடத்தி சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த மர்ம நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்து சென்று விட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரவுத்திரப் பாண்டி மற்றும் ஒருவர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தம்பியுடன் நடந்து சென்ற சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் பக்கத்தில் உள்ள ஆவாரங்காடுஅருகே தனது தம்பியுடன் நடந்து வந்த 9 வயது சிறுமியை காட்டனாண்டிகுப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனுஷ் சிறுமியின் தம்பியிடம் ரூ. 10 கொடுத்து வீட்டிற்கு போக கூறினார். அதன்பின்னர் அந்த சிறுமியை தூக்கி சென்றுஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

    சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார். இது பற்றிசிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.பண்ருட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி இதுகுறித்து போக்சோசட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளி தனுஷை கைது செய்தனர்.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர்

    புதுக்கோட்டைஇலுப்பூரை சேர்ந்தவர் ஜனா என்கிற ஜானகிராமன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர் 21 வயது இளம்பெண்ணுடன் நட்புடன் பழகி வந்தார். பின்னர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜானகிராமனிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தன்னை திருமணம் செய்ய அந்த இளம்பெண் ஜானகிராமனிடம் மீண்டும் கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர். ஆயுள் தண்டனை இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ஜானகிராமனுக்கு தகாத வார்த்தைகளால் திட்டிய பிரிவில் 3 மாதம் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், திருமணம் செய்யாமல் மோசடி செய்ததற்கு ஓராண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நிவாரணமாக வழங்க தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து ஜானகிராமனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

    • செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.
    • செந்தில்குமார் தனது பிறந்தநாளுக்கு காதலியை கோவைக்கு வருமாறு கூறினார்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவருக்கும், மும்பையை சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கும் முகநூல் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு அடிக்கடி பேசினார்கள்.

    இதனால் அவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் செல்போன் மூலம் தினமும் பேசிக்கொண்டனர். அத்துடன் வீடியோ கால் மூலமாகவும் அடிக்கடி பேசி வந்தனர். இதற்கிடையே செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.

    அதற்கு அந்த பெண், முக்கியமான நிகழ்ச்சி என்றால் சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் செந்தில்குமாரின் பிறந்தநாள் வந்தது. இதற்காக அவர் தனது காதலியை கோவைக்கு வருமாறு கூறினார். இதையடுத்து பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக அந்த பெண் விமானம் மூலம் கோவை வந்தார்.

    பின்னர் 2 பேரும் பல இடங்களுக்கு சுற்றி பேசி மகிழ்ச்சியாக இருந்தனர். இரவில் அந்த பெண்ணை செந்தில்குமார், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் நான் உன்னைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.70 ஆயிரத்தையும் பெற்றார். பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு செல்போன் எண்ணில் இருந்து செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு பேசினாலும் அவர் பேசவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவை மாநகர் மேற்கு பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெண் சுயநினைவின்றி கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
    • திருவட்டார் போலீசார் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் வீட்டில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அந்தப் பெண் சுய நினைவின்றி இருந்ததால், குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட னர். அப்போது ஒரு வாலிப ரின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த வாலிபர், சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அதற்கு அவர் மறுத்ததால் தாக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செயதனர். விசார ணையில் அவரது பெயர் எட்வின் (வயது 28) என்ப தும், தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. கைதான எட்வின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எனக்கு மோகம் இருந்தது. சம்பவத்தன்று அந்தப் பெண், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.

    அதன்பிறகு நான் மது அருந்தினேன். அந்தநேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் வீடு திரும்பினார். அதனை பயன்படுத்தி நானும் வீட்டுக்குள் புகுந்தேன். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் அவர் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்தேன்.கட்டிலில் அவரது தலையை மோதிய தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

    இதற்கிடையில் அவரது கணவர் வந்து மனைவி சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அலறினார். நானும் அங்கு சென்று அவருக்கு உதவுவது போல் நடித்தேன். மேலும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்த போது, நானும் அங்கே இருந்து, நகைக்காக தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் என் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    எட்வினை கைது செய்தது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது, எட்வின் பேசியது மற்றும் அவரது நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனவே அவரை கண்காணிக்க முடிவு செய்தோம். அவருக்கே தெரியாமல், அவரை கண்காணித்தோம். இதில் சந்தேகம் மேலும் அதிகரித்ததால் எட்வினை பிடித்து விசாரித்தோம். முதலில் மறுத்த அவர், பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் என்றனர்.

    கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி காத்தமுத்து(35) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பி ஓடி விட்டார்.

    கடலூர்:

    மாற்றுதிறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போதுஅதே பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி காத்தமுத்து(35) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பி ஓடி விட்டார்

    இது குறித்து மகளிர் போலீஸ நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்பு வெட்டும்தொழிலாளி காத்த முத்துவைதேடி வந்தனர்.கடந்த ஓராண்டு காலமாக தலை மறைவாக இருந்த காத்தமுத்து நேற்று புதுப்பேட்டை பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
    • அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டுக் கூடலுரை சேர்ந்தவர் சோழன். தொழிலாளி.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார். இது குறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சோழனை தேடி வந்தனர். கடந்த 2 மாதகாலமாக தலை மறைவாக இருந்த சோழன் பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுரேஷ் சிறுகனூர் நோக்கி வந்துள்ளார்.
    • பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). இவர் நேற்று முன்தினம் மதியம் ரெட்டிமாங்குடியில் இருந்து சிறுகனூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்ற 42 வயதுடைய ஒரு பெண், மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷிடம் 'லிப்ட்' கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுரேஷ் சிறுகனூர் நோக்கி வந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுரேஷ், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய சுரேஷ், மீண்டும் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து சிறுகனூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுபான கூடத்தில் மது அருந்திகொண்டிருந்த சுரேசை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது 2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, ரெட்டிமாங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து 3 நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாதாரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • அதன் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கனை கைது செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 50), கூலி தொழிலாளி.

    இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாதாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கனை கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு ரங்கன் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள மானுப்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் தம்புராஜ் (வயது 22) .கூலி தொழி லாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மாணவி மாயமானதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தம்புராஜ் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தம்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • செல்வம் (வயது 54) சிறுமியிடம் தனக்கு பீடி வாங்கிக் கொண்டு வர பணம் கொடுத்துள்ளார்
    • செல்வம் அந்த மாணவிலை கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது

    கடலூர்:

    பெண்ணாடம் பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பில் மாணவி படித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு மளிகை சாமான் வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (வயது 54) சிறுமியிடம் தனக்கு பீடி வாங்கிக் கொண்டு வர பணம் கொடுத்துள்ளார். மாணவியும் கடைக்கு சென்று மளிகை பொருட்களையும், செல்வத்திற்கும் பீடியும் வாங்கி வந்துள்ளார். பீடியை செல்வத்திடம் கொடுத்துள்ளார். அது சமயம் செல்வம் அந்த மாணவிலை கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.   நடந்த சம்பவத்தை மாணவி அவரது தங்கையிடம் கூறியுள்ளார். தங்கை தாயிடம் கூறவே, இது குறித்து அவரது தாய் ஆவனங்குடி போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் செல்வத்தை போக்சோ பிரிவில் கைது செய்தனர். திட்டக்குடி அருகே 54 வயதான முதியவர் மாணவிலை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×