search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலிவுட்"

    • முதல் நாளில் இருந்தே வசூலில் அனிமல் சாதனை புரிந்து வருகிறது
    • அனிமல் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என எம்.பி. விமர்சித்தார்

    கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    உலகளவில் இத்திரைப்படம் வசூலில் ரூ.600 கோடி இதுவரை வசூலித்துள்ளது.

    மிகவும் அதிகமாக வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது.

    "நாம் அனைவரும் திரைப்படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தோம். சமூகத்தின் கண்ணாடியாக விளங்குவது சினிமா. அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு நோய் போன்றவை. எனது மகளும் மேலும் சில குழந்தைகளும் இப்படத்தை காண சென்று பாதியிலேயே திரும்பி விட்டனர். இத்திரைப்படம் ஆணாதிக்கத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறது. இதற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு கிடைத்தது?" என பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில எம்.பி.யான ரஞ்சீத் ரஞ்சன் மாநிலங்களவையில் "அனிமல்" திரைப்படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    • வரும் நாட்களில் பிற ஹீரோக்களின் சாதனைகளை அனிமல் முறியடித்து விடும்
    • இது கடவுளின் கருணை என உணர்ச்சிகரமாக பாபி தியோல் பதிவிட்டுள்ளார்

    கடந்த டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" (Animal) உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இவருடன் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    2023 ஆண்டிற்கான "முதல் நாள் வசூல்" சாதனை பட்டியலில் அனிமல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தி திரையுலகில் தீபாவளி, பக்ரீத் போன்று விடுமுறை நாட்களில்தான் முன்னணி கதாநாயகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இது அவற்றின் வெற்றிக்கும் பெரிதும் உதவி வந்தது.

    ஆனால், அனிமல் திரைப்படம், விடுமுறை இல்லாத சாதாரண வார நாளில் வெளியிடப்பட்டும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த சில நாட்களில், இந்தி திரையுலகின் பிற முன்னணி ஹீரோக்களான சல்மான் கான், ஷாருக் கான் போன்றோரின் இவ்வருட வெற்றி படங்களின் வசூலை அனிமல் தாண்டி விடும் என திரையுலக விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

    இந்நிலையில், இத்திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இது குறித்து மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பாபி தியோல் கண் கலங்கி தனது உணர்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    அதில் பாபி தியோல், "ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இது கடவுளின் கருணை. இந்த திரைப்படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கும், என் நடிப்பிற்கும் உங்களிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளது. எனக்கு இது கனவு போல் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

    இந்தி திரையுலகின் மற்றொரு முன்னணி கதாநாயகனும், பாபி தியோலின் சகோதரருமான சன்னி தியோல், "பாபி தியோல் உலகையே உலுக்கி விட்டார்" என பாராட்டியுள்ளார்.

    தென்னிந்தியா, வட இந்தியா என பேதங்கள் இன்றி மக்கள் விரும்பும் திரைப்படங்கள் எந்த மொழியாக இருந்தாலும், நாடு முழுவதும் ரசிகர்கள் வரவேற்பு அளிப்பதும், அவை வசூலை அள்ளி குவிப்பதும் நல்ல முன்னேற்றம் என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே திருப்பதி சென்றுள்ளார்.
    • இவரின் புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகம் லைக் செய்யப்படுகின்றன.

    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார். அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோனே கிராமிய பாடகர் மேமே கான் பாடலுக்கு நடனமாடினார்.

    தீபிகா படுகோனே
    தீபிகா படுகோனே

    இந்நிலையில், தீபிகா படுகோனே திருப்பதி சென்றுள்ளார். இன்று அதிகாலை விஜபி தரிசனம் செய்ததை அடுத்து தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், தரிசனம் முடிந்து வெளியே வந்த தீபிகா படுகோனேவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    சினிமாவில் இருந்து அரசியலில் குதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ்பிரதாப் யாதவ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் கட்சியுடன் கூட்டணி அமைத்து லாலு பிரசாத் யாதவ் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது, தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும், தேஜ்பிரதாப் யாதவ் சுகாதாரத்துறை மந்திரியாகவும் பதவியேற்றனர்.

    பின்னர், ஆட்சியை கவிழ்த்து விட்டு நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார். பின்னர், தேஜஸ்வி யாதவ் முழு அரசியலில் இறங்கினார். தந்தை சிறை வாசத்தில் இருக்கும் நிலையில், தேஜஸ்வி கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலும் வென்று காட்டினார்.

    ஆனால்,  தேஜ்பிரதாப் யாதவ் அரசியலில் கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் திருமணம் முடித்த அவர் தனது பார்வையை கலைத்துறை பக்கம் தற்போது திருப்பியுள்ளார். ஏற்கனவே, ஒரு போஜ்பூரி படத்தில் அவர் நடித்து இருந்தாலும், தற்போது பாலிவுட்டில் கால்தடம் பதித்துள்ளார்.

    ‘ருத்ரா - தி அவதார்’ என்ற படப்பெயருடன் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ளார். 
    ×