search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 204655"

    • வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 35). இவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் தளவாய் புரத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கும் பழக்கம் இருந்தது. அப்போது எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக இளங்கோ கூறினார். இதற்காக ஜவுளிக்கடை நடத்தி வரும் ஞானசேகரன், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.அவர்கள் தனக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

    இதையடுத்து அவர்களது ஜவுளி கடைக்கு சென்று 3 தவணைகளில் ரூ. 16 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தேன். அதன் பின் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி வேலை வாங்கி தரவில்லை‌ பணத்தை யும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படை யில் ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடையார்பாளையத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
    • ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலையில் தத்தனூர் காலேஜ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தியது, ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும், விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர். பின்னர் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்."

    • திருமங்கலத்தில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
    • இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தகுளம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). எல்லை பாதுகாப்பு படைவீரர். இவரது மனைவி தேவி (45). இவர்களது மகள் மோனிஷா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் மோனி ஷாவை சென்னையில் உள்ள கணவர் வீட்டில் விட்டு வருவதற்காக கடந்த 30-ந் தேதி முருகேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகேசன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்டவைகளை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த முருகேசன் தனது வீட்டில் நகை கொள்ளை போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    • மதுரை ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாதவன், சல்மான், கரிமேடு கார்த்திக், புட்டுத்தோப்பு பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 47). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்த பொன்ராஜ் பண்டிகை முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் செல்வதற்காக கப்பலூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் மர்ம நபர்கள் பொன்ராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து விட்டு சென்று விட்டனர்.

    திருப்பரங்குன்றத்ைத சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவர் மினி வேனில் ஆவின் பால் எடுத்து கொண்டு திருமங்கலம் பகுதியில் விநியோகம் செய்ய சென்றார். அப்போது 4 மர்ம நபர்கள் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    இதுபற்றிய புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாதவன், சல்மான், கரிமேடு கார்த்திக், புட்டுத்தோப்பு பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார்.

    குழித்துறை, அக்.27-

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் புளியங்விளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 67). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் துணிக்கடை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென எரிவதை பார்த்ததும் மார்க்கெட்டில் இருந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால் கடையின் முன் பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெட்ஷீட் மற்றும் துண்டுகள் எரிந்து நாசமானது. இதையடுத்து ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜியை தேடி வருகின்றனர்.

    • விஷ வண்டுகள் பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு.
    • நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் விஷ வண்டுகள் தொடர்ந்து பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    உடன் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி செயலர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாச னிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர்.

    மனுவின் பேரில் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு போலீசார் இணைந்து கங்களாஞ் சேரிரியில் காலனி தெரு, பூண்டி, கீழத்தெரு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    • மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
    • கோவையில் கார் வெடித்து தீப்பிடித்த சம்பவம் எதிரொலி

    கன்னியாகுமரி:

    கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது.

    இதில் காரில் இருந்த மர்மநபர் பலியானார். இதையடுத்து தமிழகம் முழு வதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதி களில் பாதுகாப்பு பலப்படு த்தப்பட்டு உள்ளது. களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசார் தடுப்பு வேலி கள் அமைத்து வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. போலீசார், கார்களில் வருபவர்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்து வருவதுடன் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இதே போல் ஆரல்வாய் மொழி, அஞ்சு கிராமம் சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வரு கிறது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படு த்தப்பட்ட தையடுத்து முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி, நாங்குநேரி, இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    • அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • அரியலூரை சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 28 ).

    சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

    சில மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து கார்த்திகேயன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அரியலூர் கீழத் தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார் ( 28), அரியலூர் வடக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் (40) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் வட்டம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
    • ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியும், குழந்தைகளும் காணவில்லை.
    • தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    தக்கலை, அக்.20-

    தக்கலை அருகே துரப்பு திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது36), இவரது மனைவி பிரியா (32). இவர்களுக்கு ரிஷி (10) மற்றும் ரிக்ஷானா (8) என 2 குழந்தைகள் உள்ளனர். மகன் 5-ம் வகுப்பும், மகள் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் வட்டம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியும், குழந்தைகளும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தார். காணாததால் நேற்று மாலை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    • திராவகம் கலந்த குளிர்பானம் குடித்ததால் பலி
    • பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு

    நாகர்கோவில்:

    களியக்காவிளை அருகே படந்தாலுமூடு மெதுகும்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சோபியா. இவர்களது மகன் அஸ்வின் (வயது 11).

    இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அஸ்வினுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அஸ்வினை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய் யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின் திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்து இருப்பதால் சிறுநீரகம் செயல் இழந்திருப்பதாக கூறி னார்கள். இதைத்தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது. இதை யடுத்து அஸ்வினின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வந்த அஸ்வின் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மூன்று டாக்டர்கள் கொண்ட குழு வினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய் யப்பட்டது. இதற்கு பிறகு அஸ்வினின் உடல் அவரது உறவினிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ஆனால் அவரது உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அஸ்வின் உடல் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக் கப்பட்டுள்ளது. அஸ்வின் மர்மமான முறையில் இறந்தது குறித்து களியாக்கா விளை போலீசார் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீ சாருக்கு மாற்றப்பட்டது.

    நாகர் கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசார ணையை இன்று தொடங்கி யுள்ளனர். டி.எஸ்.பி. சங்கர், சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை உட்பட அனைத்து தகவல்களையும் சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    முதற்கட்டமாக சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு நேரில் சென்று அவர்கள் இன்று விசாரணை மேற் கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரி யைகள் மாணவ-மாணவி களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் விசாரணை நடத்து கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மாணவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஆஸ்பத்திரி மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.மேலும் அஸ்வினின் பெற்றோரி டமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • “என் வீட்டில் பொருட்களை திருடியதால் கொன்றேன்” கைதான வாலிபர்கள் வாக்குமூலம்
    • சாமிதோப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கண்ணனை மது அருந்து வதற்கு வரும்படி சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள முள் புதருக்குள் வைத்து நானும் விக்னேசும் சேர்ந்து அவரை கொலை செய்து பிணத்தை அங்கேயே வீசிவிட்டு சென்று விட் டோம்.

    கன்னியாகுமரி, அக்.18-

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தை அடுத்த சுண்டன்பரப்பைச் சேர்ந்தவர் மாசாணம் என்ற கண்ணன் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற செல்வராணி. இவர்க ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மாசாணம் என்ற கண்ணன் கடந்த மாதம் 18-ந் தேதி "திடீர்"என்று மாயமானார். இது குறித்து அவரது மனைவி செல்வராணி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அப்போது மாசாணம் என்ற கண்ணனை கடைசியாக பாலன் என்ற பாலகிரு ஷ்ணன் (34) அதே ஊரை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோர் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து பாலன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி னர். முதலில் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதையடுத்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதாவது சம்பவத்தன்று மாசாணம் என்ற கண்ணன், பாலன் என்ற பால கிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித் துள்ளனர். கண்ண னுக்கும் பாலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் பாலன் மற்றும் விக்னேஷ் சேர்ந்து கண்ணனை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக தெரிகிறது.

    பின்னர் கண்ணனின் உடலை சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதையில் வீசிவிட்டு சென்று உள்ளனர். மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நேற்று ஊட்டுவாழ் மடம் செல்லும் பாதையில் சென்று பார்வை யிட்டனர்.

    எலும்பு கூடு

    அப்போது அங்கு ஒரு மனித எலும்புக்கூடு கிடந்தது. எலும்பு கூட்டின் அருகே ஒரு சட்டை கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி கண்ணனின் மனைவியிடம் காண்பித்தனர். அப்போது அது தனது கணவர் அணிந்தி ருந்த சட்டை தான் என்பதை அவர் உறுதிப்ப டுத்தினார். அத்துடன் சட்டையை கண்ட வுடன் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைத்தொடர்ந்து எலும்பு கூடாக கிடந்தது கண்ணனின் உடல் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் துண்டு துண்டாக கிடந்த எலும்புக்கூட்டை போலீ சார் கைப்பற்றி ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பாலன் என்ற பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேசை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பாலன் என்ற பாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    நான் சுண்டன்பரப்பில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரை சேர்ந்த கண்ணன் எனது மாமா ஆவார். இந்த உறவு முறையில் எங்கள் வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து செல்வார். இதற்கிடையில் எங்கள் வீட்டில் அடிக்கடி பேன், சிலிண்டர் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுகடை பாரில் மது அருந்திவிட்டு போதையில் எனது வீட்டில் பொருட் களைஅவர்தான் திருடிய தாக உளறினார். இது குறித்து நான் அவரிடம் கேட்டேன். அப்போது அவர் என்னை தரக்குறைவாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

    எனது நண்பரான சாமிதோப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து கண்ணனை மது அருந்து வதற்கு வரும்படி சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள முள் புதருக்குள் வைத்து நானும் விக்னேசும் சேர்ந்து அவரை கொலை செய்து பிணத்தை அங்கேயே வீசிவிட்டு சென்று விட் டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட பாலன், விக்னேஷ் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மாணவன் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
    • மாணவன் அஸ்வின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவன் குளிர்பானம் குடித்ததாக கூறப்படும் பள்ளியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது.
    • அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.18-

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சோபியா. இவர்களது மகன் அஸ்வின் (வயது 11).

    இவன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அஸ்வினுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அஸ்வின் சேர்க்கப்பட்டான்.

    அப்போது அவனை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின், ஆசிட் போன்ற ஏதோ திரவத்தை குடித்ததால் தான் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிறுநீரகம் செயலிழந்திருப்பதாகவும் கூறினர். இதையடுத்து சிறுவனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அப்போது அஸ்வின், பெற்றோரிடம் தேர்வு முடிந்து வீட்டுக்கு வரும்போது பள்ளி சீருடையில் வந்த மற்றொரு மாணவர் ஒருவர் தனக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க கூறியதாகவும், அதை குடித்ததாகவும் தெரிவித்தான்.

    அந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருக்கலாம் என்று அஸ்வினின் பெற்றோர் சந்தேகிக்கிறார்கள் .இது குறித்து அஸ்வின் தாயார் சோபியா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இந்த நிலையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை சந்தித்தும் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் உடல்நிலை மோசமான அஸ்வின் நேற்று மாலை பரிதாபமாக இறந்தான். இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.மாணவன் அஸ்வின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அஸ்வினின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை முழுவதையும் சி.சி.டி.வி. பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் தான் அஸ்வின் இறப்பிற்கான முழு விவரமும் தெரியவரும்.

    மேலும் அஸ்வினுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார் ? என்பது இன்னும் மர்மமாக உள்ளது .

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், மாணவன் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். மாணவன் அஸ்வின் இறப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவன் குளிர்பானம் குடித்ததாக கூறப்படும் பள்ளியில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளது. அந்த கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    ×