search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான்"

    • சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
    • சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் எடைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நகராட்சி வார சந்தை மற்றும் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை சந்தை தமிழகத்தின் 2-வது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விசாயிகள் ஆடுகள் அதிகளவு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இங்கு கால்நடைகள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாமக்கல், கரூர், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடு, கோழி, கன்று குட்டிகள் போன்ற கால்நடைகள் வாங்கி செல்கிறார்கள். மேலும் கர்நாடகா, கேரளா உள்பட வெளிமாநில வியாபாரிகளும் இந்த சந்தைக்கு வந்து கால்நடைகளை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று கால்நடை சந்தை வழக்கம் போல் கூடியது. நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் சந்தைக்கு விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் தமிழகத்தின் 2-வது பெரிய கால்நடை சந்தை என்பதால் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் சந்தையில் வழகத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் கால்நடைகளை வாங்கி சென்றனர். ராம்ஜான் வருவதால் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது.

    இந்த சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் எடைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் மூலம் நேற்று கூடிய சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
    • ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகளும், ஆடு, கோழிகளை வாங்குவோர்கள் அதிகளவில் திரளுவார்கள். இதனால் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்கப்பட்டது.

    நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஆட்டின் விலை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இன்று மட்டும் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்தது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ''ரம்ஜான் பண்டிகை காரணமாக இன்று நடந்த சந்தையில் ஆடுகள், கோழிகள் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது. பண்டிகை காரணமாக விலை அதிகமாகியுள்ளது. கடந்த 2 வார காலமாக இதே நிலை நீடிக்கிறது. ரம்ஜான் முடிந்த பின் விலை குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது ஆடுகளுக்கு அதிக தேவை இருந்தாலும் திருமங்கலம் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் கூடுகிறார்கள். தற்போதுள்ள ஆட்டுச்சந்தையில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றார்.

    • வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
    • செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம்.

    இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று வார சந்தையில் ஆட்டு சந்தை கூடியது. அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர்.

    மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.

    வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச்சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விலையும் சிறிது அதிகமாக இருந்ததாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும்.
    • பெரிய ஓட்டல்களில் ரம்ஜான் ஆர்டரை எடுப்பதற்காக தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடு விற்பனை களைகட்டி உள்ளது.

    ரம்ஜானையொட்டி சென்னையில் 40 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் ஆடுகள் வரையில் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டிறைச்சி வியாபாரிகள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் 30 ஆயிரம் ஆடுகள் வரையிலும் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆட்டு தொட்டிகளில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும் என்றும் தெரிவித்து உள்ளார்.

    ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும் என்றும் இது ரம்ஜானையொட்டி 50 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் பொதுமக்களுக்கு விற்பனை விலை ரூ.850 முதல் ரூ.900 வரையில் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே அசைவ ஓட்டல்களில் பிரியாணி ஆர்டரும் குவிந்து வருகிறது. பக்கெட் பிரியாணிக்கு பலர் ஆர்டர் கொடுத்து உள்ளனர். இதன் காரணமாக பெரிய ஓட்டல்களில் ரம்ஜான் ஆர்டரை எடுப்பதற்காக தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன. ரம்ஜான் பண்டிகை நாளான வருகிற 22-ந்தேதி சனிக்கிழமை 'கிருத்திகை' யாகும். இந்த நாளில் முருக பக்தர்களில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்க்க நினைப்பார்கள்.

    இதனால் தங்களது இந்து நண்பர்கள் பலருக்கு முஸ்லிம்கள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி தயார் செய்து கொடுக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

    • பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
    • அ.ம.மு.க. மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் சி.டி.சி. கார்னரில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அ.ம.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி 500-க்கும் மேற்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் ரம்ஜானை கொண்டாட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கஞ்சிக்கு அரிசி கொடுத்தது மட்டுமின்றி உலமாக்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் நிதியை அதிகப்படுத்தினார். ஹஜ் பயணிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கினார். பலருக்கு கனவாக இருக்கும் ஹஜ் பயணத்தை அனைவரும் செல்ல வேண்டும் என்பதற்காக முழு முதல் முயற்சியை எடுத்தவர் அவர். ஜாதி, மதம் பாராத அவரின் வழியில்தான் மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் செல்கிறார்.

    பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் என்று எந்த விழா வந்தாலும் அந்த விழாவில் மக்களை சந்தித்து மக்களோடு கொண்டாடுகிற இயக்கம் அ.ம.மு.க.மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி அ.ம.மு.க. டி.டி.வி. தினகரன் பெயரால் இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மக்களோடு மக்களாக இந்த சமுதாயத்தில் ஒரு குடும்பமாக இருக்கும் எங்களுக்கு என்றும் நீங்கள் ஆதரவை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட அவை தலைவர் பாலுசாமி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் ரவி, மாவட்ட பொருளாளர் முத்துக்குட்டி, பகுதி செயலாளர்கள் நெருப்பெரிச்சல் சுகம் வீரகந்தசாமி, ஜெகதீஷ், சிவக்குமார், ராஜாங்கம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம் சீமாட்டி குணசேகர், ஜெயலலிதா பேரவை ஆர்.வெங்கடேஷ், ஜெயலலிதா தொழிற்சங்க பேரவை பாலகிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் கொடை விழாவுக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும்.
    • ரம்ஜான் பண்டிகையில் செம்மறி ஆடுகள் தேவை அதிகம் இருக்கும்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளை யத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று ஆடு, கோழி, மாடு விற்பனை செய்யக்கூடிய சந்தை நடந்து வருகிறது.

    இங்கு நெல்லை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடுகளை விற்பனை செய்தும், வாங்கியும் செல்வார்கள்.

    இதனால் இந்த சந்தையில் விற்பனை மும்முரமாக நடைபெறும். வியாபாரிகள் கூட்டம் அலைமோதும். மேலும் சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் கோவில் கொடை விழாவுக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். இதேபோல் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும்.

    சந்தையில் குவிந்த ஆடுகள்

    இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை வருகிற சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது. இதையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்பு க்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆயிரக்க ணக்கான ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்து குவித்தனர்.

    ரம்ஜான் பண்டிகையில் செம்மறி ஆடுகள் தேவை அதிகம் இருக்கும் என்பதால், இன்று கூடுதல் செம்மறி ஆடுகள் சந்தைக்கு வந்திருந்தன. பாவூர்சத்திரம், ஆலங்குளம், ரெட்டியார்பட்டி, கடையம், அடைக்க லப்பட்டினம் பகுதியில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் மற்றும் குட்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்தனர்.

    செம்புகிடா

    ஆட்டுக்குட்டிகள் தலா ரூ.6 ஆயிரம் முதல் விற்பனையானது. சில குறிப்பிட்ட இன ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. அதே நேரத்தில் செம்புகிடா ஒன்று அதிகபட்சமாக ரூ.32 ஆயிரத்துக்கு விலைபோனது. ஆனாலும் விலையை பற்றி வியாபாரிகள் யோசிக்காமல் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    இன்று ஒரே நாளில் 4 ஆயிரம் டோக்கன்கள் மாநகராட்சி சார்பில் வாக னங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு டோக்கனுக்கு ரூ.50 வீதம் ரூ.2 லட்சம் மாநகராட்சிக்கு வசூலானது. சந்தையை ஒட்டியுள்ள நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர் பகுதியிலும் குவிந்த வியாபாரிகளால் கோழி விற்பனையும் களை கட்டியது.

    • தக்காளி, கேரட், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி என 160 டன் காய்கறிகள் விற்பனையானது.
    • புளி கொட்டையுடன் உள்ள கூடை 6 கிலோ முதல் 7 கிலோ வரை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போனது.

    எடப்பாடி:

    எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள வார சந்தையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று ஆடுகள் வரத்து அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் சந்தைக்கு வந்து இருந்தனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பகுதியில் இருந்து சுமார் 9000 ஆடுகள், பந்தய சேவல், 4000 கோழிகள் என விற்பனைக்கு வந்தன. 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5200 முதல் ரூ.5700 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.10,200 முதல் ரூ.11,600 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2500 முதல் ரூ.3000 வரையும் விலை போனது.

    அதேபோல், பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.400 வரையும், பந்தய சேவல், காகம்கீரி, செங்கருப்பு மயில், சுருளி ரகத்தைச் சேர்ந்த பந்தய சேவல்கள் ரூ.1000 முதல் ரூ.6500 வரையும் விலை போனது. அதேபோல் தக்காளி, கேரட், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி என 160 டன் காய்கறிகள் விற்பனையானது. புளி கொட்டையுடன் உள்ள கூடை 6 கிலோ முதல் 7 கிலோ வரை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போனது.

    சந்தையில் மொத்தம் ரூ.6.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கீழக்கரையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    வுமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரையில் நகர தலைவர் முபினா தலைமையில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி ஆகியோர் கலந்து கொண்டனர். வுமன் இந்தியா மூவ்மெண்ட் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் மற்றும் மாவட்ட செயலாளர் சித்தி நிஷா ஆகியோர் பேசினர். ஜகாங்கீர் அரூஷியின் பிரார்த்தனையோடு இப்தார் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கான ஏற்பாட்டை எஸ்.டி.பி.ஐ. கீழக்கரை நகர செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கீழக்கரை நகர துணைத் தலைவர் ரீகான் நன்றி கூறினார்.

    • ரம்ஜான் நோன்பை தொடங்கிய இஸ்லாமியர்கள் தொடங்கினர்.
    • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பு நோற்பது முக்கிய மானதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

    ரம்ஜான் மாதத்தில் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று (24-ந் தேதி) முதல் நோன்பு நோற்கும்படி இஸ்லாமிய மக்களுக்கும், அனைத்து பேஷ் இமாம்க ளுக்கும் மாவட்ட அரசு சலாஹூத்தீன் தகவல் தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்க ளிலும் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல்களிலும், அரபி மதராசக்களிலும் நடை பெற்றன.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமநாதபுரம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று முதல் நோன்பு விரதத்தை தொடங்கினர். அதிகாலை முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பின்பு மாலையில் தொழுகை செய்து பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி உட்கொண்டு விர தத்தை முடித்துக் கொள் வார்கள். இதே போல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு விரதத்தை இஸ்லா மியர்கள் கடைப்பிடிப்பார்கள்.

    தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ள நிலையில், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. #Ramadan #Eid
    சென்னை:

    தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

    இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் வருகிறது. எனினும், பிறை தெரிவதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
    பிறை இன்று தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். #Ramadan #Ramzan
    சென்னை:

    இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று பிறை தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் இன்று தெரிவித்துள்ளார்.
    ×