என் மலர்
நீங்கள் தேடியது "மது பாட்டில்கள்"
- மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
- தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் போதை பொருள் நட மாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையும் நடத்தி வரு கின்றனர்.
இதையொட்டி இரணியல் சப்- இன்ஸ் பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் காரங்காடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்த கூறிய போது நிற்காமல் சென்றார்.
அதனால் போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவரை விரட்டி சென்ற போது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அனுமதி இன்றி 69 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது
அதனை பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபரை தேடி வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.
- தற்போது 2 டன் மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் அமலில் உள்ளது. எனினும் சட்ட விரோதமாக சில இடங்களில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை கைப்பற்றும் போலீசார், கலால் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.
முன்பு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை உடைத்து குப்பையாக வீசப்பட்ட நிலையில், தற்போது புதிய முயற்சியாக அவற்றை கண்ணாடி வளையல்கள் தயாரிக்க கொடுக்கின்றனர். இதற்காக பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பின் மூலம் 150 பெண்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு கண்ணாடி வளையல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாட்னா மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தில் தனியாக ஒரு உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். இங்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் வளையல்கள் தயாரிக்க முடியும்.
தற்போது 2 டன் மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர். இவற்றை உள்ளூர் வியாபாரிகள் மூலம் பாட்னாவில் உள்ள விமான நிலையம் மற்றும் கண்காட்சிகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.
இதுகுறித்து கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்க உறுப்பினரான சுதா தேவி கூறுகையில், இந்த புதிய முயற்சியால் நல்ல லாபம் ஈட்டுகிறோம் என்றார். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது என கலால் துறை ஆணையர் தன்ஜி கூறினார்.
- தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜபிரபுக்கு தகவல் கிடைத்தது.
- சிவக்குமாரிடம் இருந்து 87 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடு படக்கூடிய நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை யில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜ பிரபுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு மதுபாட்டில் களை விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்(வயது 52) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 87 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி வடபகம் போலீஸ் சரக பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
- மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த மருங்குளம் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தஞ்சை அடுத்த ராவுசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 26) என்பதும், மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 441 மது பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கினர்
வேலூர்:
வேலூரில் நேற்று தொழிலாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் தனியார் பார்களில் மது விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தடையை மீறி மாவட்டம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தினர்.
தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 441 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பலவேசம் காலங்கரையில் உள்ள பாலம் அருகே மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார்.
- சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
செங்கோட்டை
செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை சட்ட நாதன் தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 44).
இவர் காலங்கரையில் உள்ள பாலம் அருகே மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர் அருகே அய்யாபுரத்தை அடுத்த கீழே சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36), சங்கரன்கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன்.
இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்ட விரோ தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து அய்யாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் அருகே டி.ராமநாதபுரத்தில் செம்புலிங்கம் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி என்பவர் மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்த மூக்காண்டி (60) என்பவர் சங்கரன்கோவில்- சுரண்டை சாலையில் தனியார் பள்ளி அருகே மது விற்றுக் கொண்டிருந்தார்.
அவரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது
- தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சாராயம் காயச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் பற்றிய தகவல் அளிக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் புதியதாக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாராயம் காய்ச்சுதல், ஊறல்கள் போடுதல், போலி மதுபானம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மது விற் பனை மற்றும் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தகவல்களை 9498188755, 86376 61845 எண்களில் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
- மேலும் ஒரு இடத்தில் 2 கிலோ குட்கா புகையிலை, மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை அமைக் கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் முப்பந்தல் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த 187 கிலோ குட்கா புகையிலையையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 2 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தபோது ராஜஸ்தான் ஜோலார் பகுதியை சேர்ந்த லஷ்மன் குமார் (வயது 27), மகேந்திர குமார் (27) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் பெங்களூரை சேர்ந்த தீபா ராம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் கல்லடிமா மூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்த போது 2 கிலோ குட்கா புகையிலை, மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.
இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்த னர். பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது செருப்பாலூர், கல்லடி மாமுடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பது தெரியவந்தது. போலீ சார் அவரை கைது செய்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
- பள்ளம் தோண்டி மறைத்து வைத்து விற்பனை செய்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே அடசல் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை என்கிர ஏகாம்பரம் (வயது 35). இவர் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து தனது வீட்டின் பின்புறம் உள்ள காலிமனையில் பள்ளம் தோண்டி பூமிக்கு அடியில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதில் ஏகாம்பரம் வீட்டின் பின்புறம் உள்ள காலி மனையில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே போலீசார் பள்ளம் தோண்டி மறைத்து வைத்து விற்பனை செய்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இதற்கு காரணமான ஏகாம்பரத்தை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஏகாம்பரத்தை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மது பாட்டில்கள் பறிமுதல்
இந்த நிலையில் ஏற்காடு பிலியூர் கிராமத்தில் சந்துகடை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கமுத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
எச்சரிக்கை
இதுகுறித்து ரூரல் டி.எஸ்.பி அமலா ஆட்வின் கூறியதாவது:-
ஏற்காட்டில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
லாட்டரி, மது, கஞ்சா, ஆகியவை விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். எனவே ஏற்காட்டில் யாரும் குற்றச் செயல்களில் ஈடுபட கூடாது.
குற்றச் செயல்கள் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு நடந்தாலும் எனது செல்போன் எண். 8300127780 -க்கு தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
புதுவை மாநி லத்தில் இருந்து உளுந்தூர் பேட்டைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை கலால் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் ஒரு பையுடன் பஸ்சில் இருந்து இறங்கினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மகளிர் போலீசாரை வைத்து விசாரணை நடத்தி, அவரை சோதனையிட்டனர்.
இதில் அவர் எடுத்த வந்த பையில் புதுவை மாநிலத்தில் வாங்கப்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது. மேலும், பெண் அணிந்திருந்த ஆடைக்குள்ளும் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தார். விசார ணையில் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த மச்சக்காளி என்கிற நம்பிக்கைமேரி (வயது 48), என்பதும், புதுவை மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த உளுந்தூர்பேட்டை கலால் போலீசார், அவரிடமிருந்து 120 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 30 மது பாட்டில்கள் பறிமுதல்
- இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் களியக்காவிளை போலீசார், படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 30 மது பாட்டில் இருந்தது தெரியவந்தது. படந்தாலுமூடு, குழித்துறை பகுதிகளில் அவர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கணேசன், குழித்துறையை சேர்ந்த ஜீவன் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்