search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • புல்லுக்காட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • ரூ.3,100 ரொக்க பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோவை

    கோவை தெற்கு உக்கடம் அருகே உள்ள புல்லுக்காட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பெரியக்கடை வீதி சப்-இன்ஸ்பெக்டர்கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்த காய்கறி வியாபாரி நவுபல் ரகுமான் (வயது 20), சி.எம்.சி. காலனியை சேர்ந்த சூர்யா (18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சா, ரூ.3,100 ரொக்க பணம், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • போலீசார் தீவிர பரிசோதனை
    • போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வ சிங் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வழுக்கம்பாறை சுடுகாடு பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் நிற்பதைப் பார்த்தார். அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா கடத்துவதும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த அவர்களது பெயர் கார்த்திக் (வயது 20), விவேக் (20), அருண் (22), பிரதின் (22), முத்து (20), சதீஷ் (20) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    • கஞ்சா வியாபாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்
    • குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 15-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர்‌ . இரணியல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஸ் (வயது 24) கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சகாய கவின் (24) இவர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டச்சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரதீஸ், சகாய கவின் இருவ ரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

    • சேலம் ஜாகீர் அம்மா பாளையம் ஜீவா நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா போலீசாரிடம் சிக்கியது.

       சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மா பாளையம் ஜீவா நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சூரமங்கலம் போலீ சார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா போலீசாரிடம் சிக்கியது. போலீசார் நடத்திய விசாரைணயில் அந்த கஞ்சாவை அங்கு பதுக்கி வைத்து பொது மக்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடை வியாபாரியான பாஸ்கரன் 48 என்பவரையும் கைது செய்தனர்.

    • மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • விற்பனைக்காக வைத்துஇருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு புதிதாக நான்கு வழி சாலை பணி நடைபெறும் ஒதுக்குப்புறத்தில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த வாலிபரின் பெயர் ஸ்ரீனிவாசன் (வயது 24) என்பதும், கன்னியாகுமரி அருகே உள்ள மாதவரபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் விற்பனைக்காக வைத்துஇருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரையில் கஞ்சா விற்பனையில் சிறுவர்களும் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். செல்லூர் காந்தி பொட்டல் அருகே 4 பேர் கும்பல் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

    அங்கு பதுங்கி இருந்த 4 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் செல்லூர், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (25), சுயராஜ்யபுரம் தெரு ராஜேந்திரன் மகன் சஞ்சீவ்குமார் (24), கீழத்தோப்பு தங்கம் மகன் வேலாயுதம் (21), கே.வி.சாலை, பாரதிதாசன் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. 4 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.அதே போல மதிச்சியம், செனாய் நகர், ஜெகஜீவன் ராம் தெருவில் 18 வயது சிறுவன் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டான். வைகை வடகரை தியேட்டர் அருகில் கஞ்சா வைத்திருந்த ஆசாரி தோப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் பிடிபட்டான். மதிச்சியம் ஆர்.ஆர். மண்டபம், டீக்கடை அருகே கஞ்சா விற்ற, மேளக்கார தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாநகரில் நேற்று மட்டும் 4 சிறுவர்கள் உள்பட 7 பேரை கஞ்சா விற்றதாக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
    • கடந்த சில நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இருப்பினும் கஞ்சா புழக்கத்தில் இருந்து வரு கிறது.

    இதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்கு குறிப்பாக ஆந்திராவில் இருந்து அதிக அளவு கஞ்சா பொருட்கள் புழக்கத்தில் வருவது போலீ சார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள்.கடந்த சில நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைத்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு இதுவரை 58 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கஞ்சா வியா பாரிகள் ஆவர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 கஞ்சா வியாபாரி கள் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர்.

    நாகர்கோவில் வடசேரி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த மணி (வயது25), நாகர்கோவில் தெற்கு சூரங்குடியை சேர்ந்த அரவிந்த் பிரியன் (23), வடசேரி அருகுவிளையை சேர்ந்த சிவக்குமார் (21) ஆகிய 3 பேரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இதில் சிவக்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்கு கள் உள்ளது. எனவே 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் அரவிந்த் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணி,அரவிந்த் பிரியன்,சிவக்குமார் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளைய ங்கோட்டை ஜெயி லில் அடைக்கப்பட்டனர்.

    இதுவரை இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து உள்ளது.

    • மதுரை அருகே கஞ்சா விற்ற மூதாட்டி-வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    • 90 கிராம், 1.300 கிலோ கஞ்சாவுடன் அவர்கள் பிடிபட்டனர்.

    மதுரை

    மதுரை-அருப்புக்கோட்டை மெயின் ரோடு, சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் மூதாட்டி கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது டீக்கடை பின்புறம் மூதாட்டி, 90 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் பச்சைமால் மனைவி மூக்கம்மாள் (வயது 75) என்பது தெரிய வந்தது. அவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

    தத்தனேரி சுடுகாட்டு காளியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக செல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

    அங்கு 1.300 கிலோ கஞ்சாவுடன் செல்லூர் ஜீவா நகர், தங்கமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாம்புகட்டை கணேசன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    • விசாரணையில் ஆறுகாணி பகுதியை சேர்ந்த அசின் கான் (வயது 28) என்பவர் தான் கஞ்சா கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
    • 50 கிராம் கஞ்சா மற்றும் புகைப்பதற்கு வேண்டிய குழாய்களும் பறி முதல் செய்யப்பட்டன.

    கன்னியாகுமரி :

    குலசேகரத்தில் கஞ்சா விற்றதாக மோனிஷ் என்ப வரை போலீசார் கைது செய்து, நாகர்கோவில் சிறை யில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசார ணையில் ஆறுகாணி பகுதியை சேர்ந்த அசின் கான் (வயது 28) என்பவர் தான் கஞ்சா கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.

    அதன் அடிப்படையில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ் பாபு மற்றும் போலீசார், அசின் கானை தேடி வந்த னர். அவரை நேற்று போலீ சார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் புகைப்பதற்கு வேண்டிய குழாய்களும் பறி முதல் செய்யப்பட்டன.

    அவருக்கு வேறு எங்கி ருந்து கஞ்சா வருகிறது? யார்-யாருடன் தொடர்பு உள்ளது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அசின்கான் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மோட்டார் சைக்கிள் - செல்போன்கள் பறிமுதல்
    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, புகையிலை நடமாட்டத்தை கண்காணிக்க 7 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இதை யடுத்து தற்பொழுது கஞ்சா விற்பனை சற்று கட்டுக்குள் இருந்து வருகிறது.

    இருப்பினும் வெளி மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக கொண்டு வரப்பட்டு கஞ்சாவை விற்பனை செய்து வருகிறார்கள். குறிப்பாக ஆந்திராவில் இருந்து அதிக அளவில் கஞ்சா புழக்கத்தில் கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்தவும் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் வெட்டூர்ணி மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களிடம் விசா ரணை நடத்திய போது, வாத்தியார் விளையை சேர்ந்த அஜீத், பெரு விளையை சேர்ந்த செல்வன் என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.இவர்கள் பரமார்த்தலிங்க புரத்தைச் சேர்ந்த ஜெரீஸ் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.அஜித், செல்வன்,ஜெரீஸ் ஆகியோர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அஜித் மீது ஏற்கனவே இரணியல், நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதே போல் செல்வன் மீதும் இரணியல் மற்றும் வடசேரி போலீசில் வழக்கு கள் உள்ளது. தலைமறை வாக உள்ள ஜெரீசை பிடித்தால் தான் கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்ற விவரம் தெரியவரும். எனவே அவரை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பொற்றேல்கானத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் அனி (26). இவர் மேல்புறம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அனியை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அந்தப் பையில் சின்னச்சின்ன பொட்ட லங்களாக 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனியை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    • 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி குழுமிக்கரை கல்லாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையான போலீசார் கல்லாங்காடு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 26), கோபி ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து தினேஷ்குமாரைகைது செய்தனர். தப்பி ஓடிய கோபியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • குமரி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து தான் அதிக அளவு கஞ்சா விற்பனைக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்ப னையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள். கஞ்சா விற்பனை தொடர் பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் ஹெல்ப் லைன் செயல்படு கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

    7010363173 என்ற எண் ணுக்கு பொதுமக்கள் நேரடி யாகவும் போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கள் மற்றும் கல்லூரி களிலும் இந்த ஹெல்ப் லைன் எண்ணை கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மாணவ- மாணவி கள் இந்த தொலை பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். போலீசார் உடனடி நடவடிக்கை மேற் கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா விற்பனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டு இதுவரை 891 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 516 பணம், 27 வாக னங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கை பொருத்தமட்டில் இதுவரை 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 287 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    144 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 97 பேரின் வங்கி கணக்குகள் முடக் கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட் டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கஞ்சா வியாபாரிகள்ஆகும். குமரி மாவட்டத்தில் தற்போது கஞ்சா விற்பனை குறைந் துள்ளதால் அதன் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து தான் அதிக அளவு கஞ்சா விற்பனைக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    அதை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சாவை கண்காணிக்க 4 சப்-டிவிஷன்களிலும் 7 தனிப் படை அமைக்கப்பட்டு நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. கஞ்சா விற்ப னையை தடுக்க மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×