search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஆலப்புழா -எக்ஸ்பிரஸ் ரெயிலில் (13351) சேலம் ரெயில்வே போலீசார் தங்கராஜ், அசோகன், கவியரசன், ஸ்ரீநாத் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை பொம்மிடி ரெயில் நிலையத்திற்கும் சேலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே நடந்தது. முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டியில் சோதனை நடத்திய போது பெரிய பேக் ஒன்று அனாதையாக கிடந்தது.

    இதையடுத்து போலீசார் அந்தப் பெட்டியில் இருந்த சக பயணிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பேக் யாருடையது என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி வளர்ந்து இருப்பது தெரியவந்தது.
    • வினோத் வேறு எங்காவது கஞ்சா செடி வளர்த்து உள்ளாரா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 34), இவரது வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி வளர்ந்து இருப்பது தெரியவந்தது. முட்புதரில் வளர்ந்து இருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்து வினோத்தை கைது செய்தனர்.

    அவர் போதைக்காக கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்த்து வந்தது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் வேறு எங்காவது கஞ்சா செடி வளர்த்து உள்ளாரா? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்றிரவு அடைக்காகுழி பகுதியில் ரோந்து
    • கடையில் பதுக்கி வைத்திருந்த 130 பாக்கெட் குட்கா மற்றும் ரூ. 3600 ஐ பறிமுதல்

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்றிரவு அடைக்காகுழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது சாத்தனார் வட்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர்.

    சோதனையில் அங்கு குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைத்திருந்த 130 பாக்கெட் குட்கா மற்றும் ரூ. 3600 ஐ பறிமுதல் செய்த போலீசார் ஏசுதாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்திய போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம், மேட்டூர், கோவிந்தபாடியை சேர்ந்த தன்ராஜ்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை போலீசார் நடத்திய சோதனையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த சுப்பிரமணியம் (52) என்பவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • சேலம் வழியாக சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சாவுடன் கேரள வாலிபர் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே சிறப்பு பிரிவு போலீசார் முத்துவேல், தமிழ்செல்வன், ஸ்ரீநாத் ஆகியோர் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாட்னா-எர்ணாகுளம் ரெயிலில் எஸ்-10 பெட்டியில் கறுப்புநிற பையில் 5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் விஜயவாடா ரெயில் நிலையத்தில் ஏறிய பாலக்காடு மண்ணலூரை சேர்ந்த மாணிக்கம் மகன் பிரமோது(22) என்பவர் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, புகையிலை மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றி சம்மந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொண்டதில் வெள்ளகோவில் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் பகுதியில் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மதுரையில் 1.250 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது கணவன்-மனைவி தப்பி ஓடி விட்டனர்.
    • பதுங்கி இருந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. போலீசார் அவர்களில் 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மதுரை

    மதுரை ஆனையூர், இந்திரா நகரில் கணவன்- மனைவி உள்பட 4 பேர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் வசந்தா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார்கள்.

    அங்கு பதுங்கி இருந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது. போலீசார் அவர்களில் 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் 1.250 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஆணையூர், கருப்பசாமி நகரை சேர்ந்த முருகன் (59), உசிலம்பட்டியை அடுத்த கீழப்பட்டி ராஜா (28) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

    அப்போது செல்லூர் கீழத்தோப்பு தங்கபாண்டி, அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோருக்கு கஞ்சா விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கஞ்சா விற்ற முருகன், ராஜாவை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய தங்கபாண்டி- மகாலட்சுமி தம்பதியை தேடி வருகின்றனர்.

    வைகை தென்கரை, சோனை முத்தையா கோவில் எதிரே, வாலிபர் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி கஞ்சா விற்ற மேலூரையடுத்த செம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த மலைவீரன் மகன் நவீன் குமார் (20) என்பவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

    • 2 பேரும் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பொட்டலமாக விற்று வந்துள்ளனர்.
    • தினமும் காலை-மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிறிய பொட்டலமாக கஞ்சாவை பார்சல் செய்து பள்ளி-கல்லூரிகள் முன்பு நின்று மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.
    • ஏற்கனவே தகவல் தெரிந்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்த நிலையில் தான் தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளனர்.

    திருவட்டார், ஜூன்.30-

    திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் வேர்கிளம்பி பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகமாக இரு சக்கர வாகனம் வந்தது. அந்த வாகனத்தை போலீ சார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தை சோதனை செய்த போது 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்ப ட்டது.

    உடனே வாகனத்தில் வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருவட்டார் அருகே நாராயணத்து விளை பகுதியை சேர்ந்த ஆல்பி என்ற ஆல்வின் சாமுவேல் (வயது29), முள விளை வியனூர் பகுதியை சேர்ந்த பிரதீஷ் (28) என தெரியவந்தது.

    இவர்கள் 2 பேரும் தங்கள் செல்போனில் வாட்ஸ்ஆப் குரூப் தொடங்கி அந்த பகுதியில் உள்ள பள்ளி-கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து அவர்களிடம் நைசாக பேசி கஞ்சா விற்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

    2 பேரும் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறிய பொட்டலமாக விற்று வந்துள்ளனர். இவர்களது பண பரிவரித்தனைகள் அனைத்தும் ஜி. பே. மூலம் நடைபெற்றுள்ளது.

    தினமும் காலை-மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிறிய பொட்டலமாக கஞ்சாவை பார்சல் செய்து பள்ளி-கல்லூரிகள் முன்பு நின்று மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.

    இது பற்றி ஏற்கனவே தகவல் தெரிந்த போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் தேடி வந்த நிலையில் தான் தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளனர். கைதானஆல்பி என்ற ஆல்வின் சாமுவேல் தனியார் நிறுவனத்தில் லோன் வசூலிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

    பிரதீஷ், தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    • சித்தோட்டில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    சித்தோடு:

    சித்தோடு மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் பவானி அடுத்த லட்சுமி நகர் கோண வாய்க்கால் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை பாலிதீன் கவரில் வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த ராஜா (28), சித்தோடு கொங்கம்பாளையம் முரு கேசன் (34), சித்தோடு சொட்டையம்பாளையம் வெங்கடேஷ் (44) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்க ளிடம் இருந்து 4.100 கிராம் கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் கஞ்சா விற்பனையில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி–பாளையம் அருகே உள்ள கடத்தூர், காசிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது காசிபாளை யம் பஸ் நிறுத்தம் பகுதியில் 2 பேர் பையுடன் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீ சார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிங்கிரி பாளையத்தை சேர்ந்த திலீப்குமார் (19), மாக்கணாங் கோம்பை பகுதியை சேர்ந்த விஜய் (21) எனவும், கஞ்சா விற்பனை கொண்டு சென்ற தும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
    • வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி போலீசார் அறுகுவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சுயம்பு லிங்கம் என்ற கட்டலிங்கம் (வயது 45) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான சுயம்பு லிங்கம் மீது கஞ்சா வழக்கு உள்பட மொத்தம் 18 வழக்குகள் உள்ளன.

    • சேலம் வழியாக சென்ற ரெயிலில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒடிசாவை சேர்ந்தவர்கள் 2 பேர் கைது செய்தனர்.
    • கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அசோகன், சக்திவேல், ஸ்ரீநாத் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது எஸ்.7 பெட்டி கழிவறை அருகே கிடந்த பேக்கில் 9 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த பையை ஒடிசாவை சேர்ந்த கவுங்கா மாலிக் (வயது 22), ராணா (22 ஆகியோர் கொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் திருப்பூரில் உள்ள செங்கப்பள்ளி என்ற ஊரில் தனியார் குளிர்பான கம்பெனியில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருவதாகவும் கடந்த 21- தேதி திருப்பூரிலிருந்து ஊருக்கு சென்று விட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று அருகில் உள்ள கெந்தகூடா என்ற ஊரில் 1 கிலோ கஞ்சா ரூ.3,500 என்ற விலையில் சுமார் 9 கிலோ வாங்கியதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் பாலாங்கீர் என்ற ஊரில் இருந்து திருப்பூருக்கு சென்று தாங்களே சிறு சிறு பொட்டலமாக கட்டி 200-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×