search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கலை தடுக்க 98 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணித்து கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பாற்வையில் இன்ஸ்பெக்டர்கள், தலைமையில் 37 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் கஞ்சா சம்மந்தமான சோதனை நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. கடலூர் உட்கோட்ட காவல் அதிகாரிகள் திருப்பாதிரிபுலியூர் , குப்பங்குளம் , சாலக்கரை , தூக்கணாம்பாக்கம் , கடலூர் பெண்ணையாறு கரையோரம் , சுண்ணாம்புகார தெரு . புதுப்பாளையம் , ரயில் நிலையம் , தைக்கால் ஆகிய இடங்களில் சோதணை மேற்கொள்ளப்பட்டது . சிதம்பரம் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் , புதுச்சத்திரம் ரயில்வேகேட் , வில்லியனூர் பண்ருட்டி காடாம்புலியூர் , பெரியகாட்டுசாகை , மாளிகம்பட்டு . ஆண்டிக்குப்பம் , நெல்லிக்குப்பம் , பி.என். பாளையம் , நெல்லிகுப்பம் , மேல்பட்டாம்பாக்கம் . நடுவீரப்பட்டு பேருந்து நிலையம் , சி.என்.பாளையம் , பாலூர், விருத்தாச்சலம் பாலக்கரை , பெண்ணாடம் , ரயில்வே ஜங்ஷன் , பழையபட்டினம் கீரனூர் , சோழன் நகர், சேத்தியாத்தோப்பு கீழ்புளியங்குடி , சந்தைதோப்பு , லால்பேட்டை , கோட்டைமேடு , அய்யன்குடி , திட்டக்குடி பேருந்துநிலையம் , ஆவினங்குடி , சிறுமங்கலம் , ராமநத்தம், , நல்லூர் , சிறுபாக்கம் , மங்களுர் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் சோதனையின்போது கஞ்சா எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    • போலீசார் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இளம்பெண் உள்பட 2 பேர் கைது
    • கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்ப தாக தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்-டிவிச னுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா வியாபாரிகள் 59 பேரின் வங்கிக் கணக்கு களும் முடக்கப்பட்டு உள்ளது.

    போலீசார் கஞ்சா விற்பனையை கண்காணித்து வருகிறார்கள். மார்த் தாண்டம் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டபோது அங்கு சந்தே கப்படும் படியாக நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

    அப்போது அவரது கையில் இருந்த பேக்கை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து அந்த வாலிபரையும் இளம்பெண்ணையும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13½ கிலோ கஞ்சா மற்றும் ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் கண்ணனூர் பூந்தோப்பை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 25), சென்னை பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த அஜந்தா (38) என்பதும் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் கஞ்சா பொட்டலங்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள். இங்கு யாரிடம் சப்ளை செய்ய கொண்டு வந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

    கஞ்சா பதுக்கிய வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்ப தாக தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்யவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்ட போது அதிவேகமாக 2 இருசக்கர வாகணத்தில் 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனால் வாகனத்தை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குலசேகரம் நாகக்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), பிரவின் (23),வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என தெரிய வந்தது.

    இதில் ஆகாஷ், பிரவின் மீது ஏற்கனவே தக்கலை காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் உள்ளன. எங்கு இருந்து கஞ்சா வருகிறது? யார் மூலம் சப்ளை செய்து வருகிறார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையின்போது சுமார் 2 லட்சம் மதிப்பிலான 18 கிலோ கஞ்சா சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    கேரள மாநிலம் ஆலபுழா பகுதிக்கு செல்லும் மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சேலம் ஜங்சன்ரெயில் நிலைய ஆர்.பி.எப்.போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ஆர்.பி.எப்.போலீசார், மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகைக்காக ஜங்சன் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயிலில் இருந்து மர்மநபர்கள் யாராவது கஞ்சாவுடன் ஓடினால் அவர்களை பிடிக்க வேண்டி நடைமேடை மற்றும் நுழைவு வாயில், 5 பிளாட் பாரங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    காலை சுமார் 8.15 மணிக்கு மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்சன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து போலீசார் ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று 2 பைகள் கிடந்தன. இந்த பைகள் யாருடையது? என அக்கம், பக்கத்தல் இருந்தவர்களிடம் போலீசார் கேட்டனர். அவர்கள் தங்களுக்கு சொந்தமான பைகள் இல்லை. இது யாருடைய பைகள் என்றும் எங்களுக்கு தெரியாது என்று கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கேட்பாரற்று கிடந்த 2 பைகளையும் திறந்து பார்த்தனர். அதில் 9 பார்சல்களில் 18 கிலோ கஞ்சா இருந்தது. ஒவ்வொரு பார்சலிலும் தலா 2 கிலோ வீதம் 18 கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் போலீசார் 18 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த கஞ்சாவை கொண்டு வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க மும்பையில் இருந்து சேலம் வரையிலான ரெயில் நிலையங்களில் பதிவான சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ×