search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதக்குடி, சித்தாம்பூர், அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் கூத்தாநல்லூர், கோரையாறு, பொதக்குடி, சித்தாம்பூர், வாழச்சேரி, லெட்சுமாங்குடி, அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அதங்குடி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் இருவரும் அதங்குடி, சறுக்கக்கரை தெருவைச் சேர்ந்த விஜய், தமிழரசன் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜய், தமிழரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

    • ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.
    • முருகேசன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    ராஜகோபால் நகர் பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார். அவரை விரட்டி சென்று பிடித்து சோதனை செய்தபோது அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன்(வயது 45) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், அவரது இருசக்கிர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி தென்பாகம் பகுதியில் போலீசார் தீவிரரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது இந்திரா நகரை சேர்ந்த லில்லி (32)ரங்கநாதபுரம் மாரி என்ற மாரியப்பன் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 650 கிராம் கஞ்சா, ரூ.8,630-ஐ பறிமுதல் செய்தனர்.

    • அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
    • டிராவல்ஸ் பஸ்சிலிருந்து இறங்கிய ஒரு பயணியை பிடித்து விசாரித்தனர்.

    அவினாசி :

    அவினாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் போலீசார் அவினாசியை அடுத்து அவினாசிலி ங்கம்பாளையம் பிரிவு அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் விஜய வாடாவிலிருந்து கோவை நோக்கி வந்த டிராவல்ஸ் பஸ்சிலிருந்து இறங்கிய ஒரு பயணியை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் சுருளிமுத்து(28) என்பதும் அவர் கொண்டுவந்த பையில 10 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்ப்ப டுத்தினர். பின்னர் சிறை யில் அடைத்தனர்.

    • பூச்செடி என்று நினைத்து கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இளைஞர்களை குறி வைத்து சர்வ சாதார ணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலமடை அருகே எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிவகுமார் என்பவர் வீட்டில் பூச்செடி களுக்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவகுமாரின் மகன் கார்த்திக் சில வாரங்களுக்கு முன்பு தேனியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பூச்செடி விதைகள் எனக்கூறி சிலவற்றை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

    அதனை பூ விதை என தவறுதலாக நினைத்து தொட்டியில் வைத்து கஞ்சா செடியை கார்த்திக் வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக கார்த்திக் கைது செய்யப்பட்டார்.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோதிகள் பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து சர்வ சாதார ணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவினாசி :

    அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு பல்லடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மதுவிலக்கு போலீசார் பல்லடம் அருள்புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும் படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜெகபந்து தாஸ் (வயது34) என்பதும் அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்ட லங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அதன் அடிப்படை யில் சிவகாசி, விருதுநகர் உள்ளட்ட பல்வேறு பகுதி களில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கிருஷ்ணன்கோவில் போலீசார் சம்பவத்தன்று செம்பட்டையான்கால் சமத்துவபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த கார்த்திக்ராஜா (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 140 கிராம் கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்பு டைய எம்.புதுப்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர் தர்காஸ் தெருவில் மேற்கு போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற வீரபத்தி ரன் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22),பெரிய

    கொல்லப்பட்டியை சேர்ந்த காட்டுவா மைதீன், கலைஞர் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (20), மாரீஸ்வரன் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்ட லங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    • பவானி நகர் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.
    • ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பவானி நகர் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது பிள்ளையார் கோவில் அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதனையடுத்து அவரிடம் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

    மேலும் அவர் திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த பனியன் தொழிலாளியான ஜெயக்குமார் (வயது 30) என்பதும் வாலிபர்களுக்கு மோட்டார் சைக்கிளில் வீடு தேடி சென்று கஞ்சா சப்ளை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சாவை கடத்திச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ராமேசுரம் கடற்கரையில் கஞ்சா பார்சல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக சமூக விரோதிகள் கஞ்சா, தங்கம் உள்ளிட்டவற்றை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க கடலோர காவல் படை போலீசார் கடற்கரைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ராமேசுவரம் கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பார்சலை கைப்பற்றினர்.

    அதை பிரித்துபார்த்த போது 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது பல லட்சம் மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமேசுவரத்தில் இருந்து மர்ம நபர்கள் இலங்கைக்கு படகில் கடத்திச்சென்ற போது போலீசாரை கண்டதும் கஞ்சா பார்சலை வீசிச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கஞ்சாவை கடத்திச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுரம் கடற்கரையில் கஞ்சா பார்சல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
    • தனியார் கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம்சதீஷ்(வயது28) தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது. இது குறித்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்யும்படி, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காரைக்காலில் உள்ள ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரிகள், சில்லறை கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்தாலும், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்யும் நபர்களை பிடிக்கவில்லை.

    இந்நிலையில், காரைக்காலில் உள்ள பல சில்லறை நபர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபராக, நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது28) என்பவரை காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சதீஷ்க்கு, அவரது சித்தப்பா சுரேஷ்(48) என்பவர் கஞ்சா வழங்கிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரைக்கால் சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார், கம்பம் விரைந்து சென்று, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 1300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர். இருவரும் தமிழகம் மற்றும் காரைக்காலைச்சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தாழையூத்து அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.43,390, கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல தங்கம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தாழையூத்து அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்று பார்த்த போது ராஜவல்லிபுரம், வடக்குத் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 20), தாழையூத்து, காமராஜர் நகரை சேர்ந்த பாஸ்கர் (20) ஆகியோர் மேல்நிலைப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை சோதனை செய்த போது இருவரும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சி.என்.கிராமம், மேலத்தெருவை சேர்ந்த பூல்பாண்டி(21), தாழையூத்து, விஷ்வகர்மாநகரை சேர்ந்த ஆறுமுகம் (19), பேட்டை, அன்னதான விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (19) ஆகிய 3 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை பிடித்து சோதனை செய்த போது அவர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.43,390 மற்றும் 340 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் (வயது 28) என்பதும் அவர் தற்போது பச்சாம்பாளையத்தில் தங்கி தேவம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • திரு.பட்டினம் பட்டினச்சேரி ரயில் பாதை அருகே, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திரு. பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
    • அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்,

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்ததுஇ.தற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×