search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • விஜயசென் (வயது 22), அவரது நண்பர்பைசல் ரஹ்மான் (19) கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸாருக்கு தகவல் வந்தது,
    • 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர் நகருக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சேர்ந்த விஜயசென் (வயது 22), அவரது நண்பர் அம்மன் கோவில்பத்து, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பைசல் ரஹ்மான் (19) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • அவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு உள்ளது.
    • இந்த ஆண்டு இதுவரை ரெயிலில் 52 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று திருச்சி இருப்பு பாதை ரெயில்வே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    திருச்சி ரெயில்வே மாவட்ட இருப்பு பாதைக்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா, டி.ஐ.ஜி. டாக்டர் விஜயகுமார் ஆகியோர் உத்தரவுப்படி எனது மேற்பார்வையில் மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் உட்பட 30 போலீசார் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் , பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த அனீஸ் (வயது 27) என்பதும், அவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து குற்றவாளி அனீசை கைது செய்தோம்.

    மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகள் மற்றும் குழந்தைகளிடம் யாரேனும் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டாலோ அல்லது ரெயில்வே பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். திருச்சி இருப்பு பாதை காவல் மாவட்டத்தில் உள்ள தனிப்படையினர் தமிழ்நாட்டில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு விரைவு ரெயில்களான பகத்கிகோதி, பாட்னா- எர்ணாகுளம், தன்பாத், ஹெவுரா -திருவனந்தபுரம், ஹெவுரா- ஆலப்புழா மற்றும் எஸ்வந்த்பூர் ரெயில்களில் இன்று சோதனை நடத்தினோம். அதில் எஸ்வந்த்பூர் ரயிலில் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். இந்த ஆண்டு இதுவரை ரெயிலில் 52 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. ரெயிலில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்தி சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நாகையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகூர் ஜடையினா ஹாஜியார் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் முகமது இத்ரீஸ் (வயது29), கண்ணன் (27), சமீர் (19), ஹஜ்புதீன் (21), முகமது சைபு (19) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து நாகூர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ.2 லட்சத்தது 10 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காட்பாடி முதல் சேலம் வரை சோதனை செய்தனர்.

    அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த பேக்கில் 4 பண்டல்களில் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதை ரெயிலில் கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஞ்சா விற்றவரை கைது செய்து போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் சேலம் பைபாஸ் சாலை மண்மங்கலம் சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை யடுத்து, அங்கு சென்று மதுவிலக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசா ரணையில், ஆண்டா ங்கோயில் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 27) என்பவர். அந்த பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.இதனையடுத்து, சரவணக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ. 11ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சுபாசை, போலீசார் சோதனை செய்தனர்.
    • சுபாசிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே தனிப்பிரிவு காவலர்கள் மஜித், வேலாயுதம் ஆகியோர் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அந்த வாலிபர் மேலகடையநல்லூர் மலம்பேட்டை தெருவை சேர்ந்த முருகையா என்பவரது மகன் சுபாஷ்(வயது 21) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேஷ் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.

    • மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று கோச்சடை-மேலக்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அங்கு 2 மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர். மோட்டார் சைக்கிள்களில் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சதாசிவம் நகர் தேவி கருமாரியம்மன் கோவில் தெரு, பழனி மகன் ரிஷிகேஷ்(23), அண்ணா நகர் ராமகிருஷ்ணன் மகன் பிரசன்னா(23), தாசில்தார் நகர், வ.உ.சி தெரு குதூப்முகமது மகன் முகமது ஆனஸ்(22) ஆகியோரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

    • போலீசாரின் அதிரடி சோதனையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்
    • கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இதன் காரணமாக தற்பொழுது கஞ்சா விற்பனை ஓரளவு குறைந்து உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோட்டார் பகுதியில் போன் மூலமாக கஞ்சா விற்பனை நடை பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் இன்று காலை கஞ்சா வியாபாரி ஒருவரை பிடித்தனர்.

    அவரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து மற்ற கஞ்சா வியாபாரிகளையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிடிபட்ட கஞ்சா வியா பாரி உதவியு டன் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட கஞ்சா வியாபாரியை மற்ற வியாபாரிகளுடன் போனில் பேச வைத்து பொறிவைத்து போலீசார் அவர்களையும் மடக்கி பிடித்தனர். இன்று காலை முதல் மதியம் வரை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கி உள்ளனர்.

    அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததை யடுத்து அவர்களை பிடிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கோட்டார் பகுதி யில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் தொட்டியமண்ணரையை சோ்ந்தவா் காளிதாஸ் (வயது 60). இவா் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூா் வடக்கு காவல் துறையினா் நடத்திய சோதனையில் காளிதாஸ் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல்செய்தனா்.

    அதே போல திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த பீகாா் மாநிலத்தை சோ்ந்த போசன்குமாா் (25) என்பவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவரிடமிருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    • தமிழகத்திற்கு சாலை மார்க்கமாகவும் ரயில் போக்குவரத்து மூலமாகவும் கஞ்சா கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது.
    • திருப்பூர் ரயில் நிலையம் பிளாட்பாரம் முடிவுறும் இடத்தில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்தனர்.

    திருப்பூர் :

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சாலை மார்க்கமாகவும் ரயில் போக்குவரத்து மூலமாகவும் கஞ்சா கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் பிளாட்பாரம் முடிவுறும் இடத்தில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்தனர் .அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்கள் இருப்பதை கண்டனர். அதை சோதனை செய்ததில் அந்தப் பைகளில் கஞ்சா இருந்ததும் வாசம் தெரியாமல் இருக்க பிளாஸ்டிக் டேப்பை கொண்டு முழுவதும் சுற்றி இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .மேலும் அந்த இருவரையும் கைது செய்தனர் .தொடர்ந்து இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த முகமது ரகுப்(வயது 22) மற்றும் அல்தாப்(19) என தெரிய வந்தது. மேலும் ஒரிசா மாநிலம், பிரம்மப்பூர் பகுதியில் இருந்து கேரளா செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தி வந்ததும் கோவையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க வந்ததும் தெரிய வந்தது. மேலும் கோவை ரயில் நிலையத்தில் அதிக அளவு பாதுகாப்பு இருப்பதால் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் திருப்பூரில் இறங்கி பேருந்து மூலம் கோவை செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இரணியல் போலீசார் திங்கள் நகர் பெரிய பள்ளி அருகே ரோந்து.
    • மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் திங்கள் நகர் பெரிய பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனை யடுத்து கஞ்சா வைத்திருந்த அஜய், ஜெரின்ஜோ ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

    அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜா என்கிற ஜான்பீட்டர் (வயது 22) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்பீட்டரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×