search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாத 79 இருசக்கர வாகனங்கள் வருகிற 17- ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அணுகி அங்கு ஏலத்தில் விட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.

    வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்றோ அல்லது ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை வாகனங்களை பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்குள் முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார் அடையாள அட்டையுடன் முன்வைப்பு தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவாள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை அவர்களது முழு பொறுப்பில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    • கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
    • நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    எடப்பாடி:கொங்கணாபுரத்தில்

    ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

    கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 3 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 550 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் நடந்தது. இதில் பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ. 7 ஆயிரத்து 350 முதல் ரூ. 8 ஆயிரத்து 361 வரை விற்பனையானது. இதேபோல் டி. சி. எச். ரக பருத்தியானது, ஒரு குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 600 முதல் ரூ. 8 ஆயிரத்து 529. வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரத்து 250 முதல் ரூ. 6 ஆயிரத்து 50 வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.97லட்சத்து 2 ஆயிரத்து 764-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 66.43 1/2 குவிண்டால் எடை கொண்ட 19,749 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.16-க்கும், சராசரி விலையாக ரூ.24.89-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 202-க்கு தேங்காய் விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 253.74 குவிண்டால் எடை கொண்ட 509 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.76.60-க்கும், சராசரி விலையாக ரூ.83.19-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.06-க்கும், சராசரி விலையாக ரூ.74.35-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 31ஆயிரத்து 579-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 364.77 குவிண்டால் எடை கொண்ட 487 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.165.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.145.99-க்கும், சராசரி விலையாக ரூ.160.99-க்கும், வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.167.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.156.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.99-க்கும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 91 ஆயிரத்து 959-க்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    அதேபோல் 263.17 குவிண்டால் எடை கொண்ட 780 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.29-க்கும், சராசரி விலையாக ரூ.80.39-க்கும் என மொத்தம் ரூ.20 லட்சத்து 29 ஆயிரத்து 24-க்கு நிலக்கடலை காய் விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.97லட்சத்து 2 ஆயிரத்து 764-க்கு ஏலம் போனது.

    • விவசாயிகள் 2ஆயிரத்து 194கிலோ நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • நிலக்கடலை அதிகபட்சமாக ரூ.79.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.77.80க்கும் கொள்முதல் செய்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய ன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை,வெள்ளிக்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர்,திருச்சி, திண்டுக்கல், மதுரை,திருப்பூர்,ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை,நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று விவசாயிகள் 2ஆயிரத்து 194கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ நிலக்க டலை காய் அதிகப ட்சமாக ரூ.79.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.77.80க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.1லட்சத்து 73ஆயிரத்து 287க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி.மகுடே ஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • 46ஆயிரத்து 471கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • அதிகபட்சமாக ரூ.51.39 க்கும், குறைந்தபட்சம் ரூ.44.59 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார ம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 43 விவசாயிகள் கலந்து கொண்டு 46ஆயிரத்து 471கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்திவிதை அதிகபட்சமாக ரூ.51.39 க்கும், குறைந்தபட்சம் ரூ.44.59 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 22லட்சத்து 6 ஆயிரத்து 843க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடே ஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

    • காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
    • டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    தாராபுரம் :

    தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் குண்டடம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது :- வழக்குகள் தொடர்பாக மொத்தம் 86 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவைகள் தாராபுரம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற 5-ந் தேதி காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.

    தாராபுரம் போலீஸ் நிலையத்தில் 6, அலங்கியம் போலீஸ் நிலையத்தில் 26, குண்டடம் போலீஸ் நிலையத்தில் 20, மூலனூர் போலீஸ் நிலையத்தில் 34 என இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் 5-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பின்னர் மீதி தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2ஆயிரத்து 395கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ நிலக்கடலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை,நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று வெள்ளிக்கிழமை விவசாயிகள் கலந்து கொண்டு 2ஆயிரத்து 395கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ நிலக்கடலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.1லட்சத்து 81 ஆயிரத்து 578க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழு ங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
    • வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

     உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.

    அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • க.பரமத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலம்
    • விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூட லூர் மேற்கு, கார்வழி, கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புன்னம், தென்னிலை, துக்காச்சி, ஆகிய பகுதிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர். வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக் காடுதுறை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் எள் சாகுபடி செய்யப்படுகிறது.மேற்கண்ட பகுதிகளில் விளையும் எள் வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வராததாலும் வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் பலர் மலிவு விலைக்கு விற்க மனமில்லாமல் பலர் எள் காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுக்கின்றனர்.பிறகு மீதம் உள்ள எள்ளை மூட்டைகளாக கட்டி கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 100மூட்டைகள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டதில் கருப்பு எள் ஏலத்தில் ஒரு கிலோ குறைந்த விலையாக ரூ.146, அதிக விலையாக கிலோ ரூ.166க்கு ஏலம் போனது. இதேபோல, சிகப்பு எள் ஒரு கிலோ குறைந்த விலை யாகரூ. 151, அதிக விலையாக கிலோ ரூ. 50கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடைந்துள்ளனர்.

    • கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.
    • டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா வருகின்ற வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற உள்ளது.திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகளின் டெண்டர் மார்ச் 10ஆம் தேதி விடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது.குறிப்பிட்ட தொகை வராத காரணத்தினால் 10ம் தேதி நடக்க இருந்த டெண்டரை மீண்டும் 20 ஆம் தேதி மாற்றி வைத்தனர்.

    இந்த நிலையில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவில் நிர்வாகமே கடைகளை வாடகைக்கு விட வேண்டும் .டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தனர்.நேற்றுகாலை 10 மணி அளவில் டெண்டர் நடைபெறும் என்று அறிவிக்க ப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மாலை 4 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டது. வியாபாரிகள் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலக அலுவலர் அலுவலகம் முன்பு கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோவில் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆய்வாளர் ஆதிரைகோவில் செயல் அலுவலர் காளிமுத்து ஆகியவர்கள் முன்னிலையில் டெண்டர் நடைபெற்றது. இந்த டெண்டரை ஈட்டு வீராம்பாளையம் ஊராட்சி சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் ரூ 7லட்சத்து பத்தாயிரத்திற்கு டென்டரை எடுத்தார்.மேலும் டெண்டர் எடுத்தவரிடம் வியாபாரிகள் பழைய முறையிலேயே வாடகை களை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • மொத்தமாக 1,750 மஞ்சள் மூட்டைகள் ரூ.79 லட்சத்திற்கு ஏலம் போனது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம எடுத்தனர். இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,110 மூட்டைகளும், உருண்டை ரகம் 510 மூட்டைகளும், பணங்காலி ரகம் 130 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.3675 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7743-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.2665-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6199-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6669-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12065-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மொத்தமாக 1,750 மஞ்சள் மூட்டைகள் ரூ.79 லட்சத்திற்கு ஏலம் போனது.

    • குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.
    • ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டையில் உள்ள கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட பொலி காளைகள் 18 வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி மணி முதல் மதியம் 1 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.

    இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் டேவணித்தொகை ரூ.30 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், கால்நடை உயிரின பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து அவற்றுடன் ரேஷன்கார்டு, ஆதார்கார்டு நகல் ஆகியவற்றுடன் வருகிற 16-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    வங்கி வரைவோலையில் குறிப்பிட்ட விண்ணப்ப தாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.

    16-ந்தேதி மாலை 5 மணிக்கு பிறகு ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏலம் முடிந்தவுடன் ஏலம் எடுத்த ஏலதாரர்கள் ஏலம் கோரிய முழு தொகைகையும் ரொக்கமாக செலுத்த வேண்டும்.

    குடிபோதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள முடியாது.

    தவிர்க்க இயலாத காரணங்களால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கலெக்டர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்டம் நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் 186 எண்ணிக்கையிலான பலன்தரும் மரங்களான முந்திரி மரங்களின் மகசூலினை 2023-2024 ஆகிய ஒரு ஆண்டிற்கான அனுபவம் செய்வதற்கான பொது ஏலம் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடுவூரில் உள்ள கால்நடை பண்ணையில் நடைபெற உள்ளது.

    ஏலம் அரசு விதிமுறைகளின்படி நடைபெறும்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வைப்புத்தொகையாக ரூ.10 ஆயிரத்துக்கு, தேசியமாயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை, துணைஇயக்குனர், மாவடட கால்நடை பண்ணை, நடுவூர் என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

    ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் மற்றும் முகவரி தகவலுக்காக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏல முன்வைப்புத்தொகை செலுத்தியவர்கள் மட்டுமே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    வரைவோலை 23-ந்தேதி காலை 20.20 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பெறப்படும்.

    ஏலம் எடுத்தவர்கள் முழுத்தொகையையும் உடனே செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×