search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஏலத்தில் 142 மஞ்சள் மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக் குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். ஏலத்தில் 142 மஞ்சள் மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது.

    இதில் விரலி ரகம் 100 மூட்டைகளும், உருண்டை ரகம் 40 மூட்டைகளும், பணங்காளிரகம் 2 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6020 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7032-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5902-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6142-க்கும், பணங்காளி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.2012-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8542-க்கும் ஏலம் விடப்பட்டது.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்
    • மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டிப் பாலமும் ஒன்று.

    இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டது.

    1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட இந்த பாலம் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    மாத்தூர் தொட்டிப்பா லத்தைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    தொட்டிப்பாலத்தின் முகப்பு பகுதி அருவிக்கரை ஊராட்சியில் உள்ளது. அருவிக்கரை ஊராட்சிக்கு வருமானம் தரும் ஒன்றாக மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. ஆண்டு தோறும் சுற்றுலாபயணிகள் தொட்டிப்பாலத்திற்கு வரும்போது கார்கள் மற்றும் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஏலம் விடப்படுகிறது.

    கடந்த ஆண்டுக்கான குத்தகை காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைவதால் 2023-ம் ஆண்டுக்கான ஏலம் அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் கார்பார்க்கிங் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 900,-க்கும், நுழைவு கட்டணம், வீடியோ கேமரா கட்டணம் ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்திற்கும், என மொத்தம் ரூ.41 லட்சத்து 50 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது.

    கடந்த ஆண்டு இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு இந்த ஆண்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    மாத்தூர் தொட்டி பாலத்தின் மேல் சென்று தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்த்து வர ரூ.5 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதுபோல மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.15, கார்களுக்கு ரூ.40, மினி வேன், வேன்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.75, வீடியோ கேமராவுக்கு ரூ.25, புகைப்பட கேமராவுக்கு ரூ5 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    • பணம் அரசு கணக்கில் சேர்ப்பு
    • தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் குளச்சல் அரபிக்கடல் பகுதிக்கு வரும் கர்நாடகா விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் கடலில் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்களை சட்ட விரோதமாக பிடித்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளச்சல் அரபிக்கடல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளில் வந்த 29 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்து வருவதாக குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடகாவை சேர்ந்த 3 விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 3 விசைப்படகுகளில் இருந்த கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த 29 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக, தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான சாவாளை மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அமிர்தேஸ்வரி, அமிர்தா னந்தா, அஜனா ஆகிய மூன்று விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்களையும் அதிகளவில் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அமிர்தேஸ் வரி படகின் உரிமையாளர் சச்சின், அமிர்தானந்தா படகின் உரிமையாளர் நாகம்மா, அஜனா படகின் உரிமையாளர் அசரப் ஆகியோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து பறி முதல் செய்யப்பட்ட மீன்கள் நேற்று குளச்சல் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ரூ.10 லட்சத்திற்கும் மேல் இந்த சாவாளை மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.இந்த மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க பயன்படுவதால் மீன் எண்ணை நிறுவனத்தினர் இதனை வாங்கி சென்றனர்.இந்த சாவாளை விற்பனை செய்யப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சோளம்-பாசிப்பயிறு ஏலம் நடந்தது.
    • மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குளத்துவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயா என்ற பெண் விவசாயியின் 266கிலோ இருங்குசோளம் மறைமுக ஏலத்திற்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.37.25-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.9,909க்கு வர்த்தகம் நடந்தது.

    லாலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 2.501 கிலோ பாசிப்பயிறு அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.72.50 க்கும் குறைந்தபட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.71-க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 889-க்கு வர்த்தகம் நடந்தது. இங்கு வேளாண் விளைபொருள் வரத்து அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சராலும், வேளாண் உற்பத்தி ஆணையராலும், வேளாண் விற்பனைத் துறை இயக்குநராலும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமானது மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு கண்காணிப்பாளர் வெங்கடேசை 90251 52075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • கால்நடை பராமரிப்புத்துறை வாகனம் மற்றும் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனம் ஆகிய இரு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.
    • கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர்அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் இரண்டு வாகனங்கள் ஏலம்விடப்படவுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள கிருஷ்ணகிரி உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை வாகனம் மற்றும் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனம் ஆகிய இரு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.

    கழிவுசெய்யப்பட்டுள்ள இரு வாகனங்களும் வருகிற 21-ந் தேதி மாலை 3மணியளவில் கிருஷ்ணகிரிபழைய பெங்களூர் சலையில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர்அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

    மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு, விலைப்புள்ளியை கோரலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.
    • ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் அக்கரைப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

    இதில், ரூ.56,950-க்கு அடிப்படை குத்தகை உரிமம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், அதிக தொகையான ரூ.3,01,100-க்கு ஏலம் எடுத்து மீன் பிடிக்க குத்தகை உரிமத்தை பெற்றார்.

    • விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
    • அரசுக்கு 36 ஆயிரத்து 584 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    தருமபுரி,

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

    தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்தில் 48 விவசாயிகள் 3697 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.

    விவசாயிகள் கொண்டு வந்திருந்த வெண்பட்டு கூடுகள் அதிகபட்சம் கிலோ 722 ரூபாயும் குறைந்தபட்சம் 473 ரூபாயும் சராசரி 659 ரூபாய் என மொத்தம் ரூ. 24 லட்சத்து 39 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனையானது.இதன் மூலம் அரசுக்கு 36 ஆயிரத்து 584 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    • 78 கடைகள் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது
    • .கார் பார்க்கிங் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு கன்னியா குமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது.

    இந்த125 சீசன் கடை கள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் தலைமையில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜய லட்சுமி, நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    சீசன் கடை ஏலம் எடுப்ப தற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில் மொத்தம் 47 சீசன் கடைகள் மட்டும் ஏலம் போனது. இந்த 47 சீசன் கடைகளும் ரூ.33 லட்சத்து 55 ஆயிரத்து 10-க்கு ஏலம் போனது. மீதி உள்ள 78 கடைகள் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த அளவுக்கு ஏலம் கேட்கப்பட்டதால் மறு ஏலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    முன்னதாக கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கான கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 5 பேர் பங்கேற்றனர். இறுதியாக சூரப்பள்ளத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமையை ரூ.20 லட்சத்து 22 ஆயிரத்து 222க்கு ஏலம் பிடித்தார். மேலும் சிலுவை நகர் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை ரூ.1லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சீசன்கடைஏலத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர்
    • இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்து மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது. இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.

    இந்த சீசன் கடை ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். ஏலம் எடுக்க சென்ற வியாபாரிகள் போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகே பேரூராட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    • கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.7 லட்சத்திற்கு விற்பனையானது.
    • இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    தருமபுரி,

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

    தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு வாரம் பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.7 லட்சத்திற்கு விற்பனையானது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 47 விவசாயிகள் கொண்டு வந்த 4037 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.27.17 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம் ரூ.525-க்கும், அதிகபட்சமாக ரூ.745-க்கும், சராசரியாக 673 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த இரண்டு வாரத்தில் பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்து ஐந்து லட்சம் மற்றும் இரண்டு லட்சத்திற்கு விற்பனையானது. தற்போது பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 4037 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 27.17 லட்சத்திற்கு விற்பனையானது. மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள்
    • கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர் டிசம்பர் ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் வையப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

    இந்த ஆண்டு சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நாளை (28-ந்தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    • குவின்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
    • ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ .49 லட்சத்து 44 ஆயிரம்.

     அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு புளியம்பட்டி, அன்னூர்,சேவூர், பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1918 முட்டை பருத்தி வந்தது.

    இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் மட்டரகப் பருத்தி குவின்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ .49 லட்சத்து 44 ஆயிரம். இந்த தகவலை சங்க மேலாண்மை இயக்குனர் மோசஸ் ரத்தினம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

    ×