search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • 32 ஆயிரத்து 986 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.95க்கும், குறைந்தபட்சம் ரூ.63.15க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 76விவசாயிகள் கலந்து கொண்டு 32 ஆயிரத்து 986 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 78.95க்கும், குறைந்தபட்சம் ரூ.63.15க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.23லட்சத்து 48ஆயிரத்து 82க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ளது.
    • அக்டோபர் 2-ந் தேதி ஏலம் முடிவடைகிறது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த பரிசு பொருட்கள் அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.

    ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ளது. இந்தநிலையில், 4-வது தடவையாக, வருகிற 17-ந் தேதி ஏலம் தொடங்குகிறது.

    1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    பிரத்யேக இணையதளம் ஒன்றின் வழியாக ஏலம் நடக்கிறது. அக்டோபர் 2-ந் தேதி ஏலம் முடிவடைகிறது.

    பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம்வரை இருக்கிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இப்பொருட்களில் சாமானியர் ஒருவர் அளித்த பரிசுப்பொருளும் இருக்கிறது. நாட்டின் வளமான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.

    மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் பரிசளித்த ராணி கமலாபாதி சிலை, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமன் சிலை மற்றும் சூரியன் ஓவியம், இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் பரிசளித்த திரிசூலம், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் அளித்த கோல்ஹாபூர் மகாலட்சுமி கடவுள் சிலை, ஆந்திர முதல்-மந்திரி அளித்த ஏழுமலையான் படம் ஆகியவையும் பரிசு பொருட்களில் அடங்கும்.

    டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகியவையும் உள்ளன.

    அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மாதிரி வடிவம், காசி விஸ்வநாதர் கோவில் மாதிரி வடிவம் ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன.

    • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    நாகர்கோவில்,செப்.9-

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் மதுபா னங்கள் விற்பனை செய்ய 113 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளின் அருகில் மது அருந்துவதற்கு பார் வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.

    கடந்த ஜனவரி 1-ந்தேதி அன்று 113 டாஸ்மாக் கடைகளுக்குரிய மதுபான பார் ஏலம் விடப்பட்டதில் 53 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது. இதில் 25 மதுபான பார்களுக்கு மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகை யினை ஏலதாரர்கள் கட்டி யுள்ளனர். இந்த மதுபான பார்களிலிருந்து மட்டுமே அரசுக்கு மாதந்தோ றும் வருவாய் கிடைத்து வரு கிறது.

    இந்நிலையில் மீதமுள்ள 88 மதுபான பார்களுக்கு ஏலம் எடுக்காமல் சட்ட விரோதமாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மதுவிலக்குத் துறை, டாஸ்மாக் ஆகிய துறை சார்ந்த அதிகாரிகளின் துணையுடன் முக்கிய அரசியல் கட்சியைத் சேர்ந்த தனிநபரின் வருவாய்க்காக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தடுத்து நிறுத்தி, தனிநபர் இந்த மதுபான பார்கள் மூலம் பயனடைந்து வருகிறார். மேலும் டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமூல் தர வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் டாஸ்மாக் தொழி லாளர்கள் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதனை கருத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் சம்மந்தப்பட்ட துறைகள் இதுகுறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு மாதந்தோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுற்கு காரணமாக இருக்கின்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட் டால் அ.தி.மு.க. சார்பில் விரைவில் டாஸ்மாக் அலுவ லகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • 1லட்சத்து 56ஆயிரத்து 626கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.65.66-க்கும், குறைந்தபட்சம் ரூ.53.16க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்–தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    அதன்படி நேற்று 199 விவசாயிகள் 1லட்சத்து 56ஆயிரத்து 626கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.65.66-க்கும், குறைந்தபட்சம் ரூ.53.16-க்கும் கொள்முதல் செய்தனர்.

    மொத்தம் ரூ.95 லட்சத்து 63ஆயிரத்து 579-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
    • அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்ட வியாபாரிகள் தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9,839-க்கு ஏலம் போனது.

    திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் கேட்டனர்.

    அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்ட வியாபாரிகள் தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.

    அதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில் முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

    இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9 ஆயிரத்து 839-க்கு ஏலம் போனது.

    குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 509-க்கும், சராசரியாக பருத்தி ரூ.8 ஆயிரத்து 432-க்கும் விற்பனையானது.

    இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனையானது.

    • திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள். தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.85 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை கூட்டுறவு கருப்பட்டி சம்மேளன மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 7 விவசாயிகள் 118 மூட்டைகள் (6,161 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடந்த ஏலத்தில் ரூ.4.45 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.78-க்கும், குறைந்த பட்சமாக ரூ.58-க்கும், சராசரியாக ரூ.76-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார். 

    • சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.
    • இதில் 948 பருத்தி மூட்டைகள் ரூ. 35 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்பு றம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பா ளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குரு சாமி பாளையம், அம்மா பாளை யம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசா யிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 948 பருத்தி மூட்டைகள் ரூ. 35 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    ஆர்.சி.எச் ரகப் பருத்தி 521மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 368 மூட்டைகளும், கொட்டு பருத்தி 59 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.9899-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12595--க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9739 முதல் அதிகப் பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12289 -க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5995 முதல் அதிகப்பட்சமாக ரூ.7395-க்கும் ஏலம் விடப்பட்டது.

    • சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 34 லட்சத்து16ஆயிரத்து177-க்கு விற்பனை ஆனது.

     பரமத்தி வேலூர்:

    சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரி கள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 18.36 1/2குவிண்டால் எடை கொண்ட 4ஆயிரத்து 973தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.24.65-க்கும், குறைந்த விலையாக ரூ.21.89-க்கும், சராசரி விலையாக ரூ.23.69-க்கும் என ரூ. 42ஆயிரத்து 869-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 321.72 1/2குவிண்டால் எடை கொண்ட 660மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ85.06-க்கும், குறைந்த விலையாக ரூ81.16-க்கும் சராசரி விலையாக ரூ84.39-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.06-க்கும், குறைந்த விலையாக ரூ.67.29-க்கும், சராசரி விலையாக ரூ.79.99-க்கும் என ரூ.26லட்சத்து 10ஆயிரத்து 816-க்கு விற்பனை ஆனது.

    113.97 1/2 குவிண்டால் எடை கொண்ட 346 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் ஒரு கிலோ நிலக்கடலை காய் அதிக விலையாக ரூ.70 .20-க்கும், குறைந்த விலையாக ரூ.64.16-க்கும் சராசரி விலையாக ரூ.67 .30 -க்கும்என ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்து 492-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 34 லட்சத்து16ஆயிரத்து177-க்கு விற்பனை ஆனது.

    • 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 84.60க்கும், குறைந்தபட்சம் ரூ.69 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்,இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை.

    திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 138 விவசாயிகள் கலந்து கொண்டு 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 84.60க்கும், குறைந்தபட்சம் ரூ.69 க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று முன் தினம் மொத்த ரூ.54லட்சத்து 66ஆயிரத்து 61க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் ஏலம் விடப்பட்டது.
    • 2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது.

    புதுடெல்லி :

    டெல்லியில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வனஉயிர் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கிடையே, புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் உள்ளிட்ட சரணாலய பகுதிகளில் இருந்து 1 கி.மீ. தூரத்துக்குள் எந்தவித கட்டுமான பணிகளும், வளர்ச்சிப்பணிகளும் இருக்கக்கூடாது என ஏன் ஒரு சட்டத்தை வகுக்கக்கூடாது? என கேட்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதனால் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைமத்திய வனத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் இதுகுறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதாக உறுதி தந்து இருக்கிறார்.

    5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது.

    2ஜி அலைக்கற்றை வெறும் 30 'மெகா ஹெர்ட்ஸ்'தான் (அதிர்வெண் அளவு) ஏலம் விடப்பட்டது. அதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் கொடுத்தபோது ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் வினோத் ராய் அறிக்கை அளித்தார்.

    2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. 2ஜி-யில் வெறும் குரல்தான் சென்றது. 3ஜி-யில் வீடியோ வந்தது. இப்போது 5ஜி-யில் எந்த ஒரு இணைய தேடுதலாக இருந்தாலும் ஒரு நொடியில் வந்துவிடும்.

    இந்த திறன் அடிப்படையில் பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அப்படியானால் திட்டமிடுதலில் மோசமா? நாலைந்து கம்பெனிகளோடு சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்ததா?. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

    2ஜி-க்கும், 5ஜி-க்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே எவ்வளவு பெரிய மோசடியை வினோத்ராய் செய்திருக்கிறார் என்பது தெரியும். அவர் யாருக்காக இதை செய்து இருக்கிறார்?. ஒரு ஆட்சி மாற்றத்துக்காக அவரது பின்னால் யார் யாரெல்லாம் இருந்தனர்? என்பதை விசாரிக்க வேண்டும்.

    இதற்கு அரசு முன்வரவில்லை என்றால், இந்த அரசு நிச்சயமாக மாறும். அப்படி மாறும்போது அடுத்து வருகிற அரசாங்கமாவது விசாரித்து நாட்டுக்கு உண்மையை சொல்ல வேண்டும். இது ஒரு மிகப்பெரிய மோசடி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
    • 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆடி பண்டிகையொட்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது, அடுத்த வாரம் 11ந் தேதி வியாழக்கிழமை வழக்கம் போல் ஏலம் நடைபெறும் என வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    ஆடி 18 விடுமுறை என்பதால் கடந்த 1-ந் தேதியே வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி ஒரு கிலோ ரூ.45-க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.41-க்கும் விலை போனது.

    பூவன் ஒருத்தார் ரூ.780-க்கும், செவ்வாழை ஒருத்தார் ரூ.720-க்கும் ரொபஸ்டா ஒருத்தார் ரூ.560-க்கும் ரஸ்தாலி ஒருத்தார் ரூ.580-க்கும், முந்தன் ஒருத்தார் ரூ.710-க்கும், பச்சைநாடன் ஒருத்தார் ரூ.470-க்கும் விலை போனது. மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    ஏலத்தில் கோபி சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டு வாழைப்பழங்களை வாங்கி சென்றனர்.

    ×