search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா–ளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.17.21 லட்சத்திற்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா–ளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விற்பனைக்காக 470 பருத்தி மூட்டைகள் வந்தன.

    பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 199 முதல் ரூ.11 ஆயிரத்து 202 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 499 முதல் ரூ.11 ஆயிரத்து 352 வரையிலும் என மொத்தம் ரூ.17.21 லட்சத்திற்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகபட்சமாக பஸ், வேன், கார், ஜீப் மற்றும் டிரக்கர் போன்ற வாகனங்களில் சுற்றுலா வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்க ளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஆண்டுதோறும் கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பதிலாக கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்களது ஊழியர்களை வைத்து சுற்றுலா வாகன ங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த ஏலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் நடந்தது.

    இந்த ஏலம் மற்றும் டெண்டரில் மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை கன்னியாகுமரி மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 111க்கு ஏலம் எடுத்துள்ளார்.

    • உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது.
    • இதில் 2 விவசாயிகளின் 1300 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது .

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் 2 விவசாயிகளின் 1300 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது .

    இதில் 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்ச விலையாக காய் ஒன்றுக்கு ரூ.8.14 எனவும், குறைந்தபட்ச விலையாக ரூ .6.87 எனவும் விலை கோரப்பட்டு மொத்தம் ரூ.9 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் கொப்பரை மறைமுக ஏலம் நடைபெறும்.

    அனைத்து வேளாண் விளைபொருட்களையும் விவசாயிகள் தரம்வாரியாக பிரித்து எடுத்து வந்து விற்பனை செய்து அதிக லாபம் பெற்று பயன்பெறலாம். இந்த தகவலை உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

    • இந்த கடிகாரம் ரூ.30 கோடிக்கு மேல் ஏலம் போக வாய்ப்புள்ளது.
    • அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன.

    வாஷிங்டன் :

    அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும். அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள்.

    ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும் ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இருப்பினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை ரூ. 19 லட்சத்து5 ஆயிரத்து456க்கு விற்பனை ஆனது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள சாலைப்புதூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 79.27 குவிண்டால் எடை கொண்ட 22ஆயிரத்து 416 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.26.15-க்கும், குறைந்த விலையாக ரூ.20.15-க்கும், சராசரி விலையாக ரூ.23.46-க்கும் என ரூ.ஒரு லட்சத்து76ஆயிரத்து 304க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 214.43 1/2 குவிண்டால் எடை கொண்ட 445 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.86.20-க்கும், குறைந்த விலையாக ரூ.82.39-க்கும், சராசரி விலையாக ரூ.85.80ம், 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.60-க்கும், குறைந்த விலையாக ரூ.73.89க்-கும், சராசரி விலையாக ரூ.79.29-க்கும் என்று ரூ.17 லட்சத்து 29 ஆயிரத்து 152க்கு விற்பனை ஆனது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை ரூ. 19 லட்சத்து5 ஆயிரத்து456க்கு விற்பனை ஆனது.

    • சேலம், ஆத்தூர், ராசிபுரம், அவிநாசி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை எடுத்தனர்.
    • ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் பருத்தி ஏலம் நடந்தது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் பருத்தி ஏலம் நடந்தது.

    ஏலத்தில் மல்லசமுத்திரம், வையப்பமலை, பெரிய மணலி, சின்ன மணலி, மதியம்பட்டி, அக்க–ரைப்பட்டி, மின்னாம்பள்ளி, சவுதாபுரம், நாட்டாமங்கலம், எலச்சிபாளையம், கோக்களை உள்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    சேலம், ஆத்தூர், ராசிபுரம், அவிநாசி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை எடுத்தனர். நேற்று நடந்த இந்த ஏலத்தில் 1947 சுரபிரக பருத்தி மூட்டைகள் ரூ.60 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. அப்போது சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8250-க்கும், அதிகபபட்சமாக ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.9761-க்கு விடப்பட்டது.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 788 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 47,614 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 21 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 26 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 19,622 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 788 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்சிஎம்எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
    • 3640 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 23 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்சிஎம்எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்தில் முத்துக்–காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்க–ளாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தி–ருந்தனர்.

    இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த ஏலத்தில் 3640 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 23 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 3170 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 488 மூட்டைகளும், கொட்டு பருத்தி 22 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன.

    இதில் ஆர்சிஏச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8888-க்கும், அதிக பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10069-க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8900 முதல் அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9799-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்த–பட்சம் ரூ.4583 முதல் அதிகப்பட்சமாக ரூ.6700-க்கும் ஏலம் விடப்பட்டது.

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்பருப்பு ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 260 மூட்டைகள் தேங்காய்பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 65 காசுக்கும், அதிகபட்ச விலையாக 85 ரூபாய் 16 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 66 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 29 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 9 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 12,741 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • ராசிபுரத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
    • ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.

    இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் ஆர்சிஏச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7868-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9959-க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8600 -க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10109-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5100-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5900-க்கும் ஏலம் விடப்பட்டது.

    • பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 2,007 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது.

    அவினாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.48லட்சத்து 27ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 2,007 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,500 முதல் ரூ.9,807 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 48 லட்சத்து 27 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் லட்சுமிநாராயண சாமி கோவில் வளாகத்தில் அந்த கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம் ஏலம் நடைபெற்றது.
    • தொகை அதிகமாக இருந்ததால் விவசாயிகள் புறக்கணிப்பு.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் லட்சுமிநாராயண சாமி கோவில் வளாகத்தில் அந்த கோவிலுக்கு சொந்தமான குள்ளநாயக்கன்பாளையம் பகுதி விவசாய நிலம் ஏலம் நடைபெற்றது. ஆய்வாளர் வடிவுக்கரசி, தக்கார் நவீன்ராஜ் தலைமை வகித்தனர். இதில் செயல் அலுவலர் சின்னசாமி, அலுவலக நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள் ஏலத்தை புறக்கணித்து மனு கொடுத்தனர். இது குறித்து ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது-

    3 வருடத்திற்கு ஒருமுறை ஏலம் நடந்து வந்தது. கடந்த ஆண்டு ஒரு வருடம் என மாற்றினார்கள். இதில் விவசாயம் செய்ய கால நேரம் போதுமானதாக இல்லை. வாய்க்காலில் தண்ணீர் வந்தால்தால் விவசாயம் செய்ய முடியும்.

    தற்போது பொட்டாஷ் உள்பட உரங்களின் விலை அதிகமானது. இடு பொருட்கள் செலவு அதிகம் ஆகி வருகிறது. ஒரு வருடம் வாய்க்காலில் தண்ணீர் வராவிட்டால் செலுத்திய பணம் முழுதும் நஷ்டம் ஏற்படும். விவசாயம் செய்தாலே நஷ்டம் ஏற்படும் நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில், கடந்த ஆண்டு ஏலத்தொகையை விட 10 சதவீதம் அதிகப்படுத்தி கேட்டனர். இதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

    ஆகவே, 10 சதவீத ஏலத்தொகை உயர்வை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒரு வருடம் என்பதை 3 அல்லது 5 வருடமாக உயர்த்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்து, ஏலத்தை புறக்கணித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×