search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், 2சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வருகை தந்து , பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். காலை 9மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.

    • மதுரை சித்திரை திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் ஆலோசனை நடத்தினர்.
    • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    மதுரை

    மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வு களான தினந்தோறும் மீனாட்சியம்மன் 4 மாசி வீதிகளில் வீதிஉலா வருதல், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திக்குவிஜயம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சுவாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவை காண்பதற்கும் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள்.

    மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் வைகை ஆற்றின் இரு கரைப்பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சுழற்சி முறையில் தேவையான பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், தூய்மை யாகவும் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு, தீயணைப்பு ஆம்புலன்சு வசதி, தகவல் மையம், கண்காணிப்பு காமிராக்கள், தன்னார்வ லர்கள், மின்சாரம், மின்விளக்கு, சாலைகள் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் மற்றும் நடமாடும் கழிவறை மற்றும் இ-டாய்லெட் வசதி ஏற்படுத்துவது, கொசு புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் படும்.

    திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் வாகனங்களை போக்கு வரத்து இடையூறின்றி நிறுத்தி செல்வதற்கும், பொதுமக்கள் ஆங்காங்கே திருவிழாவை பார்க்க வசதியாக எல்.இ.டி. திரை வசதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக டிரோன் மூலமாக கண்காணித்தல், வாகனங்கள் நிறுத்து வதற்கான இடங்கள், மருத்துவ சேவை வழங்குதல், அவசர உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் காவல் துணை ஆணையாளர் அரவிந்த், துணை மேயர் நாகராஜன், போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் (காவல்துறை) மாரியப்பன், செல்வின், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் முஜிபூர் ரகுமான், தயாநிதி, மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம், கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, நகரப்பொறி யாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் காளிமுத்தன், வரலட்சுமி, திருமலை, சையது முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 325-வது ஆலோசனை கூட்டம் இன்று புது டெல்லியில் நடக்கிறது.
    • ஆலோசனையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை, இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இது கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் அமைய இருக்கிறது. அங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

    இதனை பொதுமக்கள் வந்து பார்த்து செல்லும் வகையில் இரும்பு பாலம் மற்றும் பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் நடைபாதை அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த பிரம்மாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது. பொதுமக்க ளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மேலும், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்து அனுமதி வழங்கிவிட்டது.

    இதன் அடுத்தகட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக பேனா நினைவு சின்னம் திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்து உள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு விரிவாக கடிதம் எழுதி இருந்தது.

    இந்நிலையில் இன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 325-வது ஆலோசனை கூட்டம் இன்று புது டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு குழுவின் தலைவர் தீபக் அருண் அப்டே தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் தான் இன்று மெரீனா கடலில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கடிதம் பட்டியலிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று நிபுணர்கள் குழுவினர் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக காணொலியில் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

    இந்த ஆலோசனையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். ஏற்கனவே தமிழக பொதுப்பணித்துறை அளித்துள்ள கடிதத்தில் பேனா நினைவு சின்னம் அமைய உள்ள இடத்தில் கடல் ஆமைகளோ, புற்களோ இல்லை என்றும், இதனால் மீனவர்களுக்கோ, கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து நிபுணர் குழு தீவிரமாக ஆலோசனை மேற்கொள்கிறது. இந்த குழுவில் பல்வேறு நிபுணர்களும் பங்கேற்று ஆலோசிக்கின்றனர். ஆலோசனையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நிபுணர் குழு ஆலோசனை முடிந்ததும், அவர்கள் இது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளது. அதன்பின்னரே பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவரும். இருப்பினும் மத்திய அரசு விரைவில் இதற்கு அனுமதி வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சி குழுவிடம் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி பெறவும் அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கோடை உழவு நன்ைம தரும் என புதுக்கோட்டை மேலாண்மை இணை இயக்குனர் ஆலோசனை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி கோடை உழவு குறித்து கூறும்போது, கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நன்மைகள் பல கிடைக்கும்.கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது. இதனால்நி லத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். கோடை உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்ப தனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். வயலி லுள்ள கோரை போன்ற களைகள்,கோடை உழவு செய்வதனால்மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

    கோடை உழவு செய்வ தனால் நிலத்தினடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும்தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்க ப்படுகிறது. மிக முக்கியமாக மக்காச்சோளத்தை தாக்கும்அமெரிக்க படைப்புழுவினை கட்டு ப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது . இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது.கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழவு செய்து மண் அரிப்பினை தவிர்க்கலாம்.

    கோடை உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது.இவ்வாறு பல நன்மைகள் கோடை உழவினால் ஏற்படுவதால் 'கோடை உழவு கோடி நன்மை" எனக் கூறப்படுகிறது. எனவே,புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்; கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும்ரூபவ் பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுபடுத்திடவும் கோடை உழவு செய்து பயன்பெ றுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.


    • டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து கல்லூரி மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

    இதில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கல்லூரி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மூலம் கல்லூரி மாணவர்களுக்கிடையே புழங்கும் போதைப் பொருள்களையும், விற்பவர்களையும் கட்டுப்படுத்த வருங்காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்லூரி நிர்வாகம் மாணவர்களைக் கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான வாட்ஸ்-அப் குழுக்களை தொடங்க வேண்டும். அத்துடன் மாதம் ஒருமுறை காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும், போதைப்பொருள் உபயோகத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்லூரிகளுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும்.

    கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மறுவாழ்வு மையங்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

    நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாடிப்பட்டி

    சோழவந்தான் தொகுதி தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், தனராஜ், பரந்தாமன், தனசேகரன், பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்திய பிரகாஷ், ரகுபதி, முருகவேல் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். தி.மு.க. சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் சம்பத், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், ஸ்ரீதர், சரந்தாங்கி முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் சேகர் ஆகியோர் பேசினர்.

    முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன், ராம் மோகன், முரளி, வினோத், தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அரவிந்தன், இளைஞர் அணி பேரூர் செயலாளர் ஜி.பி.பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தாங்கள் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.
    • ரூ.1,10,600 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலைச் சார்ந்த பிரதீப் பால் மற்றும் குமரன் ஆகியோர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வார்ஷா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தாங்கள் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.

    கல்வி ஆலோசனை நிறுவனம் பணத்தை பெற்றுக் கொண்டு விசா மற்றும் படிப்பதற்கான வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

    ஆனால் இருவருக்கும் வார்சாவில் பயில உரிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆகவே கல்வி நிறுவனத்திடம் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். கல்வி நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்தவர்கள் நுகர்வோர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர்கள் நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர்கள் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டணமான ரூ.47,600, நஷ்ட ஈடு ரூ.55,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.8,000 ஆக மொத்தம் ரூ.1,10,600 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • கவர்னர் வருகையை முன்னிட்டு போலீசார்-அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் 60-வது ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராஜபாளையத்திற்கு நாளை (1-ந் தேதி) வருகிறார்.

    அவர் காலை 7 மணியளவில் ஸ்ரீங்கேரி சாரதாம்பாள் கோயில் மற்றும் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    இதையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகராட்சி ஆணையர் பார்த்த சாரதி, ஆளுநரின் பாது காப்பு ஆய்வாளர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசுத் துறைஅலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • மாநகராட்சியின் பல்வேறு இடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்கு மார்ஜி.கிரியப்ப னவர், தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகவளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடுமையத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அரசுத் துறைஅலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டு ப்பாடு மையம் அமை க்கப்பட்டு அதன் மூலம்ப ல்வேறு பணிகள் மே ற்கொள்ளப்பட்டு வரு கிறது.ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டு ப்பாடு மையத்தில் பொதுமக்கள்தங்களது பல்வேறு வகையான கோரிக்கைகளை "ஒரு குரல் புரட்சி" திட்டத்தின் கீழ்155304 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பொழுது, அந்தகோரிக்கையின் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவடி க்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த மையத்தி ல் உள்ள தகவல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைகொண்டு மாநகராட்சியின் பல்வேறு இடங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் தூய்மை பணிவாகனங்கள், அலுவலக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களின் செயல்பாடுகள் ஜி.பி.எஸ்.கருவி மூலம் கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    மேலும் வருகை பதிவேடு, எரிபொருள் பயன்பாடு உட்பட பல்வேறு பணிகள்இந்த மையத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்துறை, போக்குவரத்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,மின்சார வாரியம், தீயணைப்பு துறை, உட்பட பல்வேறு இன்றியமையாத அரசுத்து றைகளை ஒன்றிணைத்து பொதுமக்களின் அடிப்படைத்தேவைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை உறுதி செய்ய திருப்பூர்மாநகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம்செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    • வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி நடந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.

    வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.

    அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    கூட்டத்தில், நாமக்கல் வட்டார கால்நடை உதவி மருத்துவர் வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் சாந்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கங்காதரன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் நன்றி கூறினர். 

    • பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் 1,100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கல்லூரி செயலர் அ.பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சென்னை, மைன்ட் ப்ரஷ் டிரைனிங்க் அகாடமியின் நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், "சுய மதிப்பு மிகவும் முக்கியம். மாணவர்களிடம் உள்ள தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டவும் வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    நம்முடைய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். விதிகளும் கட்டுப்பாடுகளும் இருந்தால் மட்டுமே மனிதன் வாழ்வில் சிறக்க முடியும். ஆகவே மாணவர்களுக்கு விதிகளை கடைபிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு வீட்டின் சூழ்நிலையை உணர்த்த வேண்டும். அவ்வாறு உணர்த்தினால் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். குழந்தைகளிடம் பேசும்பொழுது மறைமுகமாக எடுத்து சொல்ல வேண்டியதை மறைமுகமாகவும், நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டியதை நேரடியாகவும் சொல்ல வேண்டும் என்றார். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். வேதியியல் துறைத் தலைவர் பார்வதி நன்றி கூறினார். இதில் 1,100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
    • முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பேரணியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    பேரணிக்கு முன்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நடைமுறையில் உள்ள பீங்கான், கிளாஸ் மற்றும் மண் பாத்திரங்களும், பேப்பர் கப், பேப்பர் பிளேட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான அனைத்து பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    அதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டதோடு தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

    பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய துண்டு பிரசுரங்களும், விளம்பரப் பதாகைகளும் ஏந்தி சென்றனர்.

    தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை பகுதி மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார்.

    முதுகு தண்டுவடம் பாதிக்க ப்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் ஆலோச னைகளும் மருத்து வமனை மருத்துவர்களால் வழங்கப்பட்டது.

    ×