search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு"

    • நாட்டு வெடிகுண்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
    • 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் மலையரசி. நேற்று இரவு இவருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல்படப்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடம் வந்து பார்த்தபோது வைக்கோல்படப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இதில் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (வயது 19), காளிராஜ் (21), லிங்கராஜா (21), மதன்ராஜ் (24) ஆகிய 4 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வைக்கோல் படப்பில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. 4 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.

    • முதியவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.
    • கணவன்-மனைவி பிரச்சினையில் 3-வது நபர் தலையிட்டதால், சரவணகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை ஆர்.ஆர். மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது வீட்டின் அருகே சரவணன் என்ற சரவணகுமார் (28) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அங்கு வந்த சீனிவாசன், இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். சரவணகுமார் சத்தம் போடவே, கோபம் அடைந்த முதியவர், 'ஒழுங்காக குடும்பம் நடத்து, இல்லையேல் உனக்குத்தான் சங்கடம்' என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்.

    கணவன்-மனைவி பிரச்சினையில் 3-வது நபர் தலையிட்டதால், சரவணகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு முதியவர் சீனிவாசன் வீட்டில் தூங்கினார். அங்கு வந்த சரவணகுமார், பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து சீனிவாசன் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் என்ற சரவணகுமாரை கைது செய்தனர்.

    • விமான நிலையத்தை அடைந்த அவர்கள் அவசர அவசரமாக புறப்பட தயாராக இருந்தனர்.
    • விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, சனிக்கிழமை அதிகாலை 63 வயது முதியவர் மனைவியுடன் விமானம் மூலம் வெளிநாடு செல்ல வந்தார்.

    அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலையத்தை அடைந்த அவர்கள் அவசர அவசரமாக புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் செக்-இன் கவுன்டரில் இருந்த ஊழியர்கள், அவர்களது உடமைகளை சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

    இது முதியவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கூறினார். இது விமான நிலையத்தில் பீதியைத் தூண்டியது.அதைத் தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து முதியவரை பிடித்து நெடுவாசல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    மதுரையில் முன்னாள் மண்டல தலைவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி குண்டு தயாரித்தபோது வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மதுரை:

    மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன், அ.தி.மு.க. முன்னாள் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. தி.மு.க. பிரமுகரான இவரும் முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் ஆவார்.

    இருவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பிலும் அடுத்தடுத்து கொலைகள் நடந்துள்ளன. இதுவரை சுமார் 14 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் இருதரப்பிலும் பழிக்குப் பழி வாங்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கடந்த 4-ந்தேதி வி.கே.குரு சாமியின் ஆதரவாளரான சுமைதூக்கும் தொழிலாளி வேல்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியனின் ஆதரவாளர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். இதனிடையே இதற்கு பழிக்கு பழி வாங்க வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டினர். இதற்காக காமராஜபுரம் வாழைதோப்பு பகுதியில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் முனுசாமி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர்.

    முனுசாமி மற்றும் திருத்தங்கல்லை சேர்ந்த பட்டாசு தயாரிக்கும் தொழிலாளி நரசிம்மன் (38) ஆகிய இருவரும் குண்டுகளை தயார் செய்தபோது எதிர் பாராதவிதமாக வெடி குண்டுகள் வெடித்தன.

    குண்டு வெடிப்பில் வீட்டின் மேற்கூரை பறந்தது. முனுசாமியும், நரசிம்மனும் பலத்த காயம் அடைந்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க வைத்திருந்த வெடிபொருட்களையும் கைப்பற்றினர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முனுசாமி, நரசிம்மன் ஆகியோரைமீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை பழிக்குப்பழியாக கொல்லும் நோக்கில் இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்தது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×