என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிட மாற்றம்"

    • நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
    • சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 77 நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

    அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தின தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம்.
    • ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வீடியோ குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
    • தலைமை காவலர் கோவிந்தனை, ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய தலைமை காவலர் கோவிந்தன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அமைச்சர் ஆதரவோடு செயல்படுவதாக தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த வீடியோ குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதன் அடிப்படையில் தலைமை காவலர் கோவிந்தனை, ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    • நிர்வாக நலன் கருதி நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 9 தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-

    பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தாசில்தாராகவும் (பறக்கும்படை), அங்கு பணிபுரிந்த கோட்டீஸ்வரன் வேலூர் உதவிகமிஷனர் (கலால்) அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த செல்வி வேலூர் கோவில் நிலங்கள் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சுரேஷ்குமார் வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த சுமதி கே.வி.குப்பம் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ரமேஷ் முத்திரைக்கட்டண தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சத்தியமூர்த்தி வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த நரசிம்மன் வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராகவும், வேலூர் தாலுகா தேர்தல்பிரிவு துணை தாசில்தார் சிவசண்முகம் பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார். புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும் இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்.

    பணியிட மாறுதல் குறித்து மேல்முறையீடோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்று கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கி ஆணையிடப்படுகிறது.
    • ஓசூர் தனி வட்டாட்சியர் சண்முகம் ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள பணியிட மாறுதல் தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கி ஆணையிடப்படுகிறது.

    அதன்படி சூளகிரி சிப்காட் நிலை 4 தனி வட்டாட்சியர் முருகேசன் ஓசூர் தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியர் ரமேஷ்பாபு சூளகிரி தனி வட்டாட்சியராகவும், ஓசூர் தனி வட்டாட்சியர் சுப்பிரமணி ஓசூர் வட்டாட்சியராகவும், ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துபாண்டி ஓசூர் நிலா வரி திட்ட தனி வட்டாட்சியராகவும், ஓசூர் தனி வட்டாட்சியர் சண்முகம் ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் டாஸ்மாக் துணை மேலாளர் சின்னசாமி கிருஷ்ணகிரி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியராகவும், இப்பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி அஞ்செட்டி தனி வட்டாட்சியராகவும், அஞ்செட்டி தனி வட்டாட்சியராக இருந்த பூவிதன் கிருஷ்ணகிரி நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், அஞ்செட்டி வட்டாட்சியர் தேன்மொழி போச்சம்பள்ளி வட்டாட்சியராகவும், பர்கூர் வட்டாட்சியர் பன்னீர் செல்வி சூளகிரி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல சூளகிரி வட்டாட்சியர் அனிதா அஞ்செட்டி வட்டாட்சியராகவும், போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகம் பர்கூர் வட்டாட்சியராகவும், ஊத்தங்கரை வட்டாட்சியர் கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியராகவும், வட்டாட்சியர் பயிற்சி பெற்று வரும் திருமலைராஜன் பயிற்சி முடித்தவுடன் ஊத்தங்கரை வட்டாட்சியராகவும், சூளகிரி சிப்காட் நிலை 4 அலகு 5 தனி வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி சிப்காட் நிலை 4 அலகு 1 தனி வட்டாட்சியராக கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்.

    இவ்வாறு கிருஷ்ணகிரி கலெக்டர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
    • ஊராட்சி செயலர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊராட்சி செயலர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி கடம்பத்துார், திருவள்ளூர் தாலுகாவில் 14 ஊராட்சி செயலர்கள், சோழவரம், பூண்டியில் தலா 18 பேர், பள்ளிப்பட்டு -20 பேர், ஆர்.கே.பேட்டை-24 பேர், மீஞ்சூர்-23 பேர், பூந்தமல்லி-7 பேர், எல்லாபுரம்-25பேர், கும்மிடிப்பூண்டி-26 பேர், திருத்தணி-8 பேர், வில்லிவாக்கம்-3 பேர், திருவாலங்காடு-11 பேர் என மொத்தம் 211 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்ய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த பணியிட மாறுதல் அடுத்தமாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல், நடைமுறைக்கு வருகிறது.

    சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள ஊராட்சி செய லர்களை பணியில் இருந்து விடுவித்தது மற்றும் இடம் மாறுதலாகி பணியில் சேர்ந்த ஊராட்சி செயலர்கள் விவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    • கலெக்டர் உத்தரவு
    • பதவி உயர்வு பெற்றுள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாபு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த லட்சுமி போளூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா திருவண்ணா மலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வீடுகள்), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலராகவும்.

    அதேபோல் திருவண்ணாமலை மாநில ஊரக வாழ்வாதார மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பாண்டியன் கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கோபு புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு போளூர் வட்டார வளர்ச்சி அலுவல ராகவும், திருவண்ணாமலை வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பிரிதிவிராஜன் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    • 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.

     தாராபுரம் :

    தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    • நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த மணிமேகலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த பாண்டீஸ்வரி திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு தலைமை உதவியாளராகவும், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக இருந்த வளர்மதி மடத்துக்குளம் வட்ட வழங்கல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் கனிமங்கள் துணை தாசில்தாராக இருந்த அருள்குமார் திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    • ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • சங்கரன்கோவில் தாசில்தாராக ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாசில்தார்கள் வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டும், 2 துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தாசில்தார்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, ஆலங்குளம் மண்டல துணை தாசில்தாராக இருந்த சுடலைமணி என்பவர் தற்போது பதவி உயர்வு பெற்று மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோல் சங்கரன்கோவில் மண்டல துணை தாசில்தாராக இருந்த ராணி பதவி உயர்வு பெற்று சங்கரன்கோவில் தாசில்தா ராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் தென்காசி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராக இருந்த கங்கா தற்போது தேர்தல் தாசில்தாராகவும், அதேபோல் மேலும் 3 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒரே நாளில் 18 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 18 அலுவலர்கள் ஒரே நாளில் பல்வேறு நகராட்சிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இளநிலை உதவியாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வராஜ், மகேஸ்வரி, சக்திமுத்து, வருவாய் உதவியாளர்கள் பாக்கியலட்சுமி, மணிகண்டன், பாலமுருகன், யோகேஷ் குமார், முனியசாமி, கண்ணதாசன், அலுவலக உதவியாளர்கள் காளிமுத்து, முருகேசன், சண்முகப்பிரியா, சேக் முகமது, சதீஷ் முருகன், பாண்டி, முத்து, காளிராஜ் ஆகிய 18 பேர் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு நகராட்சிகளுக்கு ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒரே நாளில் 18 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நீதிபதி கே.எல்.பிரியங்கா பெருந்துறை நீதிமன்றத்திற்கு மாறுதலாகி செல்கிறார்.
    • வக்கீல்கள் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக கே.எல்.பிரியங்கா பணிபுரிந்து வந்தார். தற்போது சிவகிரி நீதிமன்றத்தில் இருந்து மாறு தலாகி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற த்திற்கு செல்ல இருப்பதால் அவருக்கு பிரிவு உபசார விழா சிவகிரி நீதிமன்ற அலு வலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வக்கீல்கள் சங்கத்தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் மருதப்பன், பிச்சையா, கண்ணன், யோக ராஜ், பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டியன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். பொருளாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

    ×