search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • முதியவரை மீட்ட நம்பிக்கை மனநல காப்பகத்தினர் சிகிச்சைக்காகவும், தகுந்த பாதுகாப்பிற்காகவும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • காப்பக பணியாளர்கள், ஓ.எஸ்.சி பணியாளர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி, நகர பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இந்திரா (65) மற்றும் மற்றும் மராட்டி மொழி பேசும் சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவரை மீட்ட நம்பிக்கை மனநலக் காப்பகத்தினர் சிகிச்சைக்காகவும், தகுந்த பாதுகாப்பிற்காகவும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு உதவிய நம்பிக்கை மனநல காப்பக நிறுவனர் சவுந்தர்ராஜன் மற்றும் திட்ட மேலாளர் விஜயா அதற்கு உறுதுணையாக இருந்த இன்ஸ்பெக்டர் கழனியப்பன், திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன், உடனடி முன்னாள் தலைவர் காளிதாஸ், முன்னாள் செயலாளர் மதன், உறுப்பினர் குமார் மற்றும் நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள், ஓ.எஸ்.சி பணியாளர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    • பரவை கண்மாய் அருகே பிணமாக கிடந்த முதியவர் யார்?
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் அருகே பரவை சின்ன கண்மாய் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கிராம உதவியாளர் குப்புசாமி ஆகியோர் கொடுத்த தகவல் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி,

    சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். வெள்ளை நிற முழுக்கை சட்டையும், பச்சை ஆரஞ்சு கோடு போட்ட டிரவுசரும் பூணூல் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வாடிப்பட்டி அருகே மயங்கி விழுந்து இறந்த முதியவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கட்டம் போட்ட டார்க் ப்ளூ கலர் சட்டையும், பொடி கட்டம் போட்ட ப்ளூ கலர் கைலியும் அணிந்திருந்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தை அருகே கடந்த திங்கட்கிழமை 80 வயது முதியவர் நடந்து வந்த போதுமயங்கி விழுந்தார். நீரோதான் கிராம நிர்வாக அதிகாரி சிவலிங்கம் அவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலு தவி சிகிச்சை செய்தபின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரிய வில்லை. கட்டம் போட்ட டார்க் ப்ளூ கலர் சட்டையும், பொடி கட்டம் போட்ட ப்ளூ கலர் கைலியும் அணிந்திருந்தார். மொட்டை அடித்த தலையில் சிறிது முடி வளர்ந்து இருந்தது. இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா தனது எல்லை கிராம பகுதியில் நேற்று ரோந்து பணி சென்றார்.
    • திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு முன்பாக சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்த நிலையில் கிடந்தார்.

    திருச்சி,

    திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லை பகுதியான தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா தனது எல்லை கிராம பகுதியில் நேற்று ரோந்து பணி சென்றார். அப்போது சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு முன்பாக சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்த நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவர் பெயர் ராமதாஸ் என்றும், மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.

    ஆனால் முழுமையான முகவரி எதுவும் கிடைக்கவில்லை. இதுபற்றி கிருஷ்ணபிரியா கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அவர் தொடர்பான தகவல்கள் இருந்தால் கோட்டை காவல் நிலையம் (94981 00628), இன்ஸ்பெக்டர் தயாளன் (94981 56633), சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் (94981 56879) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    • பிணமாக கிடந்த முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    • திடீர் நகர் போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை

    மதுரை டவுன் டி.பி.கே.ரோடு அமெரிக்கன் மிஷன் சர்ச் தெரு பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுரை திடீர் நகர் போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது முன்னங்கையில் சின்ன மருது, பெரிய மருது, அகமுடையார் என்ற எழுத்து பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் யார்? என்பது தெரியவில்லை. அவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் தங்களை பற்றி தெரிவித்து அவரது உடலை பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் சிலர் முகத்தை மூடியபடி கதவை உடைக்க முயன்றனர்.
    • காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே குருக்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம் விவசாயி. இவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நல்லசிவம் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

    அப்போது இரவு 10 மணி அளவில் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் ஒன்று அவரது தோட்டத்திற்குள் புகுந்து வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே செல்ல ஆயுத்த மாகியுள்ளனர். சில நபர்கள் நடமாடும் சப்தம் கேட்டு நல்லசாமி ஏதேச்சையாக ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் முகத்தை மூடியபடி கதவை உடைக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நல்லசிவம் சுதாரித்து கொண்டு சப்தமிட்டு, செல்போன் மூலம் அருகில் இருந்த வீட்டினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு அங்கு வந்துள்ளனர். இதைப்பார்த்த அந்த கும்பல் தப்பியோடியுள்ளது. இதுகுறித்து நல்லசிவம் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டி கொன்று நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதேபோல் காங்கேயம் அருகே உள்ள தம்மரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி ,அவரது மனைவி ஆகியோரை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. 6 மாதங்கள் கடந்தும் இந்த இரட்டை கொலையிலும் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.

    இந்நிலையில் அதே பாணியில் மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடனான கூட்டத்தை காவல் துறையினர் நடத்தியுள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டங்களில் தனியாக வசிக்கும் வயதானவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  

    • போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • சிறுமியின் தந்தை, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 76) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீ சில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணபதியை கைது செய்தனர்.

    • சேலம் செவ்வாய்ப் பேட்ைட காஸ்வே ரோடு குகை பகுதியில் முதியவர் மாயமானார்.
    • அவரது மனைவி மகாலட்சுமி பல்வேறு அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப் பேட்ைட காஸ்வே ரோடு குகை பகுதியை சேர்ந்தவர் ெஜகநாதன், (வயது 61). இவர் கடந்த 15-ந்தேதி காலை 7 மணிக்கு வெளியே வேலை தேடி செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு வீட்டில் வரவில்லை.

    அவரது மனைவி மகாலட்சுமி பல்வேறு அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கணவர் இதுவரை வீடு திரும்பாததால் மகாலட்சுமி செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான ெஜகநாதனை தேடி வருகின்றனர்.

    • குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர். ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர்.
    • இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). இவரது மனைவி சாந்தா. இருவரும், குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர்.

    ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    அவரை மீட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் முதியவர் மூழ்கி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம், சரவணப் பொய்கை குளத்தில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மிதப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு குளத்துக்குள் உடல் மிதந்த நிலையில் கிடந்தது. இது குறித்து பெரியார் பஸ் நிலைய தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். சரவண பொய்கை குளத்துக்குள் பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் என்பது தெரிய வந்தது.

    திருப்பரங்குன்றம் போலீசார் குளக்கரையில் இருந்த உடைமைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சரவண பொய்கையில் மூழ்கி இறந்தவர், மதுரை டி.ஆர்.ஓ காலனியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 62) என்பது தெரிய வந்தது. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று இரவு திருப்பரங்குன்றத்தில் தங்கி இருந்தார். அவர் காலை 10 மணி அளவில் குளிக்க சென்றதை அங்கு உள்ளவர்கள் பார்த்து உள்ளனர்.

    சரவண பொய்கை குளத்தில் முதியவர் வெங்க டேசன், மூச்சை அடக்கிய நிலையில் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் குஞ்சாகோடு பகுதியை சேர்ந்தவர் வேதமணி (வயது76). இவரது மனைவி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

    இதனால் தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி விஷப் பொடி தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவி னர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேதமணி உயிரிழந்தார்.

    இது தொடர்பாக அவரது மகன் ஜெபசிங் (43) என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இடது கால் அகற்றபட்டதால் வாழ்க்கை வெறுப்பு அடைந்த நிலையில் இருந்து வந்ததுள்ளார்.
    • இரணியல் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே கண்டன்விளை என்ற இடத்தை சேர்ந்த வர் லாசர் (வயது 67) இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இடது கால் அகற்ற பட்டதாக தெரிகிறது இதனால் வாழ்க்கை வெறுப்பு அடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஏதோ விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் மருத்துவர் கள் பரிசோதனை செய்து விட்டு வரும் வழியிலேயே லாசர் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அவரது மகன் ஜாய்லாசர் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×