search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பஸ் மோதி முதியவர் பாலியானார்.
    • ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    ஓமலூரை அடுத்த காமலாபுரம் கீழ்வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 72). இவர் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் விமான நிலையம் அருகே உள்ள முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு வந்த அரசு பஸ் சின்னப்பையன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சின்னப்பையன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானிசாகர் அண்ணா நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள பவானி ஆறு வட்டபாறை பகுதியில் முடுக்கன் துறை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதியவர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி யோகாசனம் செய்தார்.
    • கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை முகம்மது ஹபீபு வழியுறுத்தினார்.

    கடையநல்லூர்

    கடையநல்லூரில் உலக யோகாசன தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் இந்திய வரைபடத்தின் நடுவில் தீபம் மூலம் யோகாசனம் நடந்தது.

    உலகம் முழுவதும் இன்று உலக யோகாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடையநல்லூரில் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் முன்னாள் தலைவருமான முதியவர் முகம்மது ஹபீபு நேற்று இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், உலக நன்மைக்காக சிறப்பு யோகாசனங்களை செய்து காண்பித்தார்.

    • ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி அரசகுளம், மேலவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் நேசையன் (வயது 65). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று நேசையனுக்கும் மனைவி மேரிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், வீட்டின் அருகில் உள்ள வாழை தோப்பில் விஷ மருந்து தின்று ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நேசையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நேசையன் மகன் ஜெகன் (33) அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இதய பிரச்சனை காரணமாக முதியவர் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலம் செல்லாம்பாளையம் மேலூரை சேர்ந்தவர் கந்தசாமி(80). இவருக்கு இதய பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் கந்தசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

    சம்பவதன்று வீட்டில் இருந்து வெளியேறி வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு அவரது லுங்கியால் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பர்கூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிராக்டர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கயிறு அறுந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
    • தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றுஅவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    குனியமுத்தூர்:

    கோவை வெள்ளலூர் அண்ணாமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(81). இவரது வீட்டின் உள்ள கிணற்றில் மோட்டார் பழுதடைந்தது. இதனையடுத்து நேற்று டிராக்டர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கயிறு அறுந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றுஅவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை அனுப்பர்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(43). கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக ராஜ்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் விஷம் குடித்தார்.

    இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் குடும்பத்தினர் ராஜ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்.
    • உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,

    சென்னிமலை, ஜூன். 13

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி ரோடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது மலைப்பாதை ரோடு முதல் வளைவு பகுதியில் 65 வயது மதிக்க த்தக்க ஒரு முதியவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதிய வர் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. எனவே அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது.

    ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தியமங்கலம் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா கூகலூர் அரிஜன காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (57). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களைப் பிரிந்து மாகாளி சத்தியமங்கலம் அடுத்த வேலாங்காட்டு தோட்டத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவரை அவரது மகன் சரவணன் அவ்வப்போது சென்று பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மாகாளி சமைத்துக் கொண்டிருந்த போது மாகாளி வேட்டியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு செல்லவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த அவர் உடல்நலம் மோசமாகி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனி 6-வது வீதியை சேர்ந்தவர் பொன்னரசு (60). இவா் கடந்த 10 ஆண்டுகளாக மன சோர்வு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொன்னரசு சம்பவத்தன்று சல்பாஸ் மாத்திரையை (விஷ மாத்திரையை) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பொன்னரசை மீட்டு சிகிச்சைக்காக கருங்கல்பா–ளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை–யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • கிணற்றில் விழுந்து மற்றும் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). இவரது மனைவி கிருஷ்ணம்மாள். கருப்பசாமி தினமும் மது குடித்து விட்டு வந்ததால் கிருஷ்ணம்மாள் கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து வெளியில் சென்ற கருப்பசாமி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 68). இவர் நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மகன் புஷ்பராஜ் ஆவியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த முதியவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியை சேர்ந்தவர் செய்யது அலி என்ற அலிகான் (வயது 58), பத்மனாபபுரம் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்.

    இவர் அழகியமண்டபம் பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செய்யது அலி என்ற அலிகான் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவரது மகன் முகம்மது சர்ஜுன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஓட்டி வந்த குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.

    சீனாவில் சாலையை கடக்க தடுமாறிய முதியவரை போக்குவரத்து காவலர் தனது முதுகில் ஏற்றிக்கொண்டு சாலையை கடந்து சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #piggyback
    பீஜிங்:

    சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் உள்ள ஆறு வழிச்சாலையில் வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். இரண்டு ஊன்றுகோல்களின் உதவியால் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிக்னல் போடப்பட்டதால் வாகனங்கள் வர தொடங்கின.

    அப்போது அங்கு வந்த போக்குவரத்து காவலர் முதியவரை தனது முதுகில் ஏற்றி சாலையை கடக்க உதவினார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை பார்த்த அனைவரும் போலீஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர். பரபரப்பான சாலையில் முதியவருக்கு உதவி முன்வந்த போலீசாரின் செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் போக்குவரத்து துறை அந்த வீடியோவை இணையதளங்களில் பதிவு செய்துள்ளது. #piggyback

    ×