search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • விருதுநகர் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிச்சி இந்திராகாலனியை சேர்ந்தவர் முத்து(வயது55). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துவின் ராஜ்குமார் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வெல்லங்குடியை சேர்ந்தவர் நாராயணன்(28), வேன் டிரைவர். இவர் தனது வேனை பழுது நீக்கிவிட்டு மதுரையில் இருந்து ஊருக்கு திரும்பி னார். அப்போது வீரவ நல்லூரை சேர்ந்த மனோஜ்(30) உடன் சென்றார். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே வேன் சென்றபோது மனோஜ் திடீரென மயங்கி விழுந்தார்.அவரை உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நாராயணன் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை திருவிருந்தாள்புரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வி.எம்.நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் குருநாத் (41), ஓவியர். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இந்த நிலையில் மதுரை சென்று வருவதாக கூறிச் சென்ற அவர் மாயமாகி விட்டார். இந்த நிலையில் அவர் தனது அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அவரது மனைவி சங்கரேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
    • இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 400 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாத்திரை வாங்க வந்த முதியவர் ஒருவரிடம், ஆஸ்பத்திரி ஊழியர் மாத்திரை இல்லை என்று கூறினார். அதற்கு அந்த முதியவர் என்னால் நடக்க முடியவில்லை, கால்கள் நடுங்குகின்றன, எவ்வளவு முறை வர முடியும் என்று கேட்டார். அதற்கு அந்த ஊழியர் மாத்திரை இல்லை என்று கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டி அவரை வெளியே அனுப்பினார். இந்த காட்சியை, அங்கு நின்றிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

    • 50 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பல்லடம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சகாயராஜ் அடிகளார் 12 முதியவர்களின் பாதங்களை கழுவினார்.
    • புனித வெள்ளி வழிபாடு இன்று மாலை பேராலயத்தில் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் திருஇருதய பேராலயத்தில் மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் புனித வியாழன் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடை பெற்றது.

    முன்னதாக பேராலயத்தில் கூட்டு பாடல் திருப்பலி நடை பெற்றது.

    இதில் இயேசு கடைசி இரவு உணவின் போது தமது சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில், சகாயராஜ் அடிகளார் 12 முதியவர்களின் பாதங்களை கழுவினார்.

    தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்கு தந்தை பிரவின், ஆயரின் செயலர் ஆன்ரு செல்வகுமார் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் நற்கருணை பவனி நடை பெற்றது.

    இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    இயேசுவின் பாடுகளை தியானிக்கும் புனித வெள்ளி வழிபாடு இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருஇருதய பேராலயத்தில் நடை பெறுகிறது.

    சிலுவை பாதை வழிபாடு முடிந்ததும் சிலுவையி லிருந்து இயேசுவின் உடல் இறக்கப்பட்டு புனித வியாகுல மாதா ஆலயத்திற்கு பவனியாக கொண்டு செல்ல படுகிறது.

    • 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
    • அவர் உடல்நிலை சரியில்லாமல் சாலையோரம் படுத்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தார். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லாமல் சாலையோரம் படுத்து கிடந்தார். கடந்த வாரம் அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அந்த முதியவர் திடீரென உயிரிழந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவம் பார்ப்பதற்காக பிரசவ வார்டு அருகே உள்ள நோயாளிகள் காத்திருப்பு அறையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை ஊழியர்கள் மீட்டு வார்டில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு தீவிர உடல் நலபாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூப்பிட்டான் பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 82). இவரது மனைவி ராமாயி (80).

    இவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். ராமன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ராமனுக்கு உடல்நிலை மோசமானதால், பரமத்திவேலூர் தாலுகா, கோலாரத்தில் உள்ள அவரது மகள் சரசுவுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    அவரது மகள் ராமனை, நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராமன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள தென்பழஞ்சி பகுதியை சேர்ந்தவர் பாண்டி(வயது 77). இவருக்கு கோமதியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. திருமணமான ஒரு மகளின் வீட்டில் பாண்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    பாண்டிக்கு சொந்தமான தோட்டம் தென்பழஞ்சி பகுதியில் இருக்கிறது. நேற்று இரவு தோட்டத்திற்கு சென்ற அவர், இன்று காலையில் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பாண்டி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    பாண்டி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதித்து அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு 6,8 மற்றும் 11 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு ள்ளார்.
    • அவிநாசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் கணேசன் , தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 6,8 மற்றும் 11 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு ள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி மகளிர் போலீ சார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி பாலு குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்ட னை வழங்கி தீர்ப்பளித்தார் .

    இதனை தொடர்ந்து கணேசன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்ல ப்பட்டார்.

    • தோட்டத்திற்கு சென்ற தேவசிகாமணி அங்குள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க ஏறினார்
    • தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே வழுதலம்பள்ளம் அரசு விளையை சேர்ந்தவர் தேவசிகாமணி (87). வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்து வந்தார்.இவர் தன் வீட்டருகில் உள்ள தோட்டத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

    நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்ற தேவசிகாமணி அங்குள்ள முருங்கை மரத்தில் முருங்கைக்காய் பறிக்க ஏறினார்.அப்போது அவர் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க் கப்பட்டார். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக் கப்பட்டது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து போ னார்.

    இது குறித்து அவரது மகன் ராஜேஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.
    • இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நாமக்கல்:

    நல்லிபாளையம் காவல் நிலையம் பாப்பநாயக்கன்பட்டி கருங்கல் பாளையத்தை சேர்ந்த முனியப்பன் மகன் பிரகாஷ். இவர்தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு கஸ்தூரியின் தந்தை சுந்தரம் உள்ளிட்ட 6 பேர், பிரகாஷ் வீட்டிற்கு சென்று கவிதாவுக்கு அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு ஆதார் கார்டு வேண்டும் என்று கேட்டனர்.

    அப்போது பிரகாஷின் தாய் பழனியம்மாள் தகராறு செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×