search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212048"

    • தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை.
    • 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட உள்ளன. இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பீகார் மாநில அரசுக்கு எனது பாராட்டுகள்.

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் சாத்தியமற்றவை என்பதை முறியடிக்கப்போகும் இரண்டாவது மாநிலம் பீகார். ஏற்கனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

    தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை. எனவே, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பா.ம.க. நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
    • மதுவிலக்கை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது என்பது தான் அதன் பொருள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

    தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று ஐ.கோர்ட்டு பரிந்துரை வழங்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பா.ம.க. நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

    தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், 2021 தேர்தலில் அது குறித்த வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்று கூறி அரசு நழுவிக்கொள்கிறது.

    சட்டப்பேரவைத் தேர்தலில் அத்தகைய வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்றாலும் கூட, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன்முறையாக தில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மதுவிலக்கை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது என்பது தான் அதன் பொருள்.

    எனவே, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடப்பாண்டில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.
    • காரணம் எதுவாக இருந்தாலும், பட்டமளிப்பு விழாக்களை தாமதப்படுத்துவது நியாயமானதாக இருக்காது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமாக 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பெரும்பான்மையான பல்கலைக் கழகங்களின் இறுதி பருவத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, மே அல்லது ஜூன் மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தவிர வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.

    காரணம் எதுவாக இருந்தாலும், பட்டமளிப்பு விழாக்களை தாமதப்படுத்துவது நியாயமானதாக இருக்காது. எனவே, மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கு கவர்னர் மாளிகை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் நலன்களை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் நீதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
    • பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த தகுதியும், திறமையும் கொண்டவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை உயர்நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15% மட்டுமே பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி, எஸ்டி, ஓ.பி.சி. சிறுபான்மையினர்) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசின் சட்டத்துறை கூறியிருப்பது கவலையளிக்கிறது.

    உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை பரிந்துரைக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட்டு முப்பதாண்டுகளுக்கு மேலாகியும் நீதிபதிகள் நியமனம் சமூகப் பன்முகத்தன்மையும், உள்ளடக்கிய தன்மையும் கொண்டதாக மாறவில்லை என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

    பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் நீதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியும் கூட எந்த மாற்றமும் நிகழவில்லை. அறிவுரைகள் ஏற்கப்படவில்லை என்றால் சட்டம் இயற்றுவது தான் ஒரே தீர்வு. எனவே, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த தகுதியும், திறமையும் கொண்டவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் எந்த வகையிலும் தகுதி, திறமை குறைந்தவர்கள் அல்ல.
    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் இன்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த செவிலியர்களை பணிநீக்கியிருப்பது நியாயமல்ல.

    பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் எந்த வகையிலும் தகுதி, திறமை குறைந்தவர்கள் அல்ல. பணி நிலைப்பு செய்வதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் அறிவிக்கையின் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் மூலமாக இட ஒதுக்கீடு, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. 3,600-க்கும் கூடுதலான செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மிகவும் ஆபத்தான கொரோனா பெருந்தொற்று காலத்தில் செவிலியர்கள் பணியாற்றியதை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் அவர்களின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து விட்டு, அவர்களை காலியாக உள்ள இடங்களில் அமர்த்தி பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • விபத்தில் உயிரிழந்த அண்டை வீட்டாரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்ய வீட்டில் சட்டவிரோதமாக ஒரு டன் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை வைத்திருந்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதை காவல்துறை எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.

    விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்த அண்டை வீட்டாரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    பட்டாசு விபத்தில் சில வீடுகள் தரைமட்டமாகி விட்டன. 20 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அவற்றின் சேத மதிப்பை கணக்கிட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
    • ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னை-மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டன. கட்டணக் கொள்ளை குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்துத்துறை கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல்.

    ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத்துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

    ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதற்காக சட்டப்பூர்வ ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
    • மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. கூட்டணியில் இடம்பெற முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க. செயல்பாட்டிலும் மாற்றம் தெரிகிறது. தி.மு.க.வை விமர்சிப்பதில் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.

    சென்னை:

    2024 பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பலம் என்று தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் யோசித்து கொண்டிருக்கின்றன.

    சிறிய கட்சிகளோ எந்த அணியில் இடம் பிடிப்பது பலன் கொடுக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்துள்ளன. அந்த வகையில் பா.ம.க. இப்போதே கூட்டணி பற்றி யோசிக்க தொடங்கி விட்டது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வருகிற தேர்தலில் கூட்டணி மாறும் முடிவுக்கு வந்துள்ளது.

    அதற்கு காரணம் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவும், மத்தியில் பா.ஜனதா ஆட்சியே அமைந்தாலும் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகமும்தான்.

    2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. அப்போது 6 தொகுதியில் பெற்றிபெற்றது. அரங்கவேலு ரெயில்வே மந்திரியாகவும், அன்புமணி சுகாதார மந்திரியாகவும் இருந்தார்கள்.

    2014 தேர்தலில் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார்.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை.

    தற்போது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே வருகிற தேர்தலில் மீண்டும் 5 எம்.பி.க்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று பா.ம.க. விரும்புகிறது. எனவே கூட்டணி மாறும் முடிவுக்கு வந்துள்ளது.

    அதற்கு ஏற்ற வகையில் காய்களை நகர்த்தி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல் பா.ம.க. செயல்பாட்டிலும் மாற்றம் தெரிகிறது. தி.மு.க.வை விமர்சிப்பதில் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.

    உதயநிதி பதவி ஏற்பு விழாவை கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் புறக்கணித்த நிலையிலும் பா.ம.க. கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி பங்கேற்று உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    தி.மு.க.விலும் பா.ம.க. இணைவதை பலமாகவே நினைப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றது. இப்போது பா.ஜனதாவின் வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது. எனவே 4 சதவீதம் வாக்கு வங்கியை வைத்திருக்கும் பா.ம.க.வை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளவே தி.மு.க. விரும்பும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பா.ம.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, எந்த கூட்டணி எங்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    • 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?
    • இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும். நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக இருந்தது.

    ஆனால், அதையெல்லாம் முறியடித்து ராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது.

    அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்குவங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

    இமாச்சல சட்டப் பேரவைத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

    அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது.

    இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது?

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

    ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும்.
    • வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.

    புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்.

    நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

    திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலோரப்பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • தேவையான எண்ணிக்கையில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
    • அத்துடன் ஒவ்வொரு பருவத்திலும் தமிழுக்கு 45 பாடவேளைகளை ஒதுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, தன்னாட்சி பெறாத, பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான முதல் இரு பருவங்களில் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அண்ணா பல்கலை. அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு செய்வதைவிட தமிழ் மொழியை அவமதிக்க முடியாது; தமிழை கட்டாயப்பாடமாக்கியதன் நோக்கத்தை இது சிதைத்து விடும்.

    தமிழ்நாட்டில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடங்களை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களும், 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான தமிழ்ப் பாடங்களை தமிழிலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் தான் நடத்த முடியும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை நடத்துபவர்கள் தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம் செய்யப்படுவதன் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், தகுதியான தமிழ்ப் பேராசிரியர்களைக் கொண்டு தான் தமிழ்ப்பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான எண்ணிக்கையில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொரு பருவத்திலும் தமிழுக்கு 45 பாடவேளைகளை ஒதுக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில் 2-ம் ஆண்டிலும் தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்பட வேண்டும். தமிழ்ப் பாடங்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய திட்டங்கள் மூலம் பொறியியல் மாணவர்களின் தமிழறிவை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×