search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 212363"

    • மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.பெரியபாளையம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ப்ளூ லைன் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சாலையோரம் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தீனதயாள், ராஜேஷ் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருநகரியில் நடந்த விழாவில் 350 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நெப்பத்தூர் மீனாட்சி உதவிபெறும் தொடக்கபள்ளி மாணவர்களுக்கு குடைகளை வழங்கினார்.

    சீர்காழி:

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 60வது மணி விழா பிறந்தநாளையொட்டி திருவெண்காடு பகுதியில் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விடுதலை கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவனின் மணிவிழா பிறந்தநாளை யொட்டி திருவெண்காடு பகுதியில் கட்சியினர் பல்வேறு நலத்திட்டஉதவி களை வழங்கினர்.

    திருநகரியின் நடந்த விழாவில் 350 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழச்சிக்கு முன்னாள் நெப்பத்தூர் ஊராட்சி த்தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

    கட்சி நிர்வாகி ஸ்டாலின் வரவேற்றார்.

    இதில் வி.சி.க முன்னாள் மாவட்ட செயலாளர் மா.ஈழவளவன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

    மேலும் அவர் கீழ நெப்பத்தூர் மேற்கு ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பட்டன.

    மேலும் நெப்பத்தூர் மீனாட்சி உதவிபெறும் தொடக்கபள்ளி மாணவ ர்களுக்கு குடைகள் ஆகியவற்றை வழங்கினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் பாரதிவளவன், சிவக்குமார், ரகுராஜ் உள்ளிட்டதிரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப ட்டன.

    • 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா உபய வேதாந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935; மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கி பேசியதா வது, தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சி த்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையும், வருவாய்துறையின் சார்பில் 31 பேருக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாவும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 700 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரமும், வேளாண்மைத் துறை சார்பில் 17 பேருக்கு ரூ.25 ஆயிரத்து 235 மதிப்பீட்டில் இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பேருக்கு மரக்க ன்றுகளும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என கூறினார்.

    முன்னதாக அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திட்ட விளக்ககண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்.சித்ரா, ஆர்.டி.ஓ சங்கீதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) கண்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், தாசில்தார் பத்மினி, உபயவேதந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.
    • அரியவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    அவிநாசி :

    குறு, சிறு தொழில் தொழிற்பேட்டை சங்கம், அவிநாசி ரோட்டரி இணைந்து வேட்டுவபாளையம் ஊராட்சியில் உள்ள சிறுதொழில் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.இதில், அரிய வகை மரங்களான பாவட்டம், மலை பூவரசு, கள்ளிச்சி, சரக்கொன்றை, வாகை, வெப்பாலை, இலந்தை உள்ளிட்ட 80 வகைகளில் 800 மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் அரியவகை மரக்கன்றுகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நடவு செய்யப்பட்டது.

    இப்பகுதியில் மழைப்பொழிவு, நீர் வளம் குறைவு என்பதால் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வசதியாக, சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு 'போர்வெல்' மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கால்நடைகளால் மரக்கன்று சேதமாவதை தவிர்க்க கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு தொடக்கி வைத்தார்.
    • விழாவின் முடிவில் விடுதியின் பின்புறம் தென்னங்கன்றுகள் நடப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேலூர் ஊராட்சி தண்டலச்சேரி அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கொடிமேடை அமைத்து, தேசிய கொடியேற்றி,தென்னை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெ.சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.மாணவியர் விடுதி காப்பாளினி வ.ஆனந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இந்து சமய அறநிலையத்துறை பணி நிறைவு தை.ஜெயபால், முன்னிலையில் வேளூர் கிராம நல விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் தங்கவேல்,செல்லப்பா, நாராயணன்,கல்லூரி பேராசிரியர் நடேச மகரந்தன்,வேளூர் தினேஷ் குமார், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் வேதகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் இளம்பரிதி, கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பணிதள மகளிர் பொறுப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராம பொதுமக்கள், கல்லூரி மாணவியர்கள், பெற்றோர்கள் விடுதி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விடுதியின் பின்புறம் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • பல வகையான 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர்.
    • கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை கடந்த 2003-ம் ஆண்டு எதிர்த்தனர்.

    திருப்பூர் :

    விகாஸ் சேவா டிரஸ்ட், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோட்டரி சங்கம், வனம் இந்தியா பவுண்டேசன், கே.பி.என்.காலனி வாக்கர் கிளப் சார்பில் விகாஸ் சேவா டிரஸ்டுக்கு சொந்தமான திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள நிலத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. பல வகையான 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி வரவேற்றார். இனிவரும் காலத்தில் அடர்வனம் அமைப்பது மற்றும் பல மரக்கன்றுகளை தொடர்ச்சியாக நடுவது என முடிவு செய்யப்பட்டது.

    விழாவில் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி பேசியதாவது:- விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு எதிர்புறம் உள்ள 8.90 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தது. கூலிபாளையம் பொதுமக்கள், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களின் பெற்றோர் இணைந்து கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை கடந்த 2003-ம் ஆண்டு எதிர்த்தனர். அதன்பிறகு அப்போதைய ஈரோடு கலெக்டரின் பரிந்துரைப்படியும், ஊர் மக்கள் கூறியதற்கு ஏற்பவும், விகாஸ் சேவா டிரஸ்ட் சார்பில் 14 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி திருப்பூர் மாநகராட்சிக்கு தானமாக கொடுத்து அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது.

    அதற்கு பதிலாக விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு எதிர்புறம் உள்ள 8.50 ஏக்கர் நிலத்தை எங்கள் டிரஸ்டுக்கு பதில் நிலமாக மாற்றித்தர கடந்த 2006-ம் ஆண்டு ஈரோடு கலெக்டர், பரிந்துரை கடிதம் வழங்கினார். அதன் பின்னர் விகாஸ் சேவா டிரஸ்டின் பெயரில் கடந்த ஆண்டு நில கிரையம் செய்து சிட்டா, பட்டா மாற்றம் செய்யப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50 மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப் பணி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பள்ளியில் (எல்வின் நிலையம்) நடந்தது. பள்ளி நிர்வாகி தயாளன் பர்னபாஸ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட வேம்பு. புங்கை. அரசமரம் மற்றும் புளியமர கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

    இந்த மரக்கன்றுகள் சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களால் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    75 இளங்கலை வணிகவியல் துறை மாணவர்கள் மற்றும் 50 மன

    வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் விரிவாக்கப் பணி பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார்.

    • வழங்கப்பட்ட மரக்கன்று அனைத்தையும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதை கண்காணித்து மரமாக்க வேண்டும்.
    • சுகாதாரமான காற்று நல்ல மழை இயற்கை வளம் மற்றும் நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் பசுபதிகோவில் ஊர்ப்புற நூலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக பசுபதிகோவில் ஊர்ப்புற நூலக வளாகத்தில் மரக்கன்று நடுதல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சாவூர் மாவட்ட துணை தலைவரும் மற்றும் நூலகருமான முருகானந்தம் செய்து இருந்தார். கூட்டத்திற்கு அண்ணா மனு மலர்ச்சி ஊராட்சி நூலகர் பிச்சை ரெத்தினம் தலைமை தாங்கி வாசகர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மரகன்று வழங்கினார்.

    நூலகர் முருகானந்தம் நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களை மரகன்று நட்டு மாண வர்களிடம்பேசுகை யில், மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னா ர்வர்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    அதன் ஒரு பகுதியாக நமது நூலகம் மற்றும் நமது கிராம பகுதிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடத்த ப்பட்டது. வழங்கப்பட்ட மரக்கன்று அனைத்தையும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதை கண்கா ணித்து மர மாக்க வேண்டும். நமக்கு சுகாதா ரமான காற்று நல்ல மழை இயற்க்கை வளம் மற்றும் நோய் தொற்றில் இருந்தும் காப்பாற்ற அனைவரும் மரங்களை வள ர்க்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சரவணன், தாமஸ் பீர்முகமது, தமிழ்ச்செல்வி மற்றும் வாச கர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி கிளையின் வங்கி மேலாளர்கள் காசிராஜன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு 300 மரக்கன்றுகளை வழங்கினர்.

    அவைகளை கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மனோஜ்குமார், ராஜூவ் காந்தி, தேவி ஆகியோர் நட்டு ஏற்பாடு செய்தனர்.

    • குளங்களில் கரையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளிவாசல் தெரு, வார்டு 6, மரைக்காயர் தெரு வார்டு 13-ல் மரங்கள் நடுதல் என 45-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • மணியன் குளம் அருகில் “என் குப்பை என் பொறுப்பு” என்ற பிளக்ஸ் வைக்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு படியும், மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் வழிகாட்டுதல் படியும், மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பாப்பாத்திகுளம், ஆதி திராவிடர்குளம், மணியன் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் சுத்தம் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் கழிவுகள் திடக்கழிவுகள் நீக்கி சுத்தம் செய்யப்பட்டன.

    அம்மா குளம், ஆதிதிராவிட குளத்தில் கருவேல மரங்கள், ஆகாய தாமரைகள்அகற்ற ப்பட்டன. மேலும் படப்பை காடு வார்டு 1, மேல சூரியதோட்டம் வார்டு 2 ஆகியவற்றில் வடிகால் சுத்தம் செய்யப்பட்டது.

    இதேபோல் மணிய ன்குளம், ஆதி திராவிடர் குளம் உள்ளிட்ட குளங்களில் கரையோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளிவாசல் தெரு, வார்டு 6, மரைக்காயர் தெரு வார்டு 13-ல் மரங்கள் நடுதல் என 45-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.இதேபோல் மணியன் குளம் அருகில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற பிளக்ஸ் வைக்கப்பட்டது. மேலும் நீர் நிலைகள் அருகில் உள்ள குப்பைகள் எல்லாம் அகற்றம் செய்யப்பட்டது.இதில் பேரூராட்சி மன்ற தலைவர் வகிதா பேகம் ஹாஜா, மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியி ருப்பு நல சங்கம், தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • “மரக்கன்று நடுதல் பணியில் வனத்துறையின் பங்கு” என்ற தலைப்பில் பேசினார்.
    • தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன்தலைமை வகித்து மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி குருகுல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன மகோத்சவம் வார நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக பசுமை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன்த லைமை வகித்து மாணவி களுக்கு மஞ்சப்பை வழங்கி னார். கோடியக்கரை வனவர் பெரியசாமி "மரக்கன்று நடுதல் பணியில் வனத்துறையின் பங்கு" என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக லண்டன் வாழ் தமிழர் புஷ்பா ராமானுஜம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கலந்து கொண்டார். உதவி தலைமை ஆசிரியை கற்பக சுந்தரி வன மகோத்சவம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார், முன்னதாக தேசிய பசுமை படை இணை ஒருங்கிணைப்பாளர் சாந்தினி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஒருங்கிணை ப்பாளர் கற்பகவல்லி நன்றியுரையா ற்றினார். இறுதியாக பள்ளி வளாக த்தில் மரக்கன்றுகள் நடப்ப ட்டன.

    • ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் வசந்த் ஆகியோருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சத்யா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் தாமோதரன், பண்ணை வடிவமைப்பாளர் ரகுராமன், ஈஷா மைய தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசி ராஜன், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லிங்கத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். நில உரிமையாளர்கள் கார்த்திகேயன், வசந்த் ஆகியோர் வரவேற்றனர்.

    ×