search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 213161"

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.
    • இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    சிறுமுகை:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    வருகிற 19-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் குண்டம் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனையும், 23-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    24-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 25-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நடக்கிறது.

    தொடர்ந்து 26-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி காலை 10 மணிக்கு முதல் மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆடி அமாவாசை பூஜைகள், இரவு 7 மணிக்கு பரிேவட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    29-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல், ஆகஸ்டு 1-ந் தேதி காலை 10 மணிக்கு 108 குத்துவிளக்கு பூஜை, 2-ந் தேதி மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகிறார்கள்.  

    • மோத்தேபாளையம் கிராமத்தில் கொங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இரணிய நாடக சபா என்ற தெரு கூத்து கலைஞர்களை கொண்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

    காரமடை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் கொங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை முன்னிட்டு இரணிய தெரு கூத்து நாடகம் நடைப்பெற்றது.

    வாக்கனாங்கொம்பு இரணிய நாடக சபா என்ற தெரு கூத்து கலைஞர்களை கொண்டு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. பண்டைய கால வரலாற்று ஆன்மிக சம்பவங்களான இரனியனை வதம் செய்யும் நிகழ்ச்சியே இந்த நாடகம். இதில் அசுரன் இரனிய கஷிபுவை, நரசிம்மர் வதம் செய்வது போன்று நடித்து காண்பிக்கப்பட்டது. இதனை மக்கள் இரவு முழுவதும் கண்விழித்து கண்டு ரசித்தனர்.

    இதுகுறித்து இரணிய நாடக சபா சண்முகம் கூறியதாவது:-

    63 ஆண்டுகளாக இந்த நாடக அரங்கேற்றத்தை எங்கள் முன்னோர்கள் நடத்தி வருகின்றனர். தற்போது நாங்கள் எடுத்து நடத்தி வருகிறோம். பண்டைய கால மக்களின் வாழ்வில் கோவில் திருவிழா என்றால் தெருக்கூத்து நாடகம் தான் நியாபகம் வரும். பல ஆன்மிக கதைகள் நாடகங்களாக மக்கள் முன்பு போடப்பட்டு அவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    மோத்தேபாளையம் கொங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அசுரன் இரனிய கஷிபுவை, நரசிம்மர் வதம் செய்யும் நாடகம் நடத்தப்பட்டது. இந்த ஆன்மிக நாடகத்தில் உள்ளூரை சேர்ந்த வாலிபர்களே பங்கேற்று அனைத்து வேடங்களிலும் தங்களது திறமையை காட்டினர்.

    தற்போது உள்ள சூழலில் கோவில் விழாக்களில் சினிமா ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை அனைவரையும் ஏற்பாடு செய்து வரும் நிலையில் பண்டைய கால நடைமுறைப்படி நம் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாக உள்ள தெருக்கூத்து நாடகங்களை கிராமத்தில் மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இந்த கிராம மக்கள் இறங்கியுள்தை பாராட்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • வீட்டிற்குள் சென்றவர், தான் அணிந்திருந்த உடையை கழற்றி விட்டு, அரை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார்.
    • வாலிபரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காரமடை

    கோைவ மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது(வயது22). இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று சாகுல்ஹமீது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள தெருவில் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் வெளியில் வந்து குழந்தைகளையே பார்த்து கொண்டிருந்தார்.

    சில நிமிடங்களில் என்ன யோசித்தார் என தெரியவில்லை. திடீரென வீட்டிற்குள் சென்றவர், தான் அணிந்திருந்த உடையை கழற்றி விட்டு, அரை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார்.

    நேராக குழந்தைகள் விளையாடிய பகுதிக்கு சென்று அவர்கள் முன்பு நின்றார். இதனை அங்கு விளையாடிய சிறுவர், சிறுமிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அங்கிருந்து தங்களது வீட்டிற்கு ஓடிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் சிறுவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர்கள் நேராக மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சாகுல்ஹமீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேராக அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையத்தில் தம்பி திருமண நிகழ்ச்சியில் மதுகுடித்துவிட்டு வந்ததை கண்டித்ததால் கூலித் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது33), கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அய்யப்பனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அய்யப்பனின் தம்பி தியாகராஜனுக்கு நேற்று நடைபெற்ற திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சிக்கு அய்யப்பன் மதுகுடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த அய்யப்பன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டுக்கு வந்த அவர் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரி பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×