என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிறந்தநாள்"
- முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
- அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் நீதி காவலர் வி.பி.சிங்-கின் 94-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வி.பி.சிங் சிலை நிறுவப்பட்ட பிறகு அரசு சார்பில் முதல் பிறந்தநாளான இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
- உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன், சீமான், தொல். திருமாவளவன், அன்புமணி இராமதாஸ், டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் திமுகவிலிருந்து யாரும் வாழ்த்து சொல்லவில்லை. குறிப்பாக தமிழ் திரைத்துறையில் நடிகராக தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆனால் விஜயின் இந்த வாழ்த்து செய்திகளே ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசிற்கு எதிராக பதிவிட்டதும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசியதும் திமுக அரசிற்கு நெருக்கடியை உருவாக்கியது.
இதனால் தான் விஜய்க்கு திமுகவிலிருந்து யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
- வாழ்த்துக் கூறிய அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
"எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும். சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கமல்ஹாசன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய நெல்லை முபாரக்,
சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர். மதிப்பிற்குரிய கே. அண்ணாமலை.
முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய எஸ். திருநாவுக்கரசர். முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய டி. ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்" என்று கூறியுள்ளார்.
- இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
- தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம்
இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களிடம் அதானி உரையாடியுள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், நிச்சயத்தன்மையற்ற சூழலிலும்கூட இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
ஸ்திரத்தன்மை , கூட்டுறவு மற்றும் வளர்ச்சியில் இந்தியா தொடந்து முன்னேறி வருகிறது. இது இந்தியாவிற்கான தருணம். நாட்டின் உள்கட்டமைப்பில் மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. ரூ.11 லட்சம் கோடி வரை மத்திய அரசு இந்த நிதியாண்டில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தையதை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.
அரசாங்கத்திற்காக நாம் கடந்த 2023 ஆம் ஆண்டு பல வெற்றிகரமான பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறோம். அதானி பசுமை சக்தி நிறுவனத்தின்மூலம் குஜராத்தில் உலகிலேயே பெரிய சுத்தீகரிப்பு சக்தி கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பலநூறு கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் இந்த கட்டமைப்பு மூலம் 30,000 மெகாவாட் மின்சார தயாரியப்பு செய்யும் திட்டம் வருங்காலங்களில் இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மும்பையில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இதற்கிடையில் தாராவியை ஆக்கிரமிக்கவே அதானி குழுமத்திடம் இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்களும் எதிர்க்கதிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).
- இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் "விசில் போடு" ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைதொடர்ந்து, விஜய்யின் 50-வது பிறந்த நாளை ஒட்டி கோட் படத்தின் இரண்டாவது பாடல், "சின்ன சின்ன கண்கள்" இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பாடலின் குட்டி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. அதனபடி சின்ன சின்ன கண்கள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கபிலன் வைரமுத்து வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் யுவனின் தங்கையும் மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் ஏ.ஐ குரலில் இந்த 'சின்ன சின்ன கண்கள் பூக்கிறதோ' பாடல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று நள்ளிரவு 12 ணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு GOAT படத்தின் 50 வினாடிகள் கிலிம்ஸ் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யுவன் சங்கர் ராஜா, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GOAT விஜய்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- பிரபுதேவா, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் அன்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தளபதியாக இருந்து அரசியல் கட்சித் தலைவராக பரிணமித்துள்ள நடிகர் விஜய் இன்று [ஜூன் 22] தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் ஆகியோர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யின் 68 வது படமான GOAT படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபுவும், நடிகரும் மக்கள் நீதி மைய்யத் தலைவர் கமல் ஹாசனும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
GOAT படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் GOAT விஜய்' என்று தனது சமூக வளைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது வாழ்த்து செய்தியில், எனக்கு மிகவும் பிடித்த மனிதர் விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு மிகவும் மேஜிக்கலாக அமைந்தது. வாய்ப்புக்கும் கோட் பட செட்டில் உங்களுடன் ஏற்பட்ட நியாபங்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் தனது வாழ்த்து செய்தியில், 'என் அன்பு விஜய் சாருக்கு வாழ்த்துகள், இந்த வருடமும் உங்களுக்கு சிறந்ததாக அமையும், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஒன் அண்ட் ஒன்லி தளபதி விஜய் சார். லவ் யூ' என வாழ்த்து தெரிவித்துளளார். விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கிய பிரபுதேவா, விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'என் அன்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீயும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதவிர GOAT பட கதாநாயகி மீனாட்சி சவுத்திரி, நடிகை லைலா ஆகோயோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் ரீரிலீஸ் செயப்பட்டன. மேலும் GOAT படத்ததின் கிளிம்ஸ் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நேற்று நள்ளிரவு வெளியிட்டது. மேலும் இன்று மாலை 6 மணிக்கு GOAT படத்தில் இடமபெற்றுள்ள சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுத் திட்டம் வாயிலாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டமும் தற்போது அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இனி வரக்கூடிய நாட்களில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் கூடுதலாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளி தரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது. வழக்கமான மதிய உணவு வழங்கப்படுவதில்லை. இதை மாற்றி இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் அளிக்கலாம் என்று சமூக நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு மாணவருக்கு ரூ2 ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து 71 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்கான செலவீனத்துக்காக 4 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.
இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.
தமிழ் திரையுலகில் இசை ஜாம்பவானாக வலம் வரும் இளையாராஜா வாழ்க்கை சினிமா படமாக உள்ளது. இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். மேலும், இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு பிரத்யேகமாக இசையமைப்பாலர் என்றூ யாரும் இல்லை, இளையராஜா உருவாக்கிய சிம்ஃபனிகளை பயன்படுத்தி படம் உருவாகவுள்ளது.
பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
"பிறந்தநாள் வாழ்த்துகளை நீங்கள்தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத்தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; எனக்கு அது இல்லை. நன்றி... வணக்கம்" என்று உருக்கமாக கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமூக வலைதளத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
- நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வீரபத்திர சாமி கோவிலுக்கு ரூ.12.5 லட்சம் நன்கொடை.
- தேவாரா படத்தின் முதல் சிங்கிள் அச்சம் என்ற பாடலும் வெளியானது.
திருப்பதி:
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது 41-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள செய்யேறு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திர சாமி கோவிலுக்கு ரூ.12.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
மேலும் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ஆந்திர பிரதேச முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார்.
ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவாரா படத்தின் முதல் சிங்கிள் அச்சம் என்ற பாடலும் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
பிறந்தநாளையொட்டி கோவிலுக்கு ஜூனியர் என்.டி.ஆர். நன்கொடை அளித்திருப்பதை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
- கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல சுவாரசியமான திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
- லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளனர்
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல சுவாரசியமான திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார், மேலும் இந்தியன் 2, கல்கி 2898 ஏ.டி போன்ற படங்களில் நடித்து இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கிறது.
தற்பொழுது கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இவர்கள் சமீபத்தில் வந்த லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இவரே இயக்கியுள்ளனர்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- அவர் நடித்து வரும் அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு முதல் படத்திலேயே திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வாயாடி பெண்ணாக படத்தில் அவர் நடித்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. உடல் கவர்ச்சியை காட்டாமல் வசீகரம் கலந்த முகத்துடன் உள்ள அவரது நடிப்பு மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி திரை உலகங்களில் பேசப்படும் வகையில் அமைந்தது.
அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. நிதேஷ் திவாரி இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சாய் பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் தண்டேல் படக்குழு ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்தது அந்த வகையில் அவர் நடித்து வரும் அமரன் திரைப்படக்குழு சாய் பல்லவியை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். கமல்ஹாசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் செய்கிறார்.
சிவகார்த்திகேயேன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்திய ராணுவப் படை வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்