search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • சிவகாசியில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
    • இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

    சிவகாசி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் இணைந்து சின்னமருது கபடி குழு மற்றும் பன்னீர்செல்வம் கபடி குழுவினர் நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கபடி போட்டியை சிவகாசி அருகே ரிசர்வ்லைன் மினி ஸ்டேடியத்தில் 2நாட்கள் நடத்தியது.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி சங்க துணைத் தலைவருமான ராஜ்சத்யன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு தொகை வழங்கினர்.

    இந்த போட்டியில் விருதுநகர், மதுரை தேனி, திண்டுக்கல், நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து 100 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் தமிழ்பாடி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முதல் பரிசாக 12 அடி கோப்பை மற்றும் ரூ.15ஆயிரமும், 2-ம் பரிசாக 10 அடி கோப்பை ரூ.12ஆயிரமும், 3-ம் பரிசாக 8 அடி கோப்பை ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.

    4-ம் பரிசாக 6 அடி கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம், 5-ம் பரிசு முதல் 8-ம் பரிசு வரை 4 அடி கோப்பை மற்றும் ரூ.4 ஆயிரம் 9-வது பரிசு முதல் 12-ம் பரிசு வரை 2 அடி கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய் ஆனந்த், வழக்கறிஞர் மாரீசுவரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ், லட்சுமி நாராயணன், ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டனர்.
    • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரங்கின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூரில் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை 9 நாட்களுக்கு தமிழக அரசின் திருவாரூர் புத்தகத் திருவிழா நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையிலான மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசுத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை இணைந்து நடத்தினர்.

    கல்லூரி, பள்ளி மாணவர்கள், ஏராளமான பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றனர்.

    தினந்தோறும் சிறந்த தமிழறிஞர்களைக் கொண்டு புத்தகம் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற்றது.

    மேலும் பள்ளி மாணவ மாணவிகளிடம் பேச்சுப்போட்டி ஓவிய போட்டி விமர்சனப் போட்டி கள் என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பரிசுகள் வழங்கினார்.

    இந்த புத்தகத் திருவிழாவில் சிறை கைதிகள் பயன்பெறும் வகையில் புத்தக சேகரிப்பு அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது இதில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் புத்தகங்களை வழங்கினர் சுமார் 5000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரங்கின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடந்தது.
    • போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் செயின்ட் ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட் 13-வது ஆண்டு விழா நடந்தது.

    விழாவில் கல்லூரி தாளாளர் ஜோசப் லயனல் மற்றும் முதல்வர் மேரி கரோலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் அமுதா தலைமை தாங்கி மாணவ- மாணவிகளை வாழ்த்தி பேசினார்.

    பின்னர், மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாணவிகள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடந்தது.

    தொடர்ந்து, தேர்வு, வருகை பதிவு, மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும், கலந்துகொண்ட வர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.

    • குறும்பட போட்டியில் மதுரை மாநகர போலீசுக்கு முதல் பரிசு கிடைத்தது.
    • முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

    மதுரை

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் கூடுதல் இயக்குநரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் போலீசாருக்கிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 45 குறும்பட வீடியோக்கள் பங்கேற்றன.

    அவற்றை காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு தணிக்கை குழு ஆய்வு செய்தது. இதில் முதல் பரிசாக ரூ. 35 ஆயிரத்தை மதுரை மாநகர காவல் துறையினர் பெற்றனர். 2-வது பரிசு ரூ.25 ஆயிரத்தை கோவை போத்தனுர் ெரயில்வே காவல்துறையினரும், 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை திருவாரூர் மாவட்ட காவல் துறையினரும் பெற்றனர்.

    பரிசு தொகையையும், சான்றிதழையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் வழங்கினார். முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.

    • எஸ்.என்.கல்லூரியில் கல்லூரி தின விழா நடந்தது.
    • சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை சரசுவதி நாரா யணன் கல்லூரியின் 57வது கல்லூரி தினவிழா கல்லூரி செயலர் நாரா யணன் தலைமையில் நடை பெற்றது. துணை முதல்வர் மோதிலால் வரவேற்று பேசினார்.

    முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக, கல்லூரி வளர்ச்சிக்குழு டீன் கண்ணதாசன் பேசுகை யில், மாணவர்கள் தனித்திற மைைய வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில் பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களும், மதிப்பெண் பட்டியலும் ஒரு சிறந்த வேலை வாய்ப்பை உரு வாக்க முடியாது என்று கூறினார்.

    பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி நன்றி கூறி னார்.

    • கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 339 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இளையான்குடி வட்டம் கீழாயூர் கிராமத்தில் அரவிந்தன் என்பவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்ததையொட்டி அவரது வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பேட்டரி தெளிப்பான்களையும், 3 பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,465 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 395 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பண்ணைக் கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

    மேற்கண்டவை உள்பட மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 9 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரியின் பல்வேறு துறைகள் மற்றும் சங்கங்கள் 2022-23 கல்வியாண்டில் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

    காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் கல்வியிலும், கல்வி சார்ந்த பிற தகுதிகளையும் வளர்த்து கொண்டு சிறந்த விளங்க வேண்டும். போட்டிகளில் பரிசு பெறுவதைக் காட்டிலும் போட்டிகளில் கலந்து கொள்வதே சிறப்பானது. அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள் தயங்காமல் கலந்து கொள்ள வேண்டும் என்றார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். கணிதத்துறைத் தலைவர் லலிதாம்பிகை நன்றி கூறினார். விழாவில் 1,050 மாணவர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். 

    • சிவகங்கை மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற 3 பட்டுக்கூடு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
    • விவசாயி ராமையாவுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்ற 3 பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விவசாயிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி ரொக்கப்பரிசுக்கான காசோ லைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதில், விவசாயத்திற்கு தனிகவனம் செலுத்தி விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி குமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்றதற்காக முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், சிவகங்கை வட்டம், கூத்தாண்டன் கிராமத்தில் விவசாயி அமுதாராணி 2 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு வளர்த்து அதிக மகசூல் பெற்றதற்காக 2-ம் பரிசு ரூ.20ஆயிரமும், காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி ராமையாவுக்கு 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது என்றார்.

    அப்போது பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.

    • நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சவகர் சிறுவர் மன்றம் ஆகியவன சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தஞ்சை கலை பண்பாட்டு துறை மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை தமிழ் சங்க தலைவர் மார்கோனி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து மங்கல இசைகள், தேவாரப் பண்ணிசை, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்ச்சங்க செயலாளர் கோவி நடராஜன், பொருளாளர் சொர்ணபால், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    விழாவில் இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மிருதங்க ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

    • ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
    • அவ்வைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, துளசியாபட்டினத்தில் உள்ள ஔவையார் கோவிலில் தமிழக அரசு சார்பில் 49-வது அவ்வை பெருவிழா தொடங்கியது.

    3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்த அவ்வை பெருவிழா நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகும். ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை, அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றி கொள்ள வேண்டும்.

    மேலும், ஒளவைக்கு துளசியாபட்டினத்தில் ரூ. 18.5 கோடியில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தஞ்சை கலை பண்பாட்டு துறையினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம் ஆகியவைகள் நடந்தது.

    பின்னர், இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.

    விழாவில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, ஊராட்சி தலைவர்கள் தமிழ் செல்வி, வனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • போட்டிக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் போட்டிகளில் பங்கேற்றன.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசை பாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.

    போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இதில் ஆலங்குளம் காளத்திமடம் அணி 3-வது இடமும், சேரன்மாதேவி ஏ.வி.எஸ். கபடி குழு 2-வது இடமும், குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும் பெற்றது.

    இதில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.15ஆயிரம், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 10ஆயிரமும், 3 மற்றும் 4-ம் இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், மாவட்ட உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தி.மு.க. நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம்,காளிசாமி மற்றும் பிரகாஷ் ஜெயக் குமார், கேபிள்கணேசன், முருகன், வைரவேல், குமார், கோமதிசங்கர், பிர பாகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பரிசு அனுப்புவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது.
    • வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள வேளாங்குளத்தை சேர்ந்தவர் பிரசாத். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (வயது30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிரசாத்தின் நண்பர் என தகவல் அனுப்பப்பட்டி ருந்தது. இதனை நம்பி கவுசல்யாவும் அவ்வப்போதும் அந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்தார்.

    கடந்த 7-ந் தேதி அந்த எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. தனது மகளுக்கு பிறந்தநாள் பரிசை அனுப்பி வைத்துள்ளேன். அதற்கு உங்களது வீட்டு முகவரியை கொடுத்துள்ளேன். பரிசு பொருளின் மதிப்பு ரூ.51 லட்சம் ஆகும். அதனை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி கவுசல்யா தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பினார்.

    மேலும் அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா தனது கணவரிடம் விசாரித்த போது அந்த செல்போன் எண் குறித்து தெரியவில்லை என கூறிவிட்டார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவுசல்யா இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×