search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    திருவாரூர் மாவட்டம் கோவில்பத்து என்ற பகுதியை சேர்ந்த பரணி (வயது 20) என்பவர் வெள்ளகோவில் பகுதியில் தங்கி ஓயி எந்திரம் மெக்கா னிக்காக வேலை செய்து வந்தார். நேற்று இரவு கோவை -திருச்சி ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள சொரியங்கிண த்துப்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது பரமத்தி யிலிருந்து திருப்பூரை நோக்கி வந்த டிப்பர் லாரி பரணி மீது மோதியது, இதனால் பலத்த அடிபட்ட பரணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    இந்த விபத்து குறித்து வெள்ள கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெ க்டர் கே. ராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
    • விபத்தில் சிக்கிய 2 பேரில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

    இவரது மகன் நித்தியானந்தம் (வயது 20). இவர் சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில், அதே கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படிக்கும் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஹரிஷ் (20) என்பவரை அழைத்துக் கொண்டு அயோத்தியாப்பட்டணம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், லாரியில் உரசி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் நித்தியானந்தம் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியே வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நித்தியானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிஷூம் காயமடைந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
    • விபத்துகள் ஏற்படுவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் அருகே பெருந்தொழுவு பகுதியில் ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கிருந்து புதிய கட்டிடங்களுக்கு லாரிகள் மூலம் ரெடி மிக்ஸ் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் போது அந்த லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், சாலைகள் அடிக்கடி பழுதாவதாகவும், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராமலிங்கபுரம் பகுதியில் வந்த 2 லாரிகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெடிமிக்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது லாரிகளை மெதுவாக இயக்குவதாகவும், சேதம் அடைந்த சாலைகளை செப்பனிட்டு தருவதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
    • மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியது.

    திருவோணம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் வயது 33. இவர் ஒரத்தநாடு பாப்பநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்துவிட்டு மோட்டரர் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    திருவோணம் அருகே ராஜாளி விடுதி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இருந்தார்.

    இது தொடர்பாக திருவோணம்போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குவாரிகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.
    • கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து 10 வீல் முதல் 20 வீல் டாரஸ் லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.

    மேலும் இவ்வகையான லாரிகள் ஆலங்குளம் முதல் கடையம் வரை உள்ள பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்து கின்றனர்.

    இந்த லாரிகள் அதிக எடை உள்ள கனிம வளங்களை எடுத்து வருவதால் கீழ கடையம் ரெயில்வே சாலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு மண் சாலை போல குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய பாதிப்படைந்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மிகப் பெரிய பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கடையம் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக குவாரியை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றியும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைத்தும், உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லாத காரணத்தினால் நேற்று கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து ஜே.சி.பி.யை கொண்டு கடையம் ெரயில்வே சாலையில் 5 அடி தூரம் க பள்ளம் தோண்டி கனிம வளங்களை கொண்டு வரும் டாரஸ் லாரிகள் இச் சாலையை பயன்படுத்த முடியாதவாறு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலையும் வழக்கம்போல இச்சாலை வழியே டாரஸ் லாரிகள் கற்களை ஏற்றிச் சென்றன. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தலைவர் பூமிநாத் தலைமையில் அவ்வழியே கற்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்து சிறைபிடித்து போராட்டம் நடடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 3 பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் குழிக்கோடு பகுதியை சேர்ந்த வினு (வயது 34), கப்பியறை பகுதியைசார்ந்த ஆகாஷ் ( 23), குழிக்கோடு ஜனசிலின் ஆகிய 4 பேரும் ஓரு மோட்டார் சைக்கிளில் குழித்துறை தியேட்டரில் இருந்து படம் பார்த்து விட்டு மார்த்தாண்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் மேம்பாலம் பஸ் நிறுத்தத்தில் வந்த போது அங்கு நிறுத்தி விட்டிருந்த லாறி பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரையும் திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடை பெற்று வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • டிரைவரின் கால் முறிந்தது
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 31).

    இவர் நெல்லை மாவட் டத்தில் இருந்து டெம்போ வில் வாழை கண்கள் ஏற்றி கொண்டு மார்த்தாண் டத்தை அடுத்த வெட்டு மணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டெம்போ பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி உள்ளது.

    இதனால் டெம்போவின் முன்பகுதி சேதம் அடைந் துள்ளது. இதில் ஏற்பட்ட விபத்தில் டெம்போ ஓட்டுநர் இசக்யப்பனின் கால் முறிந்தது.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
    • தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.

    இவர் ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் லாரி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் மாரியப்பன் ஒர்க் ஷாப்பை திறந்து பணியில் ஈடுபட்டார். வேலை முடிந்து இரவு 7.45 மணிக்கு ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு மாரியப்பன் வீட்டிற்கு சென்றார். இரவு 9.30 மணி அளவில் அவரது ஒர்க் ஷாப்பில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாரியப்பன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    நாகர்கோவில் தீய ணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்க ளும் அங்கு நின்ற லாரியும் தீயில் எரிந்தது.தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    லாரி ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மணக்கரையில் இருந்து ஆறாம்பண்ணை செல்லும் சாலையில் இருபுறமும் வயல்வெளிகள் உள்ளது.
    • வயல்வெளியில் வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையில் இருந்து ஆறாம்பண்ணை செல்லும் சாலையில் இருபுறமும் வயல்வெளிகள் உள்ளது.

    இந்த வயல்வெளியில் வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அருகில் சென்று பார்த்தபோது, படப்பிடிப்புக்காக தற்காலிகமாக அந்த லாரியை கவிழ்த்து வைத்து இருந்தது தெரிய வந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படம் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது 'வாழை' என பெயரிடப்பட்ட ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடந்து வருகிறது.

    இந்த படத்தின் ஒரு காட்சியாக வாழைத்தார் ஏற்றி வந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது போல் படமாக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பின்னரே அந்த வழியாக சென்றவர்களுக்கு முழு விபரம் தெரியவந்தது.

    எனினும் இதனை அந்த வழியாக செல்பவர்கள் எல்லோரும் ஒருவித பதற்றத்துடனே பார்த்து சென்றனர்.

    • சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகரில் வசிப்பவர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கிரேஸ்குமார் (வயது 37). இவர் நேற்று காலை பள்ளப்பட்டி, மையனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிரேஸ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிரேஸ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பழையூர் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் சென்ற போது விபத்து
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு கண்ணன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 31), தொழிலாளி.

    இவர் நேற்று தக்கலையில் பணி செய்துள்ளார். பின்னர் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டார். தக்கலையில் இருந்து மார்த்தாண்டம் சாலையில் ஸ்ரீகண்டன் சென்றார்.

    சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் டாரஸ் லாரி வந்தது. அந்த லாரி எதிர்பா ராதவிதமாக, ஸ்ரீகண்டன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீகண்டன் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிேசாதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீகண்டன் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோ தரர் மஞ்சாடி பாலு, தக்கலை போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த விரிகோடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனேந்திரன் (36) என்பவரை கைது செய்தனர்.

    • டெம்போ டிரைவர் பலி
    • பொங்கல் பண்டிகையையொட்டி பெற்றோரை பார்க்க சென்றபோது பரிதாபம்

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன் புதூர் இல்லத்தார் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் இசக்கியப்பன் (வயது 38), தோவாளை பூ மார்க்கெட்டில் டெம்போ ஒட்டி வந்தார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் துவரங்காட்டில் வசித்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தாய் தந்தையரை பார்த்து ஆசீர்வாதம் வாங்கு வதற்காக இசக்கியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அவ்வையார் அம்மன் கோவில் பகுதி யில் இசக்கியப்பன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இசக்கியப்பன் மீது மோதியது. இதில் இசக்கியப்பன் தூக்கி வீசப்பட்டார்.

    தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்த அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.சிறிது நேரத்தில் இசக்கியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பிணமாக கிடந்த இசக்கியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து இசக்கியப் பனின் உறவினர் குமார் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சோனைசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×