search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • லாரி மோதி முதியவர் பலியானார்.
    • மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனி தாமரை தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமர் (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விசாலாட்சிபுரம், காலங்கரையைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 60). இவர் நேற்று கே.கே நகருக்கு சைக்கிளில் சென்றபோது நடுரோட்டில் நிலை தடு மாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி பாண்டியராஜ் மீது மோதியது. இதில் உடல் நசுங்கிய பாண்டியராஜ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி, பாண்டியராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனி தாமரை தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமர் (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்ட வருவதாக புகார் இருந்து வருகிறது.
    • கேரளாவில் கனிம வளங்களை சுரண்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்பட்ட வருவதாக புகார் இருந்து வருகிறது.

    குறிப்பாக தமிழகத்தில் உள்ள குவாரிகளில் இருந்து கருங்கற்கள் அதிகளவிற்கு கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த லாரிகளை அவ்வப்போது பொது மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

    குறைந்த அளவு கருங்கற்கள் ஏற்றி செல்ல அனுமதி வாங்கிவிட்டு அதிக அளவிலான கருங்கற்களை கொண்டு செல்வது, ஒருமுறை அல்லது இரண்டு முறை கருங்கற்கள் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்று விட்டு பலமுறை கருங்கல்களை கொண்டு செல்வது என்று விதிமீறல்கள் நடந்து வருகிறது.

    கேரளாவில் கனிம வளங்களை சுரண்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு கேரளாவில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இதை தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்பது இயற்கையாக அவர்களின் புகாராக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற லாரி இன்று காலை கோபாலபுரம் -நெடும்பாறை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

    • வாகனங்களை விற்று தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • என்னை ெதாடர்பு கொண்ட சதீஷ் லாரியை அதிகவிலைக்கு விற்று தருவதாக கூறினார். நான் அவரிடம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள லாரியை ஒப்படைத்தேன்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி, சிவகங்கை மாவட்டம் கன்னிவாசல் முனிசிபல் தெருவை சேர்ந்த சண்முகம் ஆகிேயார் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

    அதில், கார்மற்றும் லாரி வாங்கி, விற்றுதருவதாக மதுரை வியாபாரி ஒருவர் ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முதல் கட்டமாக புகார் கொடுத்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இதில் செல்லப்பாண்டி கூறும்போது, மதுரை பார்க் டவுன் விஸ்வநாததாஸ்புரம் மணல்மேடு தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 36), சேகர் ஆகிய 2 பேர் என்னை தொடர்பு கொண்டு, நான் உங்களுக்கு குறைந்த விலையில் கார் வாங்கி தருகிறேன் என்று தெரிவித்தார்.

    அதனை நம்பி அவரிடம் ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்ட அவர், கார் வாங்கி தர வில்ைல. பணத்தை திருப்பிக்கேட்டபோது ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் மட்டும் கொடுத்தார். மீதம் தர வேண்டிய ரூ.2 லட்சத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.

    அவரிடம் நான் தொடர்ந்து பணம் கேட்ட தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார் என்று தெரிவித் தார்.

    பின்னர் சண்முகம் கூறும்போது, நான் லாரியை விற்பதற்கான முயற்சியில் இருந்தேன். அப்போது என்னை ெதாடர்பு கொண்ட சதீஷ் லாரியை அதிகவிலைக்கு விற்று தருவதாக கூறினார். நான் அவரிடம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள லாரியை ஒப்படைத்தேன். ஆனால் அவர் லாரியை விற்றுத்தரவில்லை.

    எனவே அவரிடம் லாரிைய திருப்பி கேட்டேன். ஆனால் அவர் திருப்பித்தர மறுத்து விட்டார் என்று தெரிவித்தார்.

    பின்னர் 2 பேர்களிடம் மோசடியில் ஈடுபட்ட சதீசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் அவர் புகார் செய்த 2 பேரிடமும் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சதீசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் குடவாசல் பெருங்குடி தோப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன், தினேஷ், பிரகாஷ் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டன.

    நீடாமங்கலம்:

    நாச்சியார்கோவில் அருகே அழகாபுத்தூர் பகுதியில் மினி கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் குடவாசல் பெருங்குடி தோப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 30), தினேஷ் (25), பிரகாஷ் (26) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரி , மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டன.இதில் தினேஷ்,பிரகாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மணிகண்டன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பேட்டரிகளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

    பல்லடம் :

    பல்லடம் பொங்கலூர் சக்தி நகர் அருகே கோவையை நோக்கி பேட்டரிகளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற வேன் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்தால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் இருந்து உடனடியாக விரைந்து வந்த அவினாசிபாளையம் போலீசார் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    • கோவை வழியாக கேரளாவுக்கு எரி சாராயம் ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் சென்று கொண்டிருந்தது.
    • ஒன்றன் பின் ஒன்றாக லாரிகள் சென்றபோது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு லாரி கவிழ்ந்தது.

    கோவை:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு எரி சாராயம் ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரிகள் இன்று காலை 6.30 மணி அளவில் கோவை பாலக்காடு ரோட்டில் எட்டிமடை அருகே சென்று கொண்டிருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக லாரிகள் சென்றபோது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு லாரி கவிழ்ந்தது. மற்றொரு லாரிக்கு லேசான சேதம் ஏற்பட்டது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர்கள் எரி சாராயம் தீ பற்றி விடுமோ என்ற அச்சத்தில் இதுகுறித்து கோவை புதூர் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பிடிக்காமல் இருக்க தண்ணீரை ஊற்றி முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் ராட்சத கிரேன் மூலமாக கவிழ்ந்த லாரி தூக்கி நிறுத்தப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் இன்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக க.க. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி முதியவர் இறந்தார்.
    • பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 62). இவரது மனைவி பாண்டியம்மாள்.

    சேதுராமன் நேற்று மதியம் பேரையூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் இருந்து உசிலம்பட்டி சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். சின்னப்பூலாம்பட்டி ராமலிங்க சுவாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியது, இதில் படுகாயம் அடைந்த சேதுராமன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது

    கன்னியாகுமரி :

    குளச்சலில் இருந்து திருவட்டாறு வழியாக பேச்சுபாறைக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது இந்த பஸ்சில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.

    இந்த பஸ் திருவட்டார் அடுத்த புத்தன்கடை சந்திப்பில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தனர். அப்போது பஸ்சின் பின்னால் திருவட்டரில் இருந்து குலசேகரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    இதன் பின்னால் அதிக பாரத்துடன் டாரஸ் லாரி வந்து கொண்டிருந்தது அரசு பஸ்சை இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரும் டாரஸ் லாரியும் ஒரே நேரத்தில் முந்திச் செல்ல முயன்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பஸ் மற்றும் டாரஸ் லாரிக்கு இடையில் சிக்கிக் கொண்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்தில் அவரு டைய இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஓடி வந்து அந்த வாலிபரை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவரை விசாரித்தபோது அவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (வயது 40) என்பது தெரிய வந்தது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    காலை மாலை வேளைகளில் இதே மாதிரி அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகளை அனும திக்கக்கூடாது என்று அந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி கணவன்-மனைவி லாரி மோதியது விபத்தில் பெண் பலியானார்.
    • இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் தனது மொபட்டில் அழைத்து சென்றார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் மொபட் மீது மோதியது. இதில் சண்முகம், ராஜேஸ்வரி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    அப்ேபாது அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். சண்முகம் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவானி அருகிலுள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் கார் அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளாராக இருப்பவர் சுரேஷ் (50) . இவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காரில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்றார். காரை டிரைவர் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கன்னிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (46) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கார் பவானி அருகிலுள்ள சித்தோடு, நசியனூர் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கார் டிரைவர் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.‌ காரில் பயணம் செய்த சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் (50) காயத்துடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த பச்சியப்பன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெள்ளைக்கால்பட்டி கிராமத்தில் குப்பை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளைக்கல்பட்டி கிராமம் சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது.

    இந்த கிராமத்தின் எல்லையில் அரபி கல்லூரி, தனியார் பள்ளி கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளது.

    மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.இந்த நிலையில், பள்ளி, கல்லூரி, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிவற்றிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் துர்நாற்றம் வீசும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளைக்கல்பட்டி ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தனர். குப்பைகளை இங்கே கொட்டக்கூடாது,

    குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம ஊராட்சி சார்பாக குப்பை கொட்டாத நிலையில், வேறு யார் குப்பை கொட்டுகிறார்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை–களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி குப்பையை பள்ளியின் முன்பாக உள்ள ஒரு மறைவிடத்தில் கொட்டிவிட்டு சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை உடனடியாக சிறை பிடித்தனர். குப்பை கொட்டிய இடத்தில் சென்று பார்க்கும்போது, உணவு விடுதி கழிவுகள், கண்ணாடி கழிவுகள், மருத்துவ கழிவுகள், என அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கருப்பூர் போலீசாருக்கும் சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்–பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஒப்பந்த வாகனங்களில் கொண்டு வந்து குப்பை கொட்டுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், மாநகராட்சி அதிகாரிகள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ×