search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சூடு"

    • ரவுடி கும்பலுக்கு இடையேயான மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
    • அடுத்தடுத்து நடைபெற்ற 3 துப்பாக்கி சூடு சம்பவங்கள் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    டெல்லி:

    டெல்லியில் முண்ட்கா பகுதியை சேர்ந்தவர் அமித்லக்ரா (வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    பின்னர் ஜாமீனில் வந்த இவர் நேற்றிரவு வீட்டருகே நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அமித்லக்ரா மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், ரவுடி கும்பலுக்கு இடையேயான மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    அமித்லக்ரா அப்பகுதியை சேர்ந்த கோகி கும்பலில் ஒருவராக இருந்துள்ளார். இந்த கும்பலுக்கும், தில்லு தாஜ்பூரியா கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததும், இந்த விரோதத்தில் தில்லு தாஜ்பூரியா கும்பலை சேர்ந்தவர்கள் நேற்று அமித்லக்ராவை சுட்டுக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கொலையாளிகளை அடையாளம் காண, கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே வடகிழக்கு பகுதியில் 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. அங்குள்ள வெல்கம் பகுதியில் கபீர் நகரில் மொபட்டில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு விட்டு அவரது மொபட்டை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் நதீம் என்ற பாபி மற்றும் ஷான வாஸ் என்ற 2 பேர் காயம் அடைந்தனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நதீம் இறந்து விட்டார். ஷானவாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே ஜோதி நகரிலும் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து நடைபெற்ற 3 துப்பாக்கி சூடு சம்பவங்கள் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பூரி:

    ஒடிசாவில் பத்ரக் பகுதியருகே சென்று கொண்டிருந்த பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுபற்றி பூரி நகரின் அரசு ரெயில்வே போலீஸ் காவல் நிலைய உயரதிகாரி எஸ்.கே. பாஹினிபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, பத்ரக் பகுதியை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதும் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பின்னர், ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். அந்த ரெயில் பூரி நகரை பாதுகாப்பாக சென்றடையும் வகையில் அவர்கள் இணைந்து செயல்பட்டு பாதுகாப்பை வழங்கினர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அடங்கிய 4 குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றார்.

    இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது. பயணிகள் அனைவரும் அந்த பெட்டியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாக்குதலில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
    • கடந்த 2 வாரங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த உஸ்மான் மாலிக்(20) மற்றும் சோபியான்(25) என்பது தெரியவந்துள்ளது. காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும்.

    கடந்த மாதம் 20-ந்தேதி கந்தர்பால் மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகாரைச் சேர்ந்த இருவர், ஒரு டாக்டர் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று காலை கலவரம் வெடித்தது.

    உத்தர பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கைகலப்பு மற்றும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுங்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் அமைதி திரும்பியது. இந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று காலை கலவரம் வெடித்தது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் கடைகள் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தினர். இதுமட்டுமல்லாமல் மருவத்துவமனைகளுக்குள் புகுந்து படுக்கைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுப்பட்டனர்.

    வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஒரு தெருவில் சடலங்கள் உள்ளன.
    • கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    இஸ்ரேல்:

    பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஈரான் ஏவுகனை வீசி வரும் நிலையில் டெல் அவிவ் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

    அந்த இடத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஒரு தெருவில் சடலங்கள் கிடப்பதைக் காணப்பட்டது அதேபோல் துப்பாக்கிச் சூடும் சத்தங்கள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் கேட்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    • துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
    • இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் துப்பாக்கி சூடு தொடர்ந்து வருகிறது.

    குறிப்பாக பள்ளிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்ப வங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

    இந்தநிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் கையெ ழுத்திடுவேன். பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தடுப்பதற்கான பயிற்சிகளுக்கு உதவ எனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

    பின்னர் ஜோபைடன் கூறும்போது, அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்சினை பற்றி நாம் வெளிப்படையாக பேச வேண்டும்.

    அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது மிகவும் வேதனையானது என்றார்.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு தாக்குதலை தடுப்பதற்கான புதிய சட்டத்தில் ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார்.

    ×