என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூலூர்"
- வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் நண்பர்களுக்கு மதுபாட்டில்கள், இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
- மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்து செல்வதாக நினைத்த போலீசார் உடனடியாக அவரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
கோவை :
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.
இவர்கள் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கிச் சென்று மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் நண்பர்களுக்கு மதுபாட்டில்கள், இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளனர். இருவர் இறைச்சிக் கடைக்கு சென்று விட்ட நிலையில், மற்றொரு நபர் பாப்பம்பட்டியில் உள்ள டாஸ்மாக் சென்றார். அங்கு அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி பெட்டியில் வைத்து எடுத்து கொண்டு வந்தார்.
அப்போது பாப்பம்பட்டி நால்ரோட்டில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகமடைந்து வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பேசிய மொழி புரியாததால், மதுபாட்டில்களை விற்பனைக்கு எடுத்து செல்வதாக நினைத்த போலீசார் உடனடியாக அவரை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இதற்கிடையே மது வாங்க சென்ற நண்பர் வெகு நேரமாக வராததால் அவருடன் வந்த மற்ற நண்பர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வாங்கிய இறைச்சியுடன் நேராக போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றனர்.
அப்போது அவர்கள் தேடி வந்த நண்பர் போலீசின் கட்டுப்பாட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரும் தங்களுக்கு தெரிந்த தமிழில் போலீசாரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.
மொழி புரியாததால் வடமாநில தொழிலாளி விற்பனைக்காக பெட்டியில் மதுபாட்டில்களை வாங்கி சென்றதாக எண்ணி தவறுதலாக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ருசிகர சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தப்பிய கொள்ளையர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
- வீட்டில் இருநத ரூ.36 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச்சென்றனர்.
சூலூர்:
சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி வசந்தம் நகரில் வசிப்பவர் ராதா (59). இவர் தனது மகள் நிர்மலா மற்றும் பேத்தியுடன் வசித்து வருகிறார்.
நேற்று நிர்மலா வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பேத்தியும் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராதா மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் மர்ம நபர்கள் ராதாவின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ராதாவை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்தனர். பின்னர் வீட்டில் இருநத ரூ.36 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச்சென்றனர்.
மதியம் பள்ளி முடித்து விட்டு வந்த ராதாவின் பேத்தி வீடு வெளியே பூட்டி இருப்பதையும், ஜன்னல் திறந்து உள்ளதையும் பார்த்தார். ஜன்னல் வழியாக பார்த்தபோது தனது பாட்டி ராதா கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து வந்து முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு வீடு முழுவதும் சமையல் கியாஸ் பரவி இருந்தது. கொள்ளையடித்த நபர்கள் ராதாவை கட்டிப்போட்டதுடன், சமையல் கியாஸ் சிலிண்டரையும் திறந்து விட்டுச் சென்றது தெரியவந்தது. உடனடியாக ராதாவை மீட்ட பொதுமக்கள், வீட்டுக்குள் பரவி இருந்த சமையல் கியாசையும் வெளியேற்றினர். சிறு தீப்பொறி பறந்திருந்தால் கூட பெரும் சேதம் நிகழ்ந்து இருக்கும்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மதமாற்ற முயற்சித்தவர்கள் யார் என தெரியாததால் சந்தேகத்தின் பேரில் 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
- கற்கள் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி, அந்த காகிதத்தை எடுத்து பார்த்தார். அதில் விரைவில் கொல்லப்படுவாய் என மிரட்டல் தொனியில் எழுதப்பட்டு இருந்தது.
சூலூர்:
சூலூர் அருகே பாப்ப ம்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் மனோன்மணி (52). இவரது வீட்டுக்கு நேற்றுமுன்தினம் 5 பேர் வந்தனர். அவர்கள் மனோன்மணியை மதமாற்றம் செய்ய முயற்சி செய்தனர்.
இதுதொடர்பாக மனோன்மணி சூலூர் போலீஸ்நி லையத்தில் புகார் செய்தார். மதமாற்ற முயற்சித்தவர்கள் யார் என தெரியாததால் சந்தேகத்தின் பேரில் 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இந்தநிலையில் நேற்று மனோன்மணி வீட்டில் இருந்தார். அப்போது மர்மநபர்கள் காகிதத்தில் கற்களை கட்டி வீட்டுக்குள் வீசிச் சென்றனர்.
வீட்டுக்குள் கற்கள் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி, அந்த காகிதத்தை எடுத்து பார்த்தார். அதில் விரைவில் கொல்லப்படுவாய் என மிரட்டல் தொனியில் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை மனோன்மணி எடுத்துக் கொண்டு போலீசில் ஒப்படைத்து மற்றொரு புகாரும் கொடுத்தார்.
கொலை மிரட்டல் உள்ளதால் தனக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் கடிதம் வீசியவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் மிரட்டல் கடிதம் வீசியவர்களின் உருவங்கள் பதிந்துள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- கோழிப்பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
- அரசூரில் நடைபெறும் வாரச் சந்தைக்கு வேனில் குடும்பத்துடன் சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.
சூலூர்:
சூலூர் அருகே அரசூர் பகுதியில் செந்தில் கோழிப் பண்ணை உள்ளது. இங்கு பொத்தியாம ்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சதாசிவம் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
இந்த கோழிப்பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் வாராவாரம் அரசூரில் நடைபெறும் வாரச் சந்தைக்கு வேனில் குடும்பத்துடன் சென்று, வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வேனில் சந்தைக்கு சென்று வட மாநிலத்தவர்கள் பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்தனர்.
அரசூர் அருகே அன்னூர் செல்லும் பாதையில் வரப் பிள்ளையார் கோவில் அருகே வந்த போது, வடமாநி லத்தவர்களை, குடிபோதையில் 4 வாலிபர்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், ஆபாசமான வார்த்தைகளை பேசினர். 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், தகாத வார்த்தைகால் திட்டி மிரட்டல் விடுத்தனர். பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர்கள் சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர்கள் மேற்பார்வையாளர் சதாசிவத்திடம் தெரிவித்தனர். அவர் சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். விசாரணையில் வடமாநிலத்தவர்களை மிரட்டியது, சிவானந்தபுரம் சங்கர் அப்பன் தோட்டத்தை சேர்ந்த குமார்(38), காளப்பட்டி நேரு நகரை சேர்ந்த சிவகுமார்(33), சரவணம்பட்டி ஜனதா நகரைச் சேர்ந்த ஆனந்தன் (37), சரவணம்பட்டி பெரிய கவுண்டர் வீதியைச் சேர்ந்த ஹரிஹரன்(52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம்- பீடம்பள்ளி இடையே கல்லுக்குழி உள்ளது. இந்த கல்லுக்குழிக்குள் நிர்வாண நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் பிணமாக மிதந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகல்லுக்குழிக்குள் இறந்து கிடந்த வாலிபர் யார்? அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்