search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசகங்கள்"

    தொண்டி அருகே பராமரிப்பு இல்லாத வனத்துறை அறிவிப்பு பலகைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரையோர கிராமமான காரங்காடு கடல் பகுதி மாங்குரோவ் காடுகளால் சூழ்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு காரங்காடு கடல் பகுதியை நீந்திப்பார்த்தல் மற்றும்

    சூழல் சுற்றுலாவாக அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறையில் ஏராளமானோர் இப்பகுதியை பார்வையிட்டு செல்கின்றனர்.

    மேலும் சுற்றுலாத் துறையின் சார்பாக கடலில் வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகளின் அழகை ரசிக்கும் வகையில் படகுசவாரி ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கடலில் பாதுகாப்பு உடைகளுடன் நீந்திப்பார்க்கவும் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழ் நாடு வனத்துறையின் சார்பாக காடுகளை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை கிழக்கு கடற்கரை சாலையில் ஊன்றிய இடத்திலிருந்து பெயர்ந்து பராமரிப்பு இன்றி உள்ளது. சுற்றுலாத் துறையாக அறிவித்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் அதற்கான அறிவிப்பு பலகைகளை முறைப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×