search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்"

    • மின் ஊழியரான இவர் நேற்றிரவு அரிசிபாளையம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சுருண்டு கீேழ விழுந்தார்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் செம்மலை (வயது 43),

    மின் ஊழியரான இவர் நேற்றிரவு அரிசிபாளையம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சுருண்டு கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்சில் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் செல்லும் போது அவர் உடல் நிலை மேலும் மோசமானதால் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் செம்மலை பரிதாபமாக இறந்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மின்சாரத்தை நிறுத்தாமல் அவர் மின் கம்பத்தில் ஏறி பணி செய்ததால் மின் சாரம் தாக்கியதா?, அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் குமார் இவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.
    • இவர் கடந்த 4-ந்தேதி ‘கண் காணாத இடத்துக்கு செல்கிறேன், யாரும் என்னை தேட வேண்டாம்’ என வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர், சேலத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் கணினி தட்டச்சராக பணிபுரிகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    கடந்த 4-ந்தேதி 'கண் காணாத இடத்துக்கு செல்கிறேன், யாரும் என்னை தேட வேண்டாம்' என வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

    இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் ஊரக போலீசார், மாயமான அரசு ஊழியர் குமாரை தேடி வருகின்றனர்.

    • கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் இருக்கும் போது விபத்து
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ஜார்கண்ட் மாநிலம் பஞ்ச்கதியபஜார் ரக்சி பகுதியை சேர்ந்தவர் ரபிக்முபின் (வயது 34). இவரது சகோதரர் மபிஜீதின் முமின் (31). இருவரும் குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழியில் உள்ள வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று ரபிக்முபின் கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் இருக்கும் போது எதிர்பாராதவிதமாக கொதிகலனில் இருந்த சூடான தண்ணீர் ரபிக்முபின் உடல் முழுவதும் பட்டு பலத்த காயமடைந்தார்.

    பணியில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மபிஜீதின்முமின் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வ.உ.சி.பூங்காவில் காலை மற்றும் மாலைவேளையில் பெண்கள் உள்ளிட்ட பலர் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
    • வ.உ.சி.பூங்காவில் சிறுவர் சிறுமியர் அங்கு விளையாடி வருகின்றனர்.

     அவினாசி :

    அவினாசி இஸ்மாயில் வீதியில் வ.உ.சி.பூங்கா உள்ளது. இங்கு காலை மற்றும் மாலைவேளையில் பெண்கள் உள்ளிட்ட பலர் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். மற்றும் சிறுவர் சிறுமியர் அங்கு விளையாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வி.எஸ்.வி.காலனி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நவின் உள்ளிட்ட இருவர் பூங்காவிற்குள் உட்கார்ந்து மது அருந்திகொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு பணியில் இருந்த பேரூராட்சி ஊழியர் சதீஸ்குமார்(30) என்பவர் இங்கு பெண்கள் உள்ளிட்டவர்கள் நடைபயிற்சி செய்துவரும் இடத்தில் மது அருந்தக்கூடாது வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பனியன் கம்பெனி தொழிலாளர்கள் இருவரும் சதீஸ்குமாரை நீ யார் எங்களை வெளியேற சொல்வதற்கு என்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து சதீஸ்குமார் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விருத்தாசலத்தில் நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தாலி செயினை மர்ம நபர் அறுத்து கொண்டு தப்பி ஓடி சென்றார்.
    • அதிர்ச்சி அடைந்த ஜோதி அவரை துரத்தி பிடிக்க முயன்றார்.

    கடலூர்:

    விருத்தாசலம் கல்லூரி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், இவரது மனைவி ஜோதி(40). இவர் ஜங்ஷன் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் பணி முடிந்து நடந்து வீடு திரும்புகையில், கல்லூரி நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஜோதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி ஓடி சென்றார்.

    அதிர்ச்சி அடைந்த ஜோதி அவரை துரத்தி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி மாயமாக மறைந்தார். இது குறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மதுக்கடை ஊழியரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார்.
    • ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் பணியாற்றுபவர் சரவணகுமார் (வயது 42). சம்பவத்தன்று கூனஞ்சேரி மணி, திருவைகாவூர் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மதுக்கடையில் வந்து பீர் பாட்டில் கேட்டுள்ளனர். பீர் பாட்டில் தந்த மதுக்கடை ஊழியர் சரவணகுமாரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.

    இது குறித்து சரவ ணகுமார் கொடுத்த புகாரி ன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன் சப்-இன்ஸ்பெ க்டர் முருகே சன், சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் அன்ப ழகன், தலை மை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மணி, சத்தியமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வருகி ன்றனர்.

    • மதுபாட்டில்கள் கடத்திய குடிநீர்வடிகால்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • மணியை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் கூடக்கோவில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கூடக்கோவில் பகுதியில் நேற்று போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். பாரபத்தியில் இருந்து கூடக்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் 60 மதுபாட்டில்கள் இருந்தன.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது பாரபத்தியை சேர்ந்த மணி(52) என்பதும், குடிநீர்வடிகால் வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிவதும் தெரியவந்தது. கூடக்கோவில் பகுதியில் அந்த மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கினார்.

    மணியை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் கூடக்கோவில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சி ஊழியர் திடீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளராக இருப்பவர் ஆனந்தன் (வயது 56). அலுவலக பணி தொடர்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு பணிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ்மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிறுமியை கடத்தி திருமணம்; மருத்துவக்கல்லூரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 30).

    இவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று குகை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மயில்சாமியை கைது செய்தார். சிறுமியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    • திருமணமான 4-வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குட்டிமணியகாரனூரை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகன் சங்கர் (32). இவர் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு கடந்த 13.3.22 அன்று திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி (27) என்பருடன் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி திருமணம் முடிந்து பிரியதர்ஷினியின் வீட்டுக்கு திருச்சி சென்றனர். இதையடுத்து பிரிய தர்ஷினி மீண்டும் கணவ னுடன் கொடுமுடி வர மறுத்து விட்டார். திருமணமாகி 4 நாளில் மனைவி பிரிந்து சென்றதால் சங்கர் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சங்கரின் தந்தை செல்வராஜ் குடும்ப த்துடன் சென்று விட்டார். வீட்டில் சங்கர் தனியாக இருந்தார்.

    வெளியே சென்று இருந்த அவரது பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது சங்கர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சங்கரை வீடு முழுவதும் தேடி பார்த்தனர்.

    தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு சங்கர் பேனில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    மரக்காணம் அருகே எம்.திருக்கனூரை சேர்ந்தவர் பரமசிவம். தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினையில் லட்சுமி வி‌ஷத்தை குடித்து விட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.

    இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள ஊழியர் பிரேத பரிசோதனை செய்ய ரூ. 1500 லஞ்சம் வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து லட்சுமியின் உறவினர்கள் பணத்தை கொடுத்து அவரது உடலை வாங்கி சென்றதாக தெரிகிறது.

    இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், லட்சுமியின் உறவினர்களிடம் சவக்கிடங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முகமூடி அணிந்தபடி பணத்தை பெற்று செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து லஞ்சம் வாங்கிய ஊழியரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
    ×