search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 218096"

    • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி
    • ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே சாலை விதி, காவல் உதவி செயலி உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பங்கேற்று ஓவியங்கள் வரைந்ததுடன் அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனப்பி வைத்தனர். அந்த வகையில் 3 ஆயிரம் ஓவியங்கள் அனுப்பி வைக் கப்பட்டன.

    இந்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்களை கண்டறிய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இந்த கமிட்டி தேர்வு செய்த சிறப்பான ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தந்தை செல்வகுமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம், சொக்க கொத்தன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அந்த பகுதியில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கவுதம்குமார் (வயது 17). இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கவுதம்குமார் சரியாக படிக்காமல் அடிக்கடி செல்போனை உபயோகித்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இருந்தபோதிலும் அவர் கேட்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு கவுதம்குமாரிடம் இருந்த செல்போனை பெற்றோர் வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் விரக்தியடைந்த கவுதம்குமார் கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்தார்.

    இந்தநிலையில் அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதம்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது தந்தை செல்வகுமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • நேபாளத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலஞ்சி பள்ளி மாணவன் திருவேல்முருகன், கீரிஸ்குமார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
    • தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி துா்காவுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை ரூ.5ஆயிரம் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை மற்றும் அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் சார்பில் 2021-2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் கல்வி பயின்று 10-ம், 12-ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் நடந்தது.

    முன்னதாக கொரோனா பரவல் காலம் தொட்டு இன்றுவரையில் சுமார் 100 ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிவரும் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகத்திற்கு சிறந்த சேவைநாயகன் விருது அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞா் கணேசபாண்டியன் தலைமை தாங்கினார்.

    பண்பொழி ஐ.ஏ.எஸ். அகாடமி மருதையா முன்னிலை வகித்தார். அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் நிறுவனா் சுதர்சன் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீஅகிலானந்தமகராஜ் மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி ஆசி உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்தமருத்துவா்கள் கலா, நாகராஜன், ஓமந்துாரார்அரசு மருத்துவமனை மருத்துவா் முருகானந்தம், விவேகானந்தா கேந்திர மாவட்ட ஒருங்கிணை்ப்பாளா் கருப்பசாமி, வல்லம் ஊராட்சி மன்ற தலைவா் ஜமீன்பாத்திமா பிரானுார் ஊராட்சி மன்ற தலைவா் ஆவுடையம்மாள்ராஜா, செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர் ஒளி ராமதாஸ், செண்பகராஜன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினா். பின்னா் நேபாளத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலஞ்சி பள்ளி மாணவன் திருவேல்முருகன், கீரிஸ்குமார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற திருச்செந்துார் காஞ்சி ஸ்ரீசங்கரா மேல்நிலைப்பள்ளி மாணவி துா்காவுக்கு பாராட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை மற்றும் அறம்செய்ய விரும்பு டிரஸ்ட் உறுப்பினா்கள் செய்திருந்தனர்.

    • சிவகாசி கல்லூரி மாணவருக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.
    • “அறம் விருதுகள் 2022” என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    சிவகாசி

    "அறம் செய்ய விரும்பு" அறக்கட்டளை ஆக்ஸ்பா யுனிவர்சிட்டி மற்றும் நீதியின் குரல் இணைந்து "அறம் விருதுகள் 2022" என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் சிவகாசி பி.எஸ்.ஆர். ெபாறியியல் கல்லூரி 3-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் மாரிமுத்து, சிறந்த சமூக சேவகருக்கான விருதை பெற்றார்.

    விருது பெற்ற மாணவருக்கு கல்லூரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் மாயமானார்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் அருகே சுப்புலட்சுமி நகரைச்சேர்ந்தவர் திருஞானசம்மந்தம். அவரது மகன் ஜஸ்வந்த், (வயது16). கம்பியம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தேர்வில் தோல்வி அடைந்தார். எனவே ஜஸ்வந்த் சோகத் தில் இருந்தார். அன்று வீட்டில் மாலை இருந்து வெளியேசென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்,மஞ்சள் நிற டீ சர்ட், கிரே கலர் லோயர் அணிந்திருந்தார். இது குறித்து திருஞானசம்மந்தம் புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ஜஸ்வந்தை தேடி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவரை தாக்கிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பேருந்தை வழிமறிது பெண் ஒருவர் உள்ளே சென்று வாலிபரிடம் கேள்வி கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 21). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார்.

    கடந்த 4 ந்தேதி மாலை கல்லூரி பேருந்தில் வந்துகொண்டிருந்த போது சின்னப்பம்பட்டி அருகே பேருந்தை வழிமறித்த பெண் ஒருவர் உள்ளே சென்று முருகனிடம் உன்னுடைய நண்பன் கவின்ராஜ் எங்கடா என்று கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த முருகன் ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரி மாணவரை தாக்கிய பெண் சின்னப்பம்பட்டி அருகிலுள்ள அக்கறை–பட்டியை சேர்ந்த பரிமளா–தேவி என்பதும் இவருடைய மகன் பாலாஜிக்கும், கவின்ராஜ் என்ற மாணவ–ருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று பஸ்சில் இல்லாததால் அவருடைய நண்பர் முருகனை தாக்கியதும் தெரியவந்தது. இதுபற்றி முருகன் கொடுத்த புகாரின் பேரில் பரிமளாதேவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • மாயமான கல்லூரி மாணவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
    • அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

    கரூர்:

    கரூர் காக்காவாடியை சேர்ந்த கவின் (வயது 18). இவர் தளவாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரி சென்ற கவினை மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து மாயமான கவினை கண்டுபிடித்து தருமாறு வேலாயுதம்பாளையம் போலீஸ் புகார் செய்யப்பட்டது. இந்தநிலையில், குளத்துப்பாளையம் பகுதியில் உறவினரின் வீட்டில் கவின் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து நேற்று கவினை உறவினர்கள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி முன்பு ஆஜர்படுத்தினர். மாணவனுக்கு அறிவுரைகள் கூறி மாணவரின் தாயாருடன் அனுப்பி வைத்தனர்.

    • முகேஷ் குமார் எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இறந்தார்.
    • உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சப்-இன்ஸ்பெக்டர் காசிவிசுவநாதன் அனுப்பி வைத்தார்.

    சாம்பவர்வடகரை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ஜி சாபே. இவரது மகன் முகேஷ் குமார்(வயது16). இவர்கள் குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக செங்கோட்டையில் வேத பாடசாலை நடத்தி வருகிறார்கள். முகேஷ் குமார், தனது உறவினர்களுடன் சுந்தர பாண்டியபுரம் குளத்திற்கு குளிக்க சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இறந்தார். உடனே சாம்பவர்வடகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்டபெக்டர் காசிவிசுவநாதன் அங்கு விரைந்து சென்று முகேஷ் குமார் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மாணவர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
    • இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமுதாயத்தில் தொழில் நுட்பங்களின் பங்கு, ஆகியோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பில் ''அசோசியேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி'' (ஏ.சி.எம்.) என்ற மாணவர் அமைப்பின் தொடக்க விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தலைமையுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் ஷேக் அப்துல்லா கலந்து கொண்டார்.

    துறையின் 3-ம் ஆண்டு மாணவியும், ஏ.சி.எம். மாணவர் அமைப்பின் தலைவருமான வைஷ்ணவி வரவேற்றார். சிறப்பு விருந்தினரை 3-ம் ஆண்டு மாணவியும், ஏ.சி.எம். மாணவர் அமைப்பின் செயலாளருமான குருகீர்த்திகா அறிமுகம் செய்தார்.

    கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராமதிலகம், பேராசிரியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஷேக் அப்துல்லா பேசுகையில், மாணவர்களின் வெற்றிக்கு கல்விப்படிப்பு மட்டுமல்லாது பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர் அமைப்பின் நன்மைகளையும், ஏ.சி.எம். மாணவர் சேப்டரின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த அமைப்பின் மூலமாக சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான ேபராசிரியர்களின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, நவீன தொழில் நுட்பங்கள் பற்றியும், அவற்றைக் கையாளுவது எப்படி எனவும் தெரிந்து கொள்ள கருத்தரங்குகள், போட்டிகள் ஆகியவை நடத்தப்படும்.

    இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமுதாயத்தில் தொழில் நுட்பங்களின் பங்கு, ஆகியோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஏ.சி.எம். சேப்டர் மற்றும் பி.எஸ்.ஆர்.இ.சி. ஏ.சி.எம். ஸ்டூடண்ட் சேப்டர் ஆகிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர். ஏ.சி.எம். மாணவர் குழு உறுப்பினரும், மாணவியுமான ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    • 2022-23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்ற தேர்தல் பள்ளியில் நடத்தப்பட்டது.
    • மாணவர்கள் அனைவரும் வரிசையில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

    திருப்பூர் :

    பல்லடம் அருகேயுள்ள செஞ்சேரிப்புத்தூர் அரசு துவக்க பள்ளியில்60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆண்டுதோறும் ஓட்டுப்பதிவு முறைப்படி மாணவர் மன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து தலைமை ஆசிரியர் கணேசன் கூறுகையில், மாணவர்களுக்கு கல்வியறிவுடன் பொது அறிவும் அவசியம். விளையாட்டு போட்டிகள் மட்டுமன்றி, தூய்மை பணி, மரம் நடுதல், வீட்டு நூலகம், நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறோம்.ஆண்டுதோறும் மாணவர் மன்றம் பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது. இதன் நிர்வாகிகள் ஓட்டெடுப்பு முறையில்தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இதன்படி 2022-23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்ற தேர்தல் பள்ளியில் நடத்தப்பட்டது. 5-ம் வகுப்பு மாணவன் சபரீஸ் 33 ஓட்டுகள் பெற்று முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.இதேபோல், துணை முதல்வராக ராஜேஷ், கல்வித்துறை அமைச்சராக தீக்‌ஷிதா, பல்வேறு துறை அமைச்சர்களாக தமிழ்செல்வி, கிரிதரன், சித்தேஷ், பிரவீன், அஜய், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட துறைகளுக்கு உண்டான பணிகளை மேற்கொள்வர். அமைச்சரவை போன்று ஏற்படுத்தப்படும் இந்த கட்டமைப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவர்களின் அரசியல் அறிவும் வளரும் என்றார்.முன்னதாக மாணவர் மன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஓட்டு பெட்டியில், மாணவர்கள் அனைவரும் வரிசையில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

    • கோவையில் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது.
    • திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாடை இழந்து ரோட்டோரத்தில் உள்ள செல்போன் கடை மீது பலத்த சத்தத்துடன் மோதியது.

    கோவை:

    கரூர் அருகே உள்ள செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் ஓம் பிரகாஷ் (வயது 20).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ., படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் பீளமேடு சித்ராவில் நடந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்றார்.

    பின்னர் பார்ட்டி முடிந்ததும் ஓம் பிரகாஷ் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந் தினேஷ்குமார் (23), திருப்பூரை சேர்ந்த ஆதித்யா சரவணன் (23), பிரதீப் (21),திருச்சியை சேர்ந்த பிரகதீஸ்வரன் (22), ஊட்டியை சேர்ந்த ரித்தீஸ் (21) ஆகியோருடன் ஒரு காரில் கோவைக்கு புறப்பட்டனர்.

    தினேஷ்குமார் காரை ஓட்டி வந்தார். அவர் மது போதையில் இருந்துள்ளார். கார் நள்ளிரவு 1.30 மணியளவில் அவினாசி ரோட்டில் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாடை இழந்து ரோட்டோரத்தில் உள்ள செல்போன் கடை மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கல்லூரி மாணவர்கள் 6 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் ஓம்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தினேஷ்குமார், ஆதித்யா சரவணன், பிரதீப், பிரகதீஸ்வரன், ரித்தீஸ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமநாதபுரம் நாகப்பன் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28). பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார். நேற்று இவர் புதிதாக திறக்கப்பட்ட திருச்சி ரோடு மேம்பாலத்தில் தனது நண்பருடன் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்வியுடன் பேச்சு திறமையை மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்
    • ஆசிரியர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் அறிவுரை

    நாகர்கோவில்:

    தக்கலை. ஆர்.பி. ராஜ லெட்சுமி இந்து வித்யாலயா பள்ளியின் புதிய கட்டிடம் புலியூர்குறிச்சியில் கட்ட ப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விசுவ இந்து வித்யாகேந்திரா நிறு வன தலைவர் வேதாந்தம் தலைமை தாங்கினார்.

    பொதுசெயலாளர் கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு பள்ளியின் புதிய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    மேலும் இந்து வித்யாலயா பள்ளிகளின் இணைய வலைதளத்தை தொடங்கி வைத்து பேசினார். அப் போது அவர் கூறியதாவது:

    சத்தியம் மூன்று பரிணா மங்களை கொண்டது. அது உண்மை, வாய்மை, மெய்மை ஆகும். உள்ளத்தில் ஒளி இருக்குமானால் உண்மையி ருக்கும், பேச்சில் உண்மை இருந்தால் வாய்மை இருக்கும். செயலில் உண்மை இருந்தால் மெய்மை இருக்கும். பேச்சில் சாமர்த்தியம் கொண்ட வர்கள் பொய் பேசினாலும் மெய்யாகி விடுகிறது.

    பேசத் தெரியாதவர்கள் உண்மை பேசினாலும் அது பொய்யாகி விடுகிறது. ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி யோடு பேச்சு திறனையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளின் ரோல் மாடலாக பெற்றோர்கள் ஏன் இருக்கக்கூடாது. குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு வளர்வதில்லை. நம் செயல்பாட்டை பார்த்து தான் வளர்கிறார்கள். பெற்றோ ர்கள் பிள் ளைகளிடம் பொய் பேசக்கூடாது என கூறிவிட்டு, வீட்டின் டெலிபோன் அழைப்பை எடுக்கும் பிள்ளைகளிடம் அப்பா வீட்டில் இல்லை என கூறு என்று பொய் பேச சொல்கிறார்கள்.

    எந்த கல்வி மாணவர்களை ஒழுக்க பாதைக்கு அழைத்து செல்கிறதோ அந்த கல்வியை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண் கள் போதிக்கும் கல்வியில் இருக்கும் ஒழுக்கத்தை விட பெண்கள் போதிக்கும் கல்வியில் ஒழுக்கம் அதி கமாக இருக் கும். இந்த பள்ளியில் பெண் ஆசிரியர்களே. அதிகமாக இருக்கிறார்கள் இதனால் இங்கு பயிலும் பிள்ளைகள் நல்ல ஒழுக் கம் கொண்டவர்களாக இருப்பா ர்கள்.

    மனிதன் ஒரு நிலையில் இருக்கும் போது பணத்தி ற்கும், புகழுக்கும் ஆசைப்ப டுவார்கள் அவர்களின் அடுத்த நிலை என்பது எதையா வது சாதிக்க வேண்டும் என்பதாக இருக்கும். அப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் தான் இந்த பள்ளியை வழிநடத்தி செல்பவர்கள் அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பங்கேற்ற வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். விசுவ ஹிந்து வித்யாகேந்திர இணை பொதுச்செய லாளர் கிருஷ்ணமாச்சாரி, உறுப்பினர் கோபால் கமலம்மாள், ஓய்வுபெற்ற கலெக்டர் செல்லமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் மற்றும் கட்டுமான என்ஜினீயர்கள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி யின் ஒருங்கிணைப்பா ளர்கள் சின்னதங்கம், மணி, அனைத்து பள்ளிக ளின் முதல்வர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள். வி.பி.ஆர் நிறுவனத்தின் என்ஜினீயர் ராஜ சேகர், கட்டிட ஒருங்கிணைப்பா ளர்கள் ராமகிருஷ்ணன், ஸ்ரீதர், ராம சப்பு செல்ல த்துரை ஐ.ஏ.எஸ், மேற்பார்வையாளர்களான என்ஜினியர்கள் ரஞ்சித் ராஜா, விக்னேஷ், பிரபு, அனீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் மாலதி நன்றி கூறினார்.

    ×