என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயம்"

    • அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
    • பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அதில் ஆவுடையப்பன் கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    இப்பகுதியில் உள்ள வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பாசன விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை செய்ய அத்தியாவசியமாகவும், அவசரமாகவும் உள்ளதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது.
    • வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பூர் :

    விவசாய குடும்பத்தை சேர்ந்த பல இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. அதேபோல விவசாய தொழிலாளர்களின் வாரிசுகளும் விவசாய பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் பனியன் நிறுவனங்களிலும், ஐ.டி., நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர். கணிசமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களை குத்தகைக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

    சிறிய பண்ணைகளில் குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். பெரிய பண்ணைகளில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிக்க வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் வரப்பில் உளுந்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • வேளாண்மை உழவர் நலத்துறை 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்குகிறது.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் வரப்பு பயிராக உளுந்து சாகுபடியை விவசாயிகளிடம் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின் படி செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் குண்டாறு அணைக்கு செல்லும் பகுதியில் மோட்டை அணைக்கட்டு பகுதிகளில் வரப்பில் உளுந்துதிட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தற்போது வரப்பில் உளுந்து என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் நெல் பரப்பில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதற்கு 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதால் நன்மை செய்யும் பூச்சிகள் பெருகி நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சி அழிக்கப்படுகிறது. மண்வளம் பெருகுகிறது. கூடுதலாக ஒரு பயறு வருவாய் கிடைக்கின்றது. எனவே செங்கோட்டை வட்டார விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் கேட்டுக்கொண்டார். செயல் விளக்கத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் குமார் செய்திருந்தார்.

    • மழை மற்றும் வறட்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
    • இயற்கை வழி விவசாயம், எலியை கட்டுப்படுத்தும் முறை.

    நாகப்பட்டினம்:

    ரிலையன்ஸ் அறக்கட்ட ளையின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்து வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளிடையே கலந்துரையாடல் நிகிழ்ச்சி நாகையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முனைவர் திருமேனி தலைவர் மற்றும் பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் அவர்கள் கலந்துகொண்டு மழை மற்றும் வறச்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.

    நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் சந்திரசேகர் (தொழில்நுட்ப வல்லுனர் பயிர்பாதுகாப்பு துறை) வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல், முனைவர் குமார ரெத்தினசபாதி முதல்வர்- ஆதிபாராசக்தி தோட்டக்கலைகல்லூரி வேலூர், முனைவர் காந்திபன் பூச்சியியல் துறை பேராசியியர் மற்றும் தலைவர் பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் ஆகியோர் விளக்கினார்கள்.

    நெற்பயிரில் உர மேலாண்மை, மண் வளத்தை பெருக்குதல், இயற்கை வழி விவசாயம், எலியை எளிய முறையில் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் பாபு இணை பேராசிரியர் அண்ணாம லைப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அவர்கள் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளையின் அலுவலர் பிரவின்ராஜ் செய்திருந்தார்.

    • மீன் அமிலம், ஐந்திலை கரைசல் ஆகியவை தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.
    • களை நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்பட்டு வரும் கிராமங்களிலிருந்து இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

    ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 50 விவாசயிகள் கலந்துகொண்டு இயற்கை வேளாண்மை முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பஞ்சகாவ்யா ஜீவாமிர்தம், மீன் அமிலம், ஐந்திலை கரைசல், அமிர்த கரைசல் தேமோர், கரைசல் ஆகியவை தயாரிக்கும் முறை பற்றி செயல்விளக்கத்தோடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதளின்றி பயிர்கள் நன்றாக வளர்ந்து நஞ்சில்லா தரமான உணவை உற்பத்தி செய்யலாம் எனவும்,

    கோழி மற்றம் கால்நடைகள் மரபணு மாற்றப்பட்ட உயிரினம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து, பயிர்சுழற்சி பசுந்தாள் உரம், பூச்சி நோய் மற்றும் களை நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

    நிகழ்ச்சியில் அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உழவியல்துறை பேராசிரியார் ஆனந்தகிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்துகொண்டார்.

    • கட்டாலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
    • ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடிமுத்திரையிட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகளில், சேர்வைக்காரன் மடம், கட்டாலங்குளம் மற்றும் குமாரகிரி உள்ளிட்ட பகுதிகளில் வணிக நோக்குடன் சட்டத்துக்கு புறம்பாக, ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.

    இதனால் அதன் சுற்றுப்பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் இது குறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் சேர்ந்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடிமுத்திரையிட்டனர்.

    தற்போது கட்டாலங்குளம் ஊராட்சியிலும் இது போன்று சட்டத்துக்கு புறம்பாக ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன்(கிராம ஊராட்சி) ராமராஜ் (வட்டார ஊராட்சி) தாசில்தார் செல்வகுமார்,மண்டல துணை தாசில்தார் ரம்யா தேவி, வருவாய் ஆய்வாளர் செல்லம்மாள்,கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்படை தலைமை காவலர் மைக்கேல்,கட்டாலங்குளம் ஊராட்சி செயலர் நல்லசிவம் மற்றும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர், அப்போது அப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட18 ஆழ்துளை கிணறுகளை மூடி முத்தரையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • உடன்குடி பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதியதாக 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகளை உருவாக்கினர்.
    • முருங்கை, கடலைஉட்பட பல்வேறு பயிர்கள் புதியதாக நடவு செய்யப்பட்டு விவசாய பணி நடக்கிறது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் சடையனேரி, தாங்கை, தருவை ஆகிய 3 குளங்கள் பழமையான குளங்கள் ஆகும். இந்த 3 குளங்களை தவிர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதியதாக அய்யனார் குளம், மாநாட்சி குளம், தண்டுபத்து குளம் என சுமார் 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஊரணிகளை கடந்த ஆண்டு உருவாக்கினர். கடந்த ஆண்டு இதேநாளில் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி கருமேனிஆறு வழியாக மணப்பாடு கடலுக்கு மழைநீர் சென்றது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டது, கடல் நீர் மட்டம் விவசாய நிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த ஆண்டு பருவ மழையும் பெய்யவில்லை. சடையனேரி கால்வாயில் தண்ணீரும் வரவில்லை. இதனால் அனைத்து குளங்கள்.குட்டைகள். ஊரணி, கருமேனி ஆறு என எல்லாமே தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. மழை வரும், குளங்கள் நிரம்பும் என்ற நம்பிக்கையில் தென்னை, வாழை, முருங்கை, கடலைஉட்பட பல்வேறு பயிர்கள் புதியதாக நடவு செய்யப்பட்டு விவசாய பணி நடக்கிறது. இந்த ஆண்டு இனி மழை வருமா?என்பது கேள்விக்குறியாகி விட்டது. நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே வருகிறது, மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. மழை வர வேண்டும், அல்லது கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும், இப்படி செய்யாவிட்டால் அனைத்து விவசாயமும் முழுமையாக அழிந்துவிடும் என்ற பெரும் கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

    • மழை இல்லாததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டத.
    • கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் பருவமழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெறப்பட்டுள்ள பருவமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளங்கள் மேம்பாடு அடைந்து, விவசாயப் பயன்பாட்டிற்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், இளை யான்குடி உள்ளிட்ட சில வட்டாரங்களில் மழை குறைவாக பெறப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    அதுகுறித்து ஆய்வு செய்து அரசின் சார்பில் சில நிவாரணங்களை விவசாயி களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளும் வகையில், இளையான்குடி வட்டத்திற்கு ட்பட்ட காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பகுதிகளில் இது தொடர்பாக கணக்கெ டுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிக்கையை துறை ரீதியாக சமர்ப்பிப்பித்து, அரசால் வழங்கப்படும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் பாதிப்புக்கள் குறித்த விபரங்களை துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக, தங்களது விளைநிலங்களில் நெற்பயிர்கள் மட்டும் பயிரிடுவது மட்டுமின்றி, மண்ணின் தன்மைக்கேற்றார் போல் பல்வேறு பயிர்கள் மற்றும் தானியங்களை பயிரிட்டும், அதன்மூலமும் உற்பத்தியைப் பெருக்கி, லாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன், வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, வட்டாட்சியர் அசோக், துணை வேளாண்மை அலுவலர் சப்பாணிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அடைக் கப்படுகிறது
    • மாவட் டத்தில் உள்ள பல கால்வாய்களில் கடை மடை பகுதிகளுக்கு இன்று வரை தண்ணீர் போய் சேரவில்லை.

    கன்னியாகுமரி :

    தமிழக முதல்- அமைச் சர் மு.க.ஸ்டாலின், நீர்வ ளத்துறை அமைச்சர், தமிழ் நாடு அரசின் நீர்வளத் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஆகியோருக்கு கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-

    குமரிமாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு- 1, சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அடைக் கப்படுகிறது. இந்த ஆண்டும் ஜூன் 1 -ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத னால் விவசாயிகள் பயன டைந்தனர். ஆனால் மாவட் டத்தில் உள்ள பல கால்வாய்களில் கடை மடை பகுதிகளுக்கு இன்று வரை தண்ணீர் போய் சேரவில்லை.

    குறிப்பாக சிற்றாறு பட்ட ணம் கால்வாயின் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட கடைவரம்பு பகுதிக ளான கருங்கல், பாலூர், சுண்டவிளை, தேவிகோடு முதல் கைசூண்டி, புதுக் கடை, பைங்குளம், தேங்காப்பட்ட ணம் வரை கடந்த பல ஆண்டுகளாக அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்பட வில்லை. கால்வாய்களில் சுமார் 2 அடிக்கும் மேல் புதர் மண்டிமண் தூர்ந்து காணப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகளால் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது குமரி மாவட்டத்தில் கடுமையான வெயில் அடிப்பதினால் மேற்கண்ட கால்வாய்க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. ஆகவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அணை ளில் தண்ணீரை அடைக் காமல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை அனைத்து கால் வாய்களிலும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவேண்டும்.

    மேலும் உங்கள் தொகுதி யில் முதல் -அமைச்சர் திட் டத்தில் குமரி மாவட்டத் தில் உள்ள கோதையாறு வடிநில கோட்டத்தில் உள்ள கால்வாய்களை ரூ.53 கோடி மதிப்பீட்டில் சீர மைப்பதற்காக ஆய்வு செய் வதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் நடை பெற்று வருகிறது. ஆய்வு பணிகளை விரைவில் முடித்து அரசுக்கு ஆய்வறிக் கையை வழங்கிபோர்க்கால அடிப்படையில் கால்வாய் களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் மனித குலத்தை நோய்களிலிருந்து விடுவிக்கலாம்.
    • விவசாயம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளை சார்பில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ரேணுகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மாணவிகள் பூரணி, அருணா இறைவணக்கம் பாடினர்.

    நிகழ்ச்சிக்கு மூலிகை சேகர் தலைமை வகித்தார்.

    மலர் இயற்கை வேளாண் பண்ணை நிறுவனர் ஸ்ரீராம் வரவேற்புரை வழங்கினார்.

    இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளைத் தலைவர் கோவி. திருவேங்கடம் வாழ்த்துரை வழங்கினார்.

    சீனிவாசநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் இளையராஜா, இயற்கை விவசாயிகள் மருத்துவக்குடி கும்பலிங்கம், நாச்சியார் கோயில் ராஜேந்திரன் மலையப்பநல்லூர் கேசவன், சீனிவாசநல்லூர் ஹேமா, கால்நடை மருத்துவர்கள் ஆனந்த், ஆனந்தி, நேரு யுவகேந்திரா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ஆதலையூர் சூரியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது:

    இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் மனித குலத்தை நோய்களிலிருந்து விடுவிக்கலாம். படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும்.

    உலகம் பொருளாதார சிக்கல்களில் சிக்கி இருக்கும்போது விவசாயம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

    சேவைத் துறையை விட தொழில் துறையை விட லாபம் குறைவாக இருந்தாலும் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு விவசாயமே உதவுகிறது.

    விவசாயத்தை நம்பி இருக்கும் பொருளாதாரம் எப்போதும் சரிந்து விழுவது இல்லை. எனவே படித்த இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி வர முன் வர வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியின் நிறைவில் இளந்துறை இயற்கை விவசாயி சுவாமிநாதன் நன்றி கூறினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    • திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர்பிரதாப் லிவி (வயது 25) இவருடைய மனைவி அனு ஸ்ரீ.இவர்கள் விவசாயத்தை காப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாட்டு வண்டியில் குமரியில் இருந்து சென்னைக்கு பயணமாக புறப்பட்டனர். குழந்தைகளோடு கடந்த ஜனவரி 11-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு ஒரு நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் வரை செல்கிறார்கள். பின்னர் மாட்டு வண்டியை அங்கு நிறுத்தி இயற்கை விவசாயத்தை காப்போம். மருந்தில்லா உணவை கொடுப்போம். வரும் சந்ததிக்கு நோயில்லாத வாழ்க்கையை வலுப்படுத்துவோம்.

    செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் நாட்டு காளை மாட்டு இனங்களை காக்க வேண்டும். வெளிநாடு மாடுகள் இனத்தை அடியோடு துரத்தி அடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

    இந்த மாட்டு வண்டி பயணத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று ஒரு நாள் முழுவதும் விவசாயத்தைப் பற்றி எடுத்துரைத்து அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரிடம் மனுவாக அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • வேளாண் இல்லாது உலகம் வெல்லாது உழவர்களுக்கான பாடலை வெளியிட்டார்.
    • விவசாயம் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் ஊராட்சி, லட்சுமிபுரத்தில் உள்ள யூரோ கிட்ஸ் என்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சார்பில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த படிப்புகளுக்கான ஆர்வத்தை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று வேளாண் இல்லாது உலகம் வெல்லாது உழவர்களுக்கான சிறப்பு தீம் பாடலை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய பொன்ராஜ் உழவர்களை முன்னெடுத்துச் சென்றால் டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா விரைவில் மலரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சின்னத்திரை கலைஞர் அறந்தாங்கி நிஷா, நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன் குத்தாலம் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்று விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதனை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விவசாயம் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவர்–களின் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டனர்.

    ×