என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வள்ளியூர்"
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது30). நரிக்குறவரான இவர் ஊர் ஊராக சென்று பாசி விற்று வந்தார். இவரது மனைவி கவுசல்யா (20). இவரும் கணவருடன் சேர்ந்து பாசி விற்க செல்வது வழக்கம்.
இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நேற்றிரவு முத்துராஜும், கவுசல்யாவும் நாகர்கோவில் சென்றனர். அங்கு ஒரு சினிமா தியேட்டரில் அவர்கள் படம் பார்த்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ், கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார்.
பலத்த காயம் அடைந்த கவுசல்யா மயங்கி விழுந்தார். உடனே கவுசல்யாவை, முத்துராஜ் ஒரு ஆட்டோவில் ஏற்றி குறவர் காலனிக்கு வந்தார். அங்கு வீட்டில் அவரை இறக்கி போட்டு விட்டு படுத்து தூங்கி விட்டார். இதனிடையே மயக்க நிலையில் இருந்த கவுசல்யா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை முத்துராஜ் எழுந்து பார்த்த போது கவுசல்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முத்துராஜ், கவுசல்யாவின் உடலை அங்கிருந்து வெளியில் கொண்டு செல்ல திட்ட மிட்டார்.
இதற்காக ஒரு வாகனத்தை வரவழைத்து அதில் கவுசல்யாவின் உடலை ஏற்றினார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் முத்துராஜிடம் கேட்டபோது, அவர் மழுப்பலான பதில்களை கூறியுள்ளார்.
சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே முத்துராஜ் அங்கிருந்து தப்ப முயன்றார். பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்பு அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்கள் கட்டி வைத்ததில் காயம் அடைந்த முத்துராஜை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையடுத்து கவுசல்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலையாளியை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துராஜிடம் விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக கவுசல்யாவை அவர் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தொம்மையார்புரம் கிராமத்தை சேர்ந்த மீனவர் அருள்தாசன் (வயது41). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.
அது போல சம்பவத்தன்று இவர் அருகில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார் அப்போது அவரது நண்பர் வீட்டில் இல்லை. நண்பரின் மனைவியும் வெளியே கடைக்கு சென்று இருந்தார். அவர்களது மகளான 6-ம் வகுப்பு மாணவி மட்டும் வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.
அருள்தாசன், அந்த மாணவி அருகே அமர்ந்து டி.வி. பார்ப்பது போல் மாணவியின் தோளில் கைபோட்டு ‘சில்மிஷம்’ செய்துள்ளார். அப்போது கடைக்கு சென்றிருந்த அந்த மாணவியின் தாய் வந்து விட்டார். அவரை பார்த்ததும் அருள்தாசன் வெளியே தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருள்தாசனை சத்தம் போட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அருள்தாசனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்