search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தான்குளம்"

    • தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம், மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில் நடைபெற்றது.

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான கென்னடி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணை தலைவர் பிர்தவுஸ் முன்னிலை வகித்தார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் பிளாரன்ஸ் , குழந்தைகளின் உரிமைகள், பாதிக்கப்படும் சூழ்நிலைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், தண்டனைகள் என்ற தலைப்புகளில் கருத்துரை வழங்கினார். 

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.
    • தரமற்ற தார்சாலை போடப்பட்டதால் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    சாத்தான்குளம்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆணைப்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், சாத்தான்குளம்- புதுக்குளம் விலக்கு தரமற்ற தார்சாலை போடப்பட்டதால் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.

    ஒன்றிய செயலாளர்கள், சாத்தான்குளம் ஜான் ராஜா , உடன்குடி அழகேசன், கருங்குளம் முருகேசன் , திருச்செந்தூர் சீமான், ஸ்ரீவைகுண்டம் தேவராஜ் , மாவட்ட மாணவர் அணி செயலாளர் சித்திரவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சபரி செல்வம், திருச்செந்தூர் நகர செயலாளர் திருமலைக்குமார் மற்றும் அனைத்து ஒன்றியத்திலுள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • சாத்தான்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
    • முட் செடிகள் இல்லாத சாத்தான்குளமாக மாற்றிட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூ ராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது

    சாத்தான்குளம் பேரூராட்சியில் 15-வார்டு பகுதிகள் உள்ளன. அனைத்து பகுதியில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை மு ழுவதுமாக அழிக்கும் நோக்கத்தோடு சாத்தான்குளம் பேரூராட்சி நிர்வாகமும் - சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றமும் இணைந்து அதனை அகற்றும் பணிநேற்று தொடங் கப்பட்டது.

    முதற்கட்டமாக சாத்தான்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிக்கு சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற தலைவர் மலையாண்டி பிரபு முன்னிலை வகித்தார்.

    முதற்கட்டமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் முட் செடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. படிப்படியாக அனைத்து பகுதியிலும் முட்செடி களையும் அகற்றி முட் செடிகள் இல்லாத சாத்தான்குளமாக மாற்றிட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் நிர்வாகிகள் அய்யா குட்டி, முத்து இசக்கி, முத்துராமலிங்கம், வீரபுத்திரன், 11-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாராஜன், ஜமாத் தலைவர் மகதூம், சுகாதார மேற்பார்வையாளர் தங்கமுத்து ,சாத்தான்குளம் நகர தி.மு.க. துணைத் செயலாளர் மணிகண்டன், நகர பொருளாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
    • சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளி, அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

    பழனியப்பபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

    இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் 15 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • தச்சன்விளை கால்நடை மருந்தகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.
    • உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் கால்நடை உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

    தூத்துக்குடி

    சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் கால்நடை மருந்தகம் கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.

    இதனால் தச்சன்விளை சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை போட்டு பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் தச்சன்விளை கால்நடை மருந்தகத்தில் கால்நடை மருத்துவர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப் படாமல் இருப்பதால் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.

    கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போட அப்பகுதி மக்கள் திசையன்விளையில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு பெரும் சிரம ங்களுக்கு இடையே கொண்டு சென்று வருகிறார்கள்.இதனால் விவசாயிகள் தங்களது பணிகளை விட்டுவிட்டு சென்று வருவதால் அவர்களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

    மழைக்காலங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் கால்நடை உயிரிழப்புகளும் ஏற்படுவதால் பொது மக்களும் விவசாயி களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் கூடுதல் பொறுப்பாக தச்சன்விளை கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வாரத்தில் ஓரிரு நாட்கள் வந்து செல்கிறார்.

    ஆனால் விவசாயிகள் பணிகளை முடித்து விட்டு கால்நடை மருத்துவ மனைக்கு தங்களது கால்நடைகளை கொண்டு செல்லும் போது பெரும்பாலும் கால்நடை மருந்தகம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    எனவே தச்சன்விளை சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் கால்நடை மருத்தகத்தில் நிரந்தரமாக கால்நடை மருத்துவர் பணியில் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஜெயந்தியை தாக்கி அவர் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.
    • செல்வமுருகன் மீது கோவையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் சந்தை தெருவை சேர்ந்தவர் ராஜகுமரன் மனைவி ஜெயந்தி (வயது 40).

    இவர் மாலை அப்பகுதியில் உள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்குவந்த அதே பகுதி மேலத் தெருவை சேர்ந்த செல்வமுருகன்(32) என்பவர் ஜெயந்தியை தாக்கி அவர் அணிந்திருந்த 11 பவுன்செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நகை பறிப்பில் ஈடுபட்ட செல்வமுருகனைமடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் காயம் அடைந்ததையடுத்து, பொதுமக்களே அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிந்து செல்வமுருகன் குறித்து விசாரணை நடத்தியதில் அவரது சொந்த ஊர் விளத்திகுளம் அருகே வேம்பார் எனவும், அவர் மீது கோவையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன எனவும் கூறி உள்ளார்.

    மேலும் பெருமாள்குளத்தில் திருமணமாகி கடந்த 3 ஆண்டாக பெருமாள்குளத்தில் இருந்து சந்தை வியாபாரத்துக்கு சென்று வருவதும், தற்போது மீண்டும் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மீன்பிடித் திருவிழா
    • ஊரடங்கு காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஊரணி குளத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மீன்பிடித் திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் திரண்டு வந்து பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்வர்.

    கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மீன்பிடி திருவிழா தற்போது மீண்டும் நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் திரண்டு வந்து ஊரணி குளத்தில் பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். எனினும் குறைவான எண்ணிக்கையில் மீன்கள் பிடிபட்டதால் ஊரணியை ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கட்டிட தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணத்தை கொடுக்காமல் ஏளனம் பேசியதால் கட்டிட தொழிலாளியை கொலை செய்தேன் என்றார்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 45). இவர் சென்னையில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான லிங்கதுரையிடம் (50) ரூ.1,000 கடன் வாங்கியதாகவும், பின்னர் செந்தில் கடனை திருப்பி கொடுக்காமல், காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 18-ந்தேதி செந்தில், பக்கத்து ஊரான சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னுடைய உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பேய்க்குளத்தை அடுத்த பழனியப்பபுரம் பகுதியில் வந்த‌போது லிங்கதுரை மற்றும் அவருடைய உறவினரான ஜெகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து, செந்திலை வழிமறித்து கடனை திருப்பி தருமாறு கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த லிங்கதுரை, ஜெகன் ஆகியோர் உருட்டுக் கட்டையால் செந்திலை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இதுபற்றி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொலையாளிகள் லிங்கதுரை, ஜெகன் ஆகிய 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள‌ காட்டுக்குள் பதுங்கி இருந்த லிங்கதுரையை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான லிங்கதுரை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “செந்தில் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏளனம் பேசிவந்தார். அதனால் அவரை அடித்து கொலை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

    ×