என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் அருகே கால்நடை மருந்தகத்திற்கு நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படுவாரா?- விவசாயிகள் வலியுறுத்தல்
- தச்சன்விளை கால்நடை மருந்தகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.
- உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் கால்நடை உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
தூத்துக்குடி
சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் கால்நடை மருந்தகம் கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
இதனால் தச்சன்விளை சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை போட்டு பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் தச்சன்விளை கால்நடை மருந்தகத்தில் கால்நடை மருத்துவர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப் படாமல் இருப்பதால் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது.
கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போட அப்பகுதி மக்கள் திசையன்விளையில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு பெரும் சிரம ங்களுக்கு இடையே கொண்டு சென்று வருகிறார்கள்.இதனால் விவசாயிகள் தங்களது பணிகளை விட்டுவிட்டு சென்று வருவதால் அவர்களுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் கால்நடை உயிரிழப்புகளும் ஏற்படுவதால் பொது மக்களும் விவசாயி களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் கூடுதல் பொறுப்பாக தச்சன்விளை கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வாரத்தில் ஓரிரு நாட்கள் வந்து செல்கிறார்.
ஆனால் விவசாயிகள் பணிகளை முடித்து விட்டு கால்நடை மருத்துவ மனைக்கு தங்களது கால்நடைகளை கொண்டு செல்லும் போது பெரும்பாலும் கால்நடை மருந்தகம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே தச்சன்விளை சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் கால்நடை மருத்தகத்தில் நிரந்தரமாக கால்நடை மருத்துவர் பணியில் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்