search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
    • 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார்.

    சென்னை:

    சென்னை கோவளத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். 27 வயதான இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வ தேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ளார்.

    அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்த ராஜசேகருக்கு மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுமார் 1 வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு.

    இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். 6 மலைகளில் ஏறி அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

    எவரெஸ்ட சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள பகுதிகளில் தங்கி உடலை யும், மனதையும், குளிருக்கு தயார் செய்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயார் ஆனார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். இதன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

    ஒரு மாதத்துக்கும் மேலான பயண அனுபவத்தில் பல கடுமையான சோதனைகள், தடைகளை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை ராஜசேகர் அடைந்து சாதித்து காட்டியுள்ளார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.

    பரமக்குடி

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ-496 மதிப்பெண்களும், மாணவர் அபிஷேக்-494 மதிப்பெண்களும் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக்குழு சார்பில் பரிசு வழங்கி பாராட்டினர்.

    இதில் கல்வி குழுத் தலைவர் மலேசியாபாண்டியன், கல்விக்குழு செயலாளரும், தாளாளருமான அழகர்சாமி, பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் பாஸ்கரன், துணைச் செயலாளர் செல்லக்காரி, கல்வி குழு உறுப்பினர்கள் போஸ், சந்திரசேகரன், ஹரிகிருஷ்ணன், முதல்வர் பூமாதேவி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
    • மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா உலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22 மாணவ-மாணவியர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 22 பேரும் தேர்ச்சி பெற்றனர். 3 மாணவ- மாணவிகள் 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றனர். 15 பேர் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். கணிதப்பாடத்தில் ஒரு மாணவர் 100 மதிப்பெண்ணும், அறிவியல் பாடத்தில் 3 பேர் 100 மதிப்பெண்ணும் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவி கார்னிஷா-488, ஜீவா-488, மனோ ஆனந்தி-488 கவி-485, சர்மிளா-476, சந்துரு-476 ஆகியோரை தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தது.
    • முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டி னர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பள்ளி அளவில் மாணவி நவதர்ஷினி 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து கணிதவியல் பாடத்தில் சதமடித்து முதலிடத்திலும், மாணவி நஷாஹா 500-க்கு 484 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடத்திலும், மாணவி கவிப்ரியா 500-க்கு 483 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்திலும் சாதனை படைத்துள்ளனர்.

    ஹனூனா மரியம், சஜிலா பர்வீன், முனீஸ் கனிஷ்கா, ஏ.சுமையா பாத்திமா, முஹம்மது அல்ரிபா, எஸ்.சுமையா பாத்திமா, சோபிகா ஆகிய 7 மாணவிகள் 450க்கு மேல் மதிப்பெண்களும், 35 மாணவிகள் 400-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து சாதனை படைத்த மாணவிகளை தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டி னர்.

    • எஸ்.ஆர்.வி.வி. பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
    • 10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் முதலிடத்தை பெற்றார்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானகிரி எஸ்.ஆர்.வி.வி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

    10-ம் வகுப்பு மாணவர் வெற்றிசெல்வம் இந்த பள்ளியில் முதலிடத்தை பெற்றார். மாணவர் ஆதிஸ்குமார் 2-ம் இடத்தையும், மாணவி விலாஷினி பள்ளி அளவில் 3-ம் இடத்தையும் வென்றனர்.

    சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைவர் அய்யப்பன் பாராட்டி பேசுகையில், பள்ளி ெதாடங்கிய காலம் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறோம். எஸ்.ஆர்.வி.வி.சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வியுடன் விளையாட்டு மற்றும் பிற கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

    மேலும் அவர் சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ஐஸ்வர்யா, நிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்களும் பாராட்டினர்.

    • இந்தியா சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது
    • நட்சத்திர மல்லர் கம்ப விளையாட்டு வீரர் ஹேமசந்திரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    விழுப்புரம்:

    இந்தியா சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த சர்வதேச மல்லர்கம்ப விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து விழுப்புரம் பெரிய காலணி பகுதியை சேர்ந்த நட்சத்திர மல்லர்கம்ப விளையாட்டு வீரர் ஹேமசந்திரன் சர்வதேச மல்லர்கம்பம் தனிநபர் மற்றும் குழு இரு விளையாட்டு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    மேலும் தங்க பதக்கம் வென்ற ஹேமச்சந்திரன் கடந்த 2 ஆண்டில் மட்டும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கமும், பல்கலைக்க ழகங்களுக்கு இடையிலான போட்டியில் தங்கப் பதக்கமும், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை அணி வென்றது.
    • வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மதுரை

    மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தில் மாவட்ட டேபிள் டென்னிஸ் மேம்பாட்டு சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 4 நாள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதனை தேசிய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் முதல் முறையாக 22 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் வித்யாசாகர், மதுரை மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சி சங்க செயலாளர் நாகராஜன் கணேசன், விளையாட்டு இயக்குனர் நாகராஜன், கௌரவ உறுப்பினர் பிரகதீஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-2 தேர்வு எழுதிய 233 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி மாரிச்செல்வி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. பிளஸ்-2 தேர்வு எழுதிய 233 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18 மாணவர்கள் 550-க்கு மேல், 68 மாணவர்கள் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர். மாணவி மாரிச்செல்வி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று தென்காசி மாவட்ட அளவில் 3-ம் இடமும், சங்கரன்கோவில் தாலுகா அளவில் முதலிடமும், பள்ளி அளவில் முதலிடமும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். மாணவி பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக தமிழ்-98 ,ஆங்கிலம்-97, இயற்பியல்-99 மற்றும் வேதியியல் ,உயிரியல் ,கணிதம் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    மாணவி பிரீத்தி வர்ஷினி 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். பாடவாரியாக மாணவி பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-98, ஆங்கிலம்-97, உயிரியல்-99, கணிதம்-99, இயற்பியல் மற்றும் வேதியல் பாடத்தில் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி யாமினி பிரியா மற்றும் பிரவீன் குமார் இருவரும் 600-க்கு 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3-ம் இடம் பெற்றுள்ளனர். பாட வாரியாக முதல் மதிப்பெண் தமிழ்-98, 4 பேர் ஆங்கிலத்தில் 97 மதிப்பெண், 7 பேர் கணிதத்தில் 100-க்கு100 , ஒரு மாணவர் இயற்பியலில் 100-க்கு100 மதிப்பெண், 2 பேர் வேதியியலில் 100-க்கு100 மதிப்பெண், 10 பேர் உயிரியியலில் 100-க்கு100 மதிப்பெண், ஒரு மாணவர் வணிகவியலில் 100-க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் பொன்னழகன்,ஆசிரியர்கள், ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.

    • திருச்சியில் பாரத மண்ணே நீ வாழ்க பாடலுக்கு நடனம் ஆடினர்
    • ஆன்லைனிலும் இணைந்த பரத கலைஞர்கள்

    திருச்சி,

    இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் 6 நிமிடங்கள் 6 வினாடிகள் பாரத மண்ணே நீ வாழ்க என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்சியில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் 12,345 மாணவர்கள், பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடினர்.இந்த சாதனை நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோவை ஆல் இந்தியா என்டர்டைன்மென்ட் பவுண்டேஷன் மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏ.ஐ.எப். பைன் ஆர்ட்ஸ் குழுக்கள், 555 டான்ஸ் அகாடமிகள் இணைந்து நடத்தின.மேற்கண்ட பரதநாட்டிய நிகழ்ச்சிகள் திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், சென்னை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, ராணிப்பேட்டை, தருமபுரி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ஈரோடு, தூத்துக்குடி, ஓசூர் பல்வேறு மாவட்டங்களிலும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா, புதுடெல்லி, கொல்கத்தா ஆகிய வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா , மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் நடந்தது. ஆன்லைன் வாயிலாக நடந்த நேரலை நிகழ்ச்சிகளை ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இயக்குனர் டிராகன் ஜெட்லி உலக சாதனையாக பதிவு செய்தார்.

    • பிளஸ்-2 தேர்வில் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
    • செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் கிளப் மூலமாக 1979-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டு +2 தேர்வில் தேர்வு எழுதிய 201 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் பொன் அஜித் குமார் 593 மதிப்பெண்களும், மாணவிகள் பூஜாஸ்ரீ 587 மதிப்பெண்களும், விஜயமதி 585 மதிப்பெண்களும், யுவஸ்ரீ 585 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்றனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 61 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    பல்வேறு பாடங்களில் மொத்தம் 53 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் 3 இடங்கள் பெற்றவர்களை பாராட்டும் வகையில் பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களும், பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதில் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அரிமா உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பிரி கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் வகையில் மாறுபட்ட நடைமுறைகளில் செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    • பிளஸ் 2 பொதுத்தேர்வில் கரூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை பெற்றனர்
    • அரசு பள்ளிகளில் 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 104 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 4 நான்கு அரசுப் பள்ளிகள் இந்த சாதனை பட்டியலில் சேர்ந்துள்ளன. அதன்படி கரூர் பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி என 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் 4 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது கரூருக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • இந்தப்பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பரமக்குடி

    தமிழகம் முழுவதும் வெளியான பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி பள்ளி மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் மாணவி தீபிகா முதலிடத்தையும், சவிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    வணிகவியல் பாடத்தில் மாணவி கோபிகா, விலங்கியல் பாடத்தில் தீபிகா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். 99 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தாளாளர் சாதிக் அலி, தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    சவுராஷ்டிரா பள்ளி

    சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் கார்த்திகேயன், 2-ம் இடம் பிடித்த மாணவி பிரித்திகா, 3-ம் இடம் பிடித்த மாணவன் பார்த்த சாரதி ஆகியோரை கல்வி குழு தலைவர் நாகநாதன், உப தலைவர் நாகநாதன், தாளாளர் அமரநாதன், இளநிலை பள்ளி தாளாளர் ராஜன் ஆகியோர் பாராட்டினர். இந்தப் பள்ளியில் 96 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி லக்சிதா ஸ்ரீ முதலிடமும், மாணவர்கள் அதீஸ்வரன் 2-ம் இடமும், பாலாஜி 3-ம் இடமும் பெற்றுள்ளனர். மாணவிகள் தனுஸ்ரீ, துர்கா கணிப்பொறியியல் பாடத்திலும் 100 மதிப்பெண்களும், இந்திரஜித் என்ற மாணவன் தாவரவியல், பிரியா என்ற வணிகவியல் பாடத்திலும் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    மாணவ - மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் ராசி போஸ், இணைத்தலைவர் பாலுச்சாமி, பள்ளியின் தாளாளர் லெனின் குமார், ஆயிர சபை செயலாளர் செல்வராஜ், கௌரவ செயலாளர் வக்கீல் செந்தில்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், உதவி தலைமை ஆசிரியை சுமதி, கல்வி குழு உறுப்பினர்கள் சுதர்சன், பூபாலன் உள்பட ஆசிரியர்கள்பாராட்டினர்.

    இந்தப் பள்ளியில் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுப கீர்த்தி முதலிடமும், கீர்த்திகா இரண்டாம் இடமும், அர்ஜுன் மூன்றாம் இடம் பெற்றனர். இவர்களை பள்ளியின் தாளாளர் முருகானந்தம், இணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்தப் பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×