search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவிகளை, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் பாராட்டினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டிகள், கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும், 17வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்தனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவிகளை, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர், பாராட்டி வாழ்த்தினார்கள்.

    • அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட அளவிலான ஜுடோ போட்டிகள் கந்தர்வகோட்டையில் அண்மையில் நடைபெற்றது.போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.அப்துல் ஆரிப் 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று முதலிடமும், மாணவன் கே.சிராஜ் 66 கிலோ எடைப்பிரிவில் முதவிடமும், மாணவன் டி.சண்முகசுந்தரம் 55 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும், மாணவன் கேஎம்.அருளானந்தன் 90 கிலோ பிரிவில் முதலிடமும், மாணவன் பி.சந்தோஷ்குமார் 66 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும், மாணவன் வி.மனோஜ் 50 கிலோ எடைப்பிரிவில் முதலிடமும் பெற்றனர்.மேலும் பள்ளி மாணவ, மாணவியர் 6 பேர் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.

    சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் வீரையா, பயிற்சியாளர் பிரகாஷ் உள்ளிட்டோரை பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி கே.எஸ்.ஆபியா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.

    வீரபாண்டி:

    இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் மினிஸ்டர் ஆப் யூத் அபேர்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் மெம்பர் ஆப் இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி சார்பில் பிட் இந்தியா நடத்திய 7-வது தேசிய விளையாட்டு போட்டி ஜெய்ப்பூர், மிதான்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. இதில் வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு அணிக்காக திருப்பூரிலிருந்து ஜே.எஸ்.ஏ. வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி கே.எஸ்.ஆபியா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிக்கும், பயிற்சியாளர் வெங்கடேசுக்கும் பிளாட்டோஸ் பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸ்டில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி டீ பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி டீ பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளியைச் சேர்ந்த 10 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிவாகை சூடினர். 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தனுஷ் 10 புள்ளிகளும், 16 வயதுக்குட்பட்டோர் போட்டியில் ஜோ ஜெப்ரி 14 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.

    19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் மாணவன் சண்முகம் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர், 800 மீட்டர் என அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார். 10 முதல் 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் 100, 200, 400, 600, 800 மீட்டர் ஓட்டம் முதலான போட்டியில் மாணவ-மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். 14, 16, 19 வயதுக்குட்பட்டோர் உயரம் தாண்டும் போட்டியில் பிரணவ், ஜெப்ரி, சண்முகம் ஆகியோர் முந்தைய சாதனையை முறியடித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும், உறுதுணையாக இருந்த விளையாட்டு ஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • 10 நிமிடத்தில் 400 மரக்கன்று நடும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
    • ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    பசுமை தமிழக இயக்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து மாவட்டத்தினை பசுமையானதாக ஆக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் 10 நிமிடத்தில் 20 ஆயிரம் நாட்டுவகை மரக்கன்றுகள் நடும்விழா மாவட்டம் முழுவதும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 200 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் முனியாண்டி தலைமையிலும், காளாப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜு தலைமையிலும், செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் நடந்தது.

    இதில் வேம்பு, புளி, பூவரசு, மா, நெல்லி, புங்கை, மகோகனி, நீர்மருது போன்ற நாட்டுவகை மரக்கன்றுகள் 10 நிமிடத்திற்குள் 400 மரக்கன்கள் நடவு செய்து சாதனை புரிந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜு, தலைமை ஆசிரியர்கள் சுபா, முனியாண்டி, ரமேஷ் மற்றும் ஒன்றிய துணைச்சேர்மன் சரண்யா ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தம்மாள், அகிலா கண்ணன், ரமேஷ், மகேஷ் கிராம நிர்வாக அலுவலர் அருண், உதவியாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    • கொல்கத்தாவில் நடந்த தேசிய ஹேக்கத்தான் போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தது.
    • இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையம், இந்திய தேசிய பொறியியல் அகாடமி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது.

    கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை மாணவர்கள் எம்.இசக்கிமுத்து, கே.ஹரி தினேஷ்குமார்,

    எம்.மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ''டாப்-5'' இடம் பெற்று சாதனை படைத்தனர்.

    போட்டியின் முதல் சுற்றில் மாணவர்கள் தங்கள் செயல்திட்டத்திற்கான விளக்கத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தனர்.அதில் இருந்து மொத்தம் 95 அணிகள் மட்டுமே ேதர்வு செய்யப்பட்டனர்.இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ''பங்குச் சந்தை கணிப்பு'' என்ற தலைப்பில் செயல் திட்டத்தை வெளியிட்டனர்.

    தொடர்ந்து 30 மணி நேரம் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, முதல்வர் மாரிச்சாமி, துறைத்தலைவர் வளர்மதி, பேராசிரியர்கள் கருப்பசாமி, மதினா, விமலா ஆகியோர் பாராட்டினர். 

    • கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்
    • ஜூடோ போட்டிகள்

    கரூர்

    மாநில அளவிலான ஜூனியர் ஜூடோ போட்டியில், கரூர் அரசு கலை கல்லுாரி மாணவர் தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில், மாநில அளவிலான ஜூடோ போட்டிகள், திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில், கரூர் அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்.சி., தாவரவியல், இரண்டாமாண்டு படித்து வரும் மாணவர் ஜெய்தரன், முதலிடம் பிடித்து தங்கப்ப தக்கம் வென்றார்.வெற்றி பெற்ற மாணவர் ஜெய்தரனை, கல்லுாரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற் கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • ஓட்டப்போட்டியில் பரமக்குடி மாணவர் சாதனை படைத்தார்.
    • பிளஸ்-2 மாணவர் ரோகித் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி என இரண்டிலும் பரமக்குடி ஹரிஸ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவர் ரோகித் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

    அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவரின் சாதனையை பள்ளியின் பொருளாளர் கல்பனா தேவி, முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன், நிர்வாக மேலாளர் சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினார்.

    • வில்வித்தை போட்டியில் தென்காசி எம்.கே.வி.கே. பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் முதல் 2 தங்கப்பதக்கத்தினை லோக சரவணன் மற்றும் ரகுமத்துல்லா பெற்றனர்.

    தென்காசி:

    சென்னை பூந்தமல்லியில் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தென்காசி எம்.கே.வி.கே. பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர்கள் லோக சரவணன், ரகுமத்துல்லா, விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 2 தங்கப்பதக்கத்தினை லோக சரவணன் மற்றும் ரகுமத்துல்லா பெற்றனர். விக்னேஷ் 2-வது பரிசான வெள்ளிப்பதக்கத்தினை பெற்றார். பதக்கங்களை பெற்ற மாணவர்களை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் க.பா. மிதுன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் சே.ஏசுபாலன், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

    • 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம்.
    • 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிளான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 57 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் 125 ஆம் ஆண்டுகள் கல்வி பணியாற்றி இவ்வாண்டு விழாக்காணும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி மாணவ.-மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 17 பதக்கங்களும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 25 பதக்கங்களும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 42 பதக்கங்களும் பெற்று 171 புள்ளிகள் பெற்று இப்பள்ளி மாணவ -மாணவிகள் சாதனை படைத்தனர்.

    குழுப்போட்டிகளில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் வளைகோல்பந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து இரண்டாம் இடமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து முதலிடம், கூடைபந்து இரண்டாம் இடம், கபடி போட்டி முதலிடம், கால்பந்து இரண்டாம் இடம், மேசைபந்து முதலிடம். மாணவிகள் பிரிவில் கூடைபந்து முதலிடம், வளையபந்து போட்டியில் முதலிடமும் பெற்றனர்.

    19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் வளைகோல் பந்து இரண்டாம் இடம். கூடைப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம்.

    மாணவிகள் பிரிவில் கூடைப்பந்து முதலிடம், வளையப்பந்து முதலிடம், பூப்பந்து முதலிடம் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்த மாணவ, மாணவிகளையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, பி.மார்கண்டன், .சக்திவேல், .ஹரிஹரன், .ராக்கேஷ் ஆகியோரை பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், முன்னாள் செயலர் பாலசுப்ரமணியன், பள்ளி குழுதலைவர்.சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி, உதவித்த லைமை ஆசிரியர்கள்.துளசிரெங்கன், . வரதராஜன் மற்றும் பள்ளி ஆசிரியரிகள், ஆசிரியைகள், அலுவலர்கள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • கன்னியாகுமரியில் இருந்து நேபாளம் வரை நடக்கிறார்
    • பைக், பணம் இருந்தால் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா?

    கன்னியாகுமரி:

    நாகர்கோயில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி நிஷாந்த்.இவர் கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் லடாக் வரை நடைபயணம் மூலமாக சென்று 3 உலக சாதனை புத்தகம் மற்றும் பல சாதனைகளில் இடம் பிடித்து உள்ளார்.

    இந்த முறை புதியதாக சாதனை படைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடைபயணம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து உள்ளார்.

    அதன்படி அவர் தனது நடைபயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து நேற்று தொடங்கினார். காந்தி வடிவில் வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முத்தனா திரில்லாபூர் காந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் நாகேந்திரன் ஆகியோர் அவரது நடை பயணத்தை தொடங்கி வைத்தனர்.

    பைக், பணம் இருந்தால் மட்டும் தான் பயணம் செய்ய முடியுமா ஒரு ஏழை நினைத்தால் அவனது தன்னம்பிக்கையால் நடந்தே சாதிக்கலாம் என்று ஏழை மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரி முதல் நேபாளம் வரை நடந்து பயணம் செய்கிறேன். என்று அவர் கூறினார்.

    இந்த பயனத்தை தொடக்கி வைத்த முத்தனா திரில்லாபூர் காந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் நாகேந்திரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

    • மாவட்ட விளையாட்டு அலுவலர் தொடங்கி வைத்தார்
    • சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சபீர் (வயது27). இவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு 58 மணி நேரத்தில் 3ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரத்தை காரில் கடந்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

    இதனை முறியடிக்கும் வகையில் கன்னியா குமரியில் இருந்து காஷ்மீருக்கு அதே தூரத்தை 48 மணி நேரத்தில் கடக்க சபீர் திட்டமிட்டார். அதன்படி அவரது சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி 4 வழி சாலை முடிவடையும் சீரோ பாயிண்ட் பகுதியில் நடந்தது.

    அவரது சாதனை பய ணத்தை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர் டேவிட் டேனியல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சபீர், தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக பல்வேறு மாநிலங்களை கடந்து 3600 கிலோ மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் கடந்து காஷ்மீர் சென்றடைகிறார்.

    இதன் மூலம் இவரது சாதனை பயணம் சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது புத்தகத்தில் இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×