search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • குறுவட்ட தடகள போட்டியில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி குறு வள மைய போட்டிகள் சின்னதாராபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மாணவர் தருண் நீளம் தாண்டுதலில் முதலிடம் பெற்றார். மேலும் உயரம் தாண் டுதலில் மூன்றாம் இடம் பெற்றார். இம்மாணவர் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார். மேலும் இப்பள்ளி மாணவி லக்க்ஷயாபரணி உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். 

    • உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு பாராட்டு கூட்டம்
    • தி.மு.க. ஆட்சியில்எந்த கிராமத்தி லும் அடிப்படை வசதி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு பாராட்டு கூட்டம் அகஸ்தீஸ்வரம் பிள்ளை யார் கோவில்  எதிரில் உள்ள மைதானத்தில் நடந்தது.

    பேரூர் செயலாளர் சிவபாலன்தலைமை தாங்கினார்.அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம், அவைத்தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் பாலமுருகன் தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உ ள்ளாட்சி தேர்தலில்அ.தி.மு.க . சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதற்கு உழைத்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரி வித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஏழை மக்களுக்கு பயன்பட க்கூடிய திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க. ஆட்சியின் கடந்த 1 ½ ஆண்டு கால சாதனையாகும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    வருகிறபாராளுமன்ற தேர்தலில்பா.ஜ.க.வுடன் கூட்டணிஅமைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு எடுக்கும்.அவ்வாறு கூட்டணி வரும்போது அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    சுற்றுலா பயணிகள் கடலில்பயணம் செய்ய ரூ.8 கோடி செலவி ல்வாங்கப்பட்ட2 சொகுசு படகுகள் 3 ½ ஆண்டுகள்ஆன பிறகும்இதுவரை இயக்கப்படாமல்பாழாகிக் கொண்டிருக்கிறது. ரூ.68 கோடிசெலவில் பேனா நினைவு சின்னம் வைத்துஎன்ன பயன்? அ.தி.மு.க. ஆட்சியில்திட்டங்கள் நிறைவேற்றப்படாத கிராமங்களேஇல்லை என்ற நிலைஇருந்துவந்தது.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில்எந்த கிராமத்தி லும் அடிப்படைவசதிதிட்டங்கள்நிறைவேற்றப்படவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாத கிராமங்கள் பற்றி சட்டசபையில் நான் குரல் எழுப்புவேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சிக்கு வருவது உறுதி.

    வருகிற தேர்தலில் அகஸ்தீஸ்வரம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதைநிருபிக்கும் வகையில் தொண்டர்கள் இன்றிலிருந்து இரவு -பகல் பாராது அயராது பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில்பேரூர் செய லாளர் கள்வீரபத்திரன், குமார், மனோகரன், எழிலன், மணிகண்டன், வடக்குதாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்பார்த்தசாரதி, நிர்வாகிகள் சுரேஷ் செல்லம்பிள்ளை, செல்லபெருமாள் மற்றும் அகஸ்தீஸ்வரம் பேரூர் கிளை நிர்வாகிகள், மகளிர்அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் துணைசெயலாளர் பால்துரை நன்றி கூறினார்.

    • இவர் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
    • 60 நிமிடத்தில் கட்டிடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையை படைத்தார்.

    பாரீஸ் :

    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆலியன் ராபர்ட் என்பவர் உயரமான கட்டிடங்களில் எந்தவித பாதுகாப்பு கருவிகளும் இன்றி ஏறுவதில் புகழ் பெற்றவர். இதன் காரணமாக இவர் 'பிரெஞ்சு ஸ்பைடர் மேன்' என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.

    இந்த நிலையில் ஆலியன் ராபர்ட் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 48 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

    ஆலியன் ராபர்ட் பல முறை இந்த கட்டிடத்தில் ஏறியிருந்தாலும் இந்த முறை வெறும் 60 நிமிடத்தில் கட்டிடத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையை படைத்தார்.

    "60 வயது என்பது ஒன்றும் இல்லை. நீங்கள் இன்னும் விளையாட்டில் ஈடுபடலாம், சுறுசுறுப்பாக இருக்கலாம், அற்புதமான விஷயங்களைச் செய்யலாம் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லவே இந்த முறை 48 மாடி கட்டிடத்தில் ஏறினேன்" என ஆலியன் ராபர்ட் கூறினார்.

    ஏற்கனவே ஆலியன் ராபர்ட் உலகம் முழுவதும் உள்ள பல உயரமான கட்டிடங்களில் ஏறியுள்ளார். உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீபாவின் உச்சியை அடைந்ததும் அவரது துணிச்சலான சாதனைகளில் ஒன்றாகும்.

    அவர் வழக்கமாக தனது ஸ்டண்ட்களை முன் அறிவிப்பு இன்றியும் அனுமதி இல்லாமலும் செய்வது வழக்கம். இதனால் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல் இந்த முறையும் அவர் கட்டிடத்தின் உச்சியை அடைந்ததும் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர்.
    • திருடப்பட்ட சிலை எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்திற்கு வருகை தந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கும்பகோணம் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கான புதிய அலுவலக கட்டிடத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். தொடர்ந்து, கும்பகோணம் மற்றும் மதுரையில் சிறப்பாக பணியாற்றிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு வெகுமதியுடன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில், சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர். குறிப்பாக, 1962-ம் ஆண்டு திருடு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டது சிறப்பிற்குரியது. இந்த சிலைகள் அனைத்தும் இனி எக்காலத்திலும் யாராலும் திருட முடியாத வகையில், சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன், சமீபத்தில் கைப்பற்றிய 300 சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும், முப்பரிமான முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரேடியோ ப்ரீக்குவன்ஸி முறையில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், அப்படி மீறி சிலை திருடப்பட்டால், இது எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மேலும் 60 சிலைகளை விரைவில் மீட்க சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறிளார்.

    • முதல் பரிசாக 11-ம், இரண்டாம் பரிசாக 15-ம், மூன்றாம் பரிசாக 16-ம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவ- மாணவிகளை பாராட்டினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தேத்தாக்குடி தெற்கு கைலாச கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசாக 11-ம், இரண்டாம் பரிசாக 15-ம், மூன்றாம் பரிசாக 16-ம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்பள்ளியின் மாணவர்கள் அதிக அளவில் பதக்கங்களை பெற்றதை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, துணைத்தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேகரத்தினம், பொருளாளர் சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாணவ- மாணவிகளை பாராட்டினர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் 75- வது சுதந்திர தின விழாவையொட்டி கேரளாவை சேர்ந்த 23 இளைஞர்கள் கன்னியாகுமரியில் இருந்து மத்திய பிரதேசம் வரை மோட்டார் சைக்கிள் சாதனைப் பயணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இந்த மோட்டார் சைக்கிள் சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்து கொண்டு கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சாதனை மோட்டார் சைக்கிள் பயணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட6 மாநிலங்கள் வழியாக வருகிற 11-ந்தேதி மத்தியபிரதேசத்தை சென்றடைகிறது. மொத்தமுள்ள 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.

    • போட்டிகளில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சிறப்பாக பங்கு கொண்டு பல பரிசுகளை வென்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிவதிப்ஜினேஷ் ராம் பரிசுகளை வழங்கினர்.

    தென்காசி:

    செங்கோட்டை டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் சுரண்டை எஸ்.ஆர் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் நடத்திய தென்காசி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கலை இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    கலை, இலக்கியம், நடனம், நாடகம், பேச்சுப்போட்டி (தமிழ், ஆங்கிலம்) போன்ற பல விதமான போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சிறப்பாக பங்கு கொண்டு பல பரிசுகளை வென்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி, தென்காசி மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம் வென்று 2-ம் இடம் பெற்று சாதனை புரிந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எஸ். ஆர் ஸ்கூல் ஆப் எக்செலன்ஸ் பள்ளி செயலாளர் சிவதிப்ஜினேஷ் ராம் பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யதுஅலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் வாழ்த்துக்களை கூறி பாராட்டினர்.

    • இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
    • மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர்.

    மன்னார்குடி:

    சென்னையில் இந்தியன் புக் ஆப் வேல் ரெக்கார்ட் அமைப்பினர் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்திய சிலம்பு சுற்றும் சாதனை நிகழ்ச்சியில் மன்னார்குடி அருகே கோட்டூர் 8-ம் வகுப்பு மாணவன் சஸ்வின், கம்பங்குடி மாணவன் ஆர்ச் சுரேன்செல்வா ஆகிய இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

    இதையடுத்து கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் தற்காப்பு பயிற்சி பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன், லயன் சங்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், பாலா, சார்ஜ், மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.
    • மேக் ரதர்போர்ட் 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்றார்.

    சோபியா :

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான மேக் ரதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன் விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளான்.

    மேக் ரதர்போர்ட்டின் இந்த சாதனை பயணம் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது.

    மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான 'ஷார்க்' என்கிற விமானத்தில் பயணம் செய்த மேக் ரதர்போர்ட் 3 மாதத்தில் தன்னுடைய லட்சிய பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் பருவமழை, மணல் புயல் மற்றும் கடுமையான வெப்பம் என அவரது வழியில் எதிர்பாராத பல தடைகள் வந்ததால் பயணம் நீண்ட காலம் நீடித்தது.

    அதன்படி கடந்த 5 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை சுற்றி வந்த மேக் ரதர்போர்ட் நேற்று பல்கோரியா தலைநகர் சோபியாவில் விமானத்தை தரையிறக்கி சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.

    மேக் ரதர்போர்ட்டை வரவேற்கவும் அவரது சாதனைகளைக் கொண்டாடவும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான மக்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்கள் கரவொலிகளை எழுப்பியும், ஆரவாரம் செய்தும் மேக் ரதர்போர்ட்டுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு தனது 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்று உலகின் இளம் வயது விமானி என்கிற பெருமையை அடைந்த மேக் ரதர்போர்ட் தற்போது 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் 19 வயதில் விமானத்தில் தனியாக உலகை சுற்றி வந்த இளம் விமானி என்கிற பெருமைக்குரியவர் ஜாரா ரதர்போர்ட். இவர் வேறு யாரும் அல்ல, மேக் ரதர்போர்ட் மூத்த சகோதரி தான். அதாவது, தனது அக்காவின் சாதனையைதான் மேக் ரதர்போர்ட் முறியடித்துள்ளார்.

    • சந்தனமாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலர் நெல்சன் தலைமை தாங்கினார்.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், சாதனைகளை விளக்கிப் பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. சந்தனமாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலர் நெல்சன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் செல்லத்துரை, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் சாமுவேல் ராஜா, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், மாநில பேச்சாளர்கள் ராஜன், நெல்லை ரவி ஆகியோர் சாதனைகளை விளக்கிப் பேசினர்.

    கூட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால் வரவேற்றார். நகர பொருளாளர் சுதந்திரராஜன் தொகுத்து வழங்கினார். வார்டு செயலர் அப்பாதுரை நன்றி கூறினார்.

    • தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
    • 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்றனர்.இதுகுறித்து கராத்தே பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்,கோஜிரியோ கராத்தே அமைப்பின் சார்பில், தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது.இந்தப் போட்டிகளில் தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டா,குமிட்டோ,உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 8 தங்கப்பதக்கம்,10 வெள்ளிப்பதக்கம், 16 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கன்சன் இந்தியா ட்ரஸ்ட் மேலாளர் சதிஷ்குமார், கராத்தே பயிற்சியாளர் சரவணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.

    • மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் மண்டல அளவிலான, குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் இறகுப்பந்து போட்டியில், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 வகுப்பு மாணவிகள் என். முகமதா, எஸ். அரிப்ரீத்தி, ஆகியோர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவிகளை,பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத், முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

    ×