search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த பெற்றோர் புதிர் அட்டைகளை இணைக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர்.
    • நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    மயிலாடுதுறையை சேர்ந்த கல்யாண்குமார், உமாமகேஸ்வரி தம்பதியனரின் 5 வயது மகன் சாய் மித்ரன். இவர் தஞ்சை மாவட்டம் திருபுவனம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.

    சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த பெற்றோர் புதிர் அட்டைகளை இணைக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர். இதனை அடுத்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் திருபுவனம் மகரிஷி வித்யா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்களில் 300 புதிர் அட்டைகளை இணைக்க வேண்டும் என நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவன் சாய் மித்திரன் 29.5 நிமிடங்களில் 350 புதிர் அட்டைகளை இணைத்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்துள்ளார்.

    அவருக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இது போன்ற மாணவர்களின் திறனை மேம்படுத்த தங்களது பள்ளி முழு ஒத்துழைப்பு நல்கும் என பள்ளியின் நிர்வாகிகள் கூறினர்.

    • நேபாளில் இந்தோ -நேபாள் சர்வதேச தடகள போட்டி நடைப்பெற்றது.
    • மேலும் பலரும் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    நேபாளில் இந்தோ -நேபாள் சர்வதேச தடகள போட்டி நடைப்பெற்றது. கூடைப்பந்து, வாலிபால், பேட்மிட்டன், டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தஞ்சையை சேர்ந்த சீதளாதேவி முதல் இடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றார். 1500 மீட்டர் ஓட்டத்தில் வாளமர்கோட்டையை சேர்ந்த விமலா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். வாகை சூடி சொந்த ஊரான தஞ்சை வந்த வீராங்கனைகள் சீதளாதேவி, விமலா ஆகியோருக்கு பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வீராங்கனைகளை வாழ்த்தி வரவேற்றார். மேலும் பலரும் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.

    • சமது பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்
    • மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள்

    திருச்சி:திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான தடகளம், கபடி, கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் திருச்சி காஜா நகரில் அமைந்துள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். குறிப்பாக 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும், கபடி போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடமும், தடகள போட்டியில் மாணவி சி.தாரணி 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், மாணவர் சி.கோகுல் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், ஆர்.தணுஸ்ரீ 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவர்களை மஜ்லிஸ் உல் உலமா சங்கத்தலைவர் டாக்டர் ஏ.கே.காஜா நஜீமுதீன், பள்ளி தாளாளரும், செயலாளருமான டாக்டர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல், பள்ளி பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், சங்க உறுப்பினர்கள் ஜனாப் ஏ.எம்.அப்துஸ் சலாம், பள்ளி முதல்வர் டாக்டர் சி.ஜே.சாக்கோ, உடற்கல்வி இயக்குனர் டி.உமா மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • ஒரு வளையம் உடலின் பல பாகங்களில் சுழலும் கலைக்குத்தான் ஹூலா ஹூப்.
    • 30 நிமிடம் நடைபயிற்சியில் கிடைக்கும் உடல்நல பலன்கள் இதில், 10 நிமிடத்தில் பெற முடியும்.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரை சேர்ந்த மகேஷ்குமார் - ரேகா தம்பதி மகள் சஷ்டிகா. லிட்டில் கிங்டம் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். ஊரடங்கு நேரத்தில் பொழுதுபோக்குக்காக இவர் விளையாடிய ஹூலா ஹூப் விளையாட்டு இன்று பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

    ஒரு வளையம்.. உடலின் பல பாகங்களில் சுழலும் கலைக்குத்தான் ஹூலா ஹூப். ஜிம்னாஸ்டிக் கலையின் உட்பிரிவு இது. உடலின் இடுப்பு, கை, கால், மணிக்கட்டு, கால் முட்டி, பாதம், தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வளையத்தை மாட்டி சுற்றலாம். ஒலிம்பிக் போட்டியிலும் ஜிம்னாஸ்டிக் பிரிவிலும் இவ்வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன.சிறந்த பயிற்சியின்றி வளையத்தை சுற்றுவது என்பது சாதாரண காரியம் இல்லை.

    உடலின் எல்லா பாகங்களும் அசைந்து கொடுத்தால் மட்டுமே வளையம் தொடர்ச்சியாக சுழலும். 30 நிமிடம் நடைபயிற்சியில் கிடைக்கும் உடல்நல பலன்கள் இதில், 10 நிமிடத்தில் பெற முடியும். இதை சர்வசாதாரணமாக செய்து குறுகிய காலத்தில் சாதித்துள்ளார் சஷ்டிகா.ஊரடங்கின் போது வீட்டுக்குள்ளேயே விளையாடிட்டு இருந்தேன். அப்பா, அம்மா ஹூலா ஹூப் வாங்கி கொடுத்தாங்க. வீடியோ பார்த்து நானே சுற்றிப்பழகினேன். ஒரே நேரத்தில் குறைந்த நேரத்தில் அதிகமுறை என்னால் சுழற்ற முடிந்தது. இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் முயற்சி பண்ணலாம்னு பயிற்சி எடுத்தேன்.ஒரு நிமிடத்தில், 248 முறை முழங்கால்களில் வளையத்தை சுழற்றியது சாதனையாக அமைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர். அடுத்து கின்னசில் இடம்பெற வேண்டும் என்பதே லட்சியம் என்றார்சஷ்டிகா. 

    • 29 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் ஜூடோ சங்கம் சார்பில் காரியாபட்டி தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மினி சப் ஜூனியர் சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் மினி ஜூனியர் பிரிவில் மேலூர் ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ருகினா, லத்யஸ்ரீ, சந்தோஷ், ரஞ்சன், தயாநிதி ஆகியோர் தங்கப்பதக்கமும், ரோஹித், நிஷா, சோபியா ஆகியோர் வெள்ளி பதக்கமும் பெற்றனர். யோசினி ஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    சப் ஜூனியர் பிரிவில் கோபிகாஸ்ரீ, ஜனனி, நிஷா, நகுல், கஜேஸ்வரன், ஹரிஷ், மதுரேஸ், நிதிஷ்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர். கேடட் பிரிவில் அர்ச்சனாதேவி, பவித்ரன் ஆகியோர் தங்கம் வென்றனர்.

    ஜூனியர் பிரிவில் முரளி கிருஷ்ணன் தங்கப் பதக்கமும், சந்துரு வெள்ளி பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்றனர்.சீனியர் பிரிவில் தமிழ் தேவா தங்கப்பதக்கமும்,

    மினி சப் ஜூனியர் பிரிவில் மேலூர் சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவர் போதிஸ்வரன் தங்கம் பெற்றார். கேடட் பிரிவில் மதுரை சேதுபதி பள்ளி மாணவன் சுதேசன் தங்கம் வென்றான். கேடட் பிரிவில் தனியாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் வெண்கல பதக்கமும், கேடட் பிரிவில் மேலூர் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவன் அகிலா வெள்ளி பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மதுரை மாவட்ட ஜூடோ சங்கத் தலைவர் சாலுமான், செயலாளர் புஷ்பநாதன், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    • கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
    • தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    சர்வதேச அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகள போட்டி நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல குமரி மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் எட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ண ரேகா என்பவரும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த 25-ந் தேதி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இந்த நிலையில் நேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 3 முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்) ஆகிய தடகள போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற கிருஷ்ண ரேகா 2 போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். தங்க பதக்கம் வென்ற தகவல் அறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உடன டியாக கிருஷ்ண ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்.

    இந்த வெற்றியானது குமரி மாவட்ட காவல் துறைக்கு பெருமையை சேர்த்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சி.பி.எஸ்.இ. தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை படைத்தார்.
    • மாணவ, மாணவிகளை முதல்வர் உஷா குமாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    சி.பி.எஸ்.இ.12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்டம் மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

    12-ம் வகுப்பில் மொத்தம் 96 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் கிருஷ்ணபிரியா 96 சதவீத மதிப்பெண்,சாம்சி நிர்மல் 94 சதவீத மதிப்பெண், வைரவபிரீத்தி 93 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

    10-ம் வகுப்பில் 110 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் கயிலை கார்த்திக் 96 சதவீத மதிப்பெண்களும், ராகவ கிருஷ்ணன் 95.8 சதவீத மதிப்பெண்களும், செந்தில் பிரபாகர் வேலு 95.4 சதவீத மதிப்பெண்களும், அபூர்வா 95.4 சதவீத மதிப்பெண்களும் பெற்றனர்.மாணவ, மாணவிகளை முதல்வர் உஷா குமாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    • 10- வகுப்பிலும் இரு பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பாராட்டத் தக்க வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
    • தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஆகர்ஷ் முதலிடம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தாமரை பன்னாட்டுப்பள்ளி தஞ்சாவூர் மற்றும் கும்பக்கோணம் ஆகிய இரு பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    12-ம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 69 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 212 மாணவர்களும் பெற்றுள்ளனர். தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஆகர்ஷ் முதலிடம் பெற்றுள்ளார். 6 மாணவர்கள் வேதியியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 474/500 மதிப்பெண் பெற்று ஸ்ரீராம் முதலிடத்தையும், விஜய் ஸ்ரீனிவாஸ், மாலிகா ஆகியோர் 473/500 பெற்று இரண்டாம் இடத்ைதயும் பெற்றுள்ளனர்.

    10- வகுப்பிலும் இரு பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பாராட்டத் தக்க வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஹிபாநாஸ் முதலிடம் பெற்றுள்ளார். 1 மாணவர் ஆங்கிலத்திலும், 2 மாணவர்கள் தமிழ்ப் பாடத்திலும், 1 மாணவர் சமூக அறிவியலிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் 483/500 மதிப்பெண் பெற்று ஹரி பிரானேஷ் முதலிடம் பெற்றுள்ளார். 1 மாணவர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

    சதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் தமிழ் மொழியில்100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • சிறந்த வெற்றியை பெற்றதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார் வாழ்த்தினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் முகமது பாஹிம் 91.6 சதவீதம் பெற்று முதலிடமும், முகமது உசேன் 83.4 சதவீதம் பெற்று 2-ம் இடமும், முகமது சபீர் 82.2 சதவீதம் பெற்று 3-ம் இடம் பிடித்தனர்.

    3 மாணவர்கள் தமிழ் மொழியில்100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளி சராசரி மதிப்பெண் 70 சதவீதம் ஆகும். பொதுத்தேர்வை எதிர்கொண்ட முதல் ஆண்டிலேயே சிறந்த வெற்றியை பெற்றதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் செயலாளர் முகமது பண்ணையார், பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

    • பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளர்
    • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்

    கரூர்:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள்அபார சாதனை புரிந்து கரூர் மாவட்டத்திற்கு தேசிய அளவில் பெருமை தேடித் தந்துள்ளனர்.

    10ம் வகுப்பு பொதுத்தே–ர்வில் மாணவி அக்ஷியா 500 க்கு 497 மதிப்பெண் மற்றும் கணிதம், அறிவியலில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார். மேலும் மாணவர் ஹரிஸ் குமார் 500 க்கு 489 மதிப்பெண் மற்றும் கணிதம், அறிவியலில் 100 க்கு 100 மதிப்பெண்ணும், மாணவி ரிதன்யா 500 க்கு 482 மதிப்பெண்ணும், மாணவி சம்யுக்தா 500 க்கு 478 மதிப்பெண்ணும், மாணவர் தீபக், ராகுல், மற்றும் மாணவி திவ்யா ஆகியோர் 500 க்கு 476 மதிப்பெண்ணும், பிரதிக்ஷா சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும், வித்யாபிரியா தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெ–ண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

    12ஆம் வகுப்பு பொது–த்தேர்வில் அறிவியல் பாடப்பிரிவில் மாணவி தக்ஷின்யா 500 க்கு 488 மதிப்பெண் மற்றும் ஐ.பி பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். கலை பாடப்பிரிவில் மாணவிகள் அஸ்வதி, சுவாதிகா 500 க்கு 483 மதிப்பெண் மற்றும் வணிகவியலில் 100/100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவில் மாணவி சிந்துஜா 500 க்கு 467 மதிப்பெண் மற்றும் இயற்பி–யல் மற்றும்வேதியி–யலில் 100 க்கு 100 மதிப்பெ–ண்ணும் மாணவர் லோகேஷ் 500 க்கு 479 மதிப்பெண் மற்றும் ஐ.பி பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்ணும், மாணவர் முகேஷ் 500 க்கு 466 மதிப்பெண் மற்றும் வேதியியலில் 100 க்கு 100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர் தேசிய கேலோ இந்தியா டென்னிஸில் தங்கப்பதக்கமும், முதல–மைச்சர் கோப்பை டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று கரூருக்கு பெருமை சேர்த்த மாணவி ஜனனி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 500 க்கு 449 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்து–ள்ளார்.

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்கள் வெற்றிக்கு உறுது–ணை–யாக இருந்த பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின் கிரிஸ்டல் மற்றும் இருபால்ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவிற்குபள்ளி–யின் தாளாளர் மோக–னரங்கன் தலைமை தாங்கி–னார் . செயலர் பத்மாவதி மோகன–ரங்கன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இவ்விழாவில் சாதனை புரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பொன்னா–டையும் பரிசும் வழங்கி கௌரவிக்க–ப்பட்டனர்.

    • பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
    • அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவி வருணப்பிரியா 500-க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவி ஹரிப்பிரியா மற்றும் மாணவர் விக்னேஷ் 458 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் விக்னேஷ் 450 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளையும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • விருத்தாசலத்தில் செஸ்போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    • செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலை பெற்ற 137 மாணவர்கள் பங்குபெற்றனர்.

    கடலூர்:

    உலக செஸ் தினம் மற்றும் சென்னையில் நடைபெறும் 44வது நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது. உலக செஸ் தினம் மற்றும் சென்னையில் வருகிற 28ம் தேதி தொடங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளில் பயிலும், செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலை பெற்ற 137 மாணவர்கள் பங்குபெற்றனர். போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா, வட்டார வளமை மேற்பார்வையாளர் செந்தில்குமார், உதவி தலைமையாசிரியர் கலையரசன், உடற்கல்வி அலுவலர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், தியாகு உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×