search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • சிலம்பம் ேபாட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், திருமுருகன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் பி.கே.சி வீர சிலம்பக் கழகம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரத்தை சேர்ந்த 38 மாணவர்கள் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை பிரிவில் கலந்து கொண்டு 11 முதல் பரிசு கோப்பையும், 14 இரண்டாம் பரிசு கோப்பையும், 13 மூன்றாம் கோப்பையையும் வென்று முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், திருமுருகன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதி அருகே அபிராமத்தில் உள்ள டி.எம்.அகடாமியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் சிலம்பம்,கராத்தே, பரத நாட்டியம்,கேரம், சதுரங்கம், ஓவியம் உட்பட பல்வேறு பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேவகோட்டையில், நடைபெற்ற சிலம்பம் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அபிராமம் டி.எம்.அகடாமி சார்பில் கலந்து கொண்ட 80 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். அவர்களை டி.எம்.அகாடமி நிறுவனர் மீனலோசனி மற்றும் சிலம்பம் பயிற்றுனர் ஆறுமுகம் ஆகியோரை பாராட்டினர். மேலும் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

    • வாலிபால் போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளது.
    • போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மேலூரில் 14, 17, 19 வயது பிரிவு ஆண்கள், பெண்க ளுக்கான வாலிபால் போட்டி அழகர் கோவில் சுந்தரராஜ உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. போட்டியை அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, அழகர் கோவில் உயர்நிலைப் பள்ளி தலை மையாசிரியர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத் தனர். 19 வயது பெண்கள் பிரிவு வாலிபால் போட்டி யில் அழகர் கோவில் சுந்தர ராஜ உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் இடத் தையும் 17 வயது பெண்கள் பிரிவில் அழகர் கோவில் சுந்தர ராஜ உயர் நிலைப் பள்ளி மாண விகள் முதல் இடத்தையும், தெற்குத் தெரு அரசு மேல்நி லைப்பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தை யும் பிடித்தனர். 14 வயது பெண்கள் பிரிவில் சுந்தர ராஜ உயர்நிலைப்பள்ளி மாண விகள் முதல் இடத்தை யும், தெற்கு தெரு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கள் 2-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவி களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

    • மானாமதுரை பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
    • பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் பள்ளியில் படித்து வரும் மாணவி லலிணா சென்னை ஆலந்துார் மான்போர்ட் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில் போட்டி நடைபெற்றது.

    தமிழ்நாடு கராத்தே சாம்பியன் 2023-க்கான இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு 2-ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். 

    இவரை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியை பேப்லிட் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜு, பூபாலன், கலைச்செல்வி கராத்தே மாஸ்டர் சிவ நாகர்ஜூன் மற்றும் பெற்றோர் ரவீந்திரன் பாலபிரியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.

    • மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
    • தருமபுரி அப்துல் கலாம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.1,00,000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்றது.

    இதற்கான இறுதிப் போட்டி கடத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதா–னத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் தருமபுரி அணி முதலி–டத்தையும், மாரண்டஹள்ளி அணி 2-ம் இடத்தையும், பென்னாகரம் அணி 3-ம் இடத்தையும், ஆலமரத்துப் பட்டி அணி 4-ம் இடத்தை யும் பிடித்தது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நடை–பெற்றது. விழாவுக்கு மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாம்பே சக்தி, பாலாஜி, சசிக்குமார், சதிஸ், செந்தமிழ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நிவேதா ஜெஷிகா ஆகியோர் முதலிடம் பெற்ற தருமபுரி அப்துல் கலாம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ.1,00,000 ரொக்க பணம் மற்றும் கோப்பையை வழங்கினார்கள்.

    இதேபோன்று ரூ.2,20,000 மதிப்புள்ள ரொக்க தொகை 2-ம், 3-ம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் 7 அணி–களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர். கல்லூரி மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.
    • 86.24 சதவீதத்தை பெற்று தமிழக அளவில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    சிவகாசி

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான நவம்பர், டிசம்பர், செமஸ்டர் தேர்வு முடிவுகளில் தரவரிசை பட்டியலில் 313 பொறியியல் கல்லூரிகளில் சிவகாசி பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி 86.24 சதவீதத்தை பெற்று தமிழக அளவில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவியர்களை கல்லூரி இயக்குநர் விக்னேஸ்வரி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், பி.எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரியானது கிராமப்புறத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கல்வி சேவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. உயர்தரமான கட்டிட அமைப்புகள், சிறந்த ஆய்வக வசதிகள், கற்றல், கற்பித்தலில், புதிய முயற்சிகளை கையாளுதல், திறமையான பேராசிரியர்கள், அவர்களின் கடின உழைப்பு பன்னாட்டு நிறுவனங்களில் மாணவ-மாணவிகளை பணியில் அமர்த்துதல், மாணவர்களின் திறன் வளர்த்தல், மதிப்பெண்களை குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கூடுதலாக பயிற்சி அளிக்கப்படுதல் போன்றவற்றால் கல்லூரி சாதனை படைத்துள்ளது என கூறினார்.

    • ஒரு ஓவரில் 7 ரன்கள் அடித்த ரிதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை சமன் செய்தார்.
    • செதிகுல்லா அடல், தனது நாட்டிற்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் காபூல் பிரீமியர் லீக் என்ற பெயரில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஷாஹின் ஹண்டர்ஸ், அபாசின் டிஃபண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற அபாசின் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஷாஹின் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்து இருந்தது. அப்போது, கேப்டன் செதிகுல்லா அடல் 77 ரன்களையும், செய்த் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 19வது ஓவரை, அபாசின் அணியின் அமிர் சாஜாய் வீசினார். முதல் பந்தை நோ பாலாக வீச செதிகுல்லா அந்த பாலில் சிக்சர் அடித்தார். இதையடுத்து வீசிய பந்து வைடுடன், பைஸ் முறையில் பவுண்டரி ஆகவும் மாறியது. தொடர்ந்து, ஃபிரீ ஹிட் பந்தில் சிக்சர் அடித்த செதிகுல்லா, அதன்பின்னர் வீசப்பட்ட அந்த ஓவருக்கான 6 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசி அரங்கை அதிரவைத்தார். என்ன நடக்கிறது என புரியாமல் பந்துவீச்சாளர் கதிகலங்கி நின்றார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்கள் கிடைத்தது.

    இதன் மூலம் ஒரு ஓவரில் 7 ரன்கள் அடித்த ரிதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை சமன் செய்தார். அதேசமயம், ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை சஜாய் படைத்தார்.

    செதிகுல்லாவின் அதிரடி ஆட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது ஷாட்களை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப்போய் உள்ளனர்.

    இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செதிகுல்லா, 56 பந்துகளில் 10 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 118 ரன்களை விளாசினார். இதனல் ஷாஹின் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்களை குவித்தது. இதையடுத்து ஆடிய அபாசின் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

    செதிகுல்லா அடல், தனது நாட்டிற்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிதான் அது. அந்த போட்டியில் 11 ரன்கள் மட்டுமே அடித்த அவர், உள்ளூர் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியதால், ஆப்கானிஸ்தான் டி20 அணியில் தனது இடத்தை நிச்சயம் உறுதி செய்வார்.

    • 5 ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி 7 வயது சிறுவன் சாதனை படைத்தார்.
    • உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காவலர் வாய்ஸ் தன்னார்வலர்கள் குழு, யூத் அச்சீவர்ஸ்கிளப் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை தாங்கினார். வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனோஜ்குமார்-ஸ்ரீஜா தம்பதியின் மகன் சம்ருத் (வயது7) ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியவாறு ஒரு மணி நேரத்தில் 5.5 கிமீ தூரத்தை ஓடி கடந்து உலக சாதனை படைத்தார்.

    மேலும் 5 வயது சிறுமி ஆராதனா கண்களை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியபடி இடுப்பில் உள்ள வளையத்தை 30 நிமிடங்கள் சுழற்றி சாதனை செய்தார். மேலும் யோகவீனா (14) கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் மற்றும் யோகா ஆகியவற்றை அற்புதமாக செய்து காண்பித்தார்.

    நிகழ்ச்சியில் யூத் அச்சீவர்ஸ்கிளப் இயக்குனர் அய்யப்பன், உலக சாதனை தீர்ப்பாளர் நோபல் உலக சாதனை சி.இ.ஓ. அரவிந்த், காவலர் வாய்ஸ் தன்னார்வர்கள் குழு ஒருங்கிணைப்பார் ஞானேஸ்வரன், செயலாளர் அழகர்சாமி, மாவட்ட நுகர்வோர் மைய பொதுச் செயலாளர் மனோகர் சாமுவேல், பயிற்சியாளர்கள் அசோக், அந்தோனிசாமி, ஆனந்த்பாபு, விக்னேஷ், ஆனந்த, காவலர் வாய்ஸ் மாவட்ட செய்தியாளர் ராதாகிருஷ்ணராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • தேசிய கபடி போட்டியில் மானாமதுரை பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    கோவாவில் பள்ளி மாணவர்களுக்கிடையிலான தேசிய கபடி போட்டி நடந்தது. யூத் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் நடந்த இப்போட்டியில் தமிழக அணியின் சார்பில் ராமநாத புரத்தை சேர்ந்த பயிற்சியாளர் புவனேஸ்வரன் தலைமையில் மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டியின் இறுதி சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இந்த அணியில் பங்கேற்ற மாணவர்கள் லோகேஸ்வரன், ஆனந்தகிருஷ்ணன் இருவருக்கும் தங்கப்பதக்கங்களும் தலா ரூ.35 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலர் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வர் அருள் ஜோசப்பின் பெட்ஷி, மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் பிருந்தா மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    • ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி திறனறிவுத் தேர்வில் சாதனை
    • சர்வதேச திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று சாதனை

     கரூர்

    பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவி திறனறிவுத் தேர்வில் சர்வதேச அளவில் 2-ஆம் இடம் பெற்று சாதனை.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆர்.என். ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி உதய நிலா சர்வதேச திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தேர்வு நான்கு சுற்றுகளை கொண்டது.மாவட்ட, மாநில, தேசிய அளவிலான முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான 4-ஆம் சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இந்தத் திறனறிவுத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான சுற்றில் 2450 மாணவர்களும், மாநில அளவில் 1700 மாணவர்களும், தேசிய அளவில் 900 மாணவர்களும், சர்வதேச அளவில் 400 மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் சர்வதேச அளவில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 9000 மாணவர்கள் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று வெற்றிபெ ற்ற ஆர்.என்.ஆக்ஸ்போர்டுபப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவிக்கு கேடயம் பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

    வெற்றி பெற்ற மாணவிக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.

    மேலும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குநர்கள் டாக்டர் அருள், இன்ஜினீயர் சேகர், சம்பூரணம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி முதல்வர், பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் பாராட்டினார்கள்.

    • சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
    • பயிற்சி அளித்த கிராண்ட் மாஸ்டர் கியோஷி நடராஜை பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    தருமபுரி,  

    கடந்த 23-ந் தேதி சேலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டிநடந்தது.இதில் அனைத்து நாடுகளிலிருந்தும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி தீபிகா, 6-ம் வகுப்பு மாணவன் நடராஜ், 11-ம் வகுப்பு மாணவன் தீபக் ஆகியோர் தனிநபர் கராத்தே பிரிவில் கலந்து கொண்டு முதலிடமும், 4-ம் வகுப்பு மாணவன் பேட்ரி மிராக்கல் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    பள்ளிக்கும், மாவட்டத் திற்கும் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செந்தில் கந்தசாமி, மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகரன், நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளி முதல்வர் வள்ளியம்மாள், துணை முதல்வர் கவிதா, பிரைமரி மேற்பார்வை யாளர் கல்பனா மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    சாதனை படைத்த மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளித்த தென்னிந்திய கராத்தே டூ அசோசியேசன் தலைவரும் பயிற்சியாளருமான கிராண்ட் மாஸ்டர் கியோஷி நடராஜை பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • ஓட்டப்பந்தய போட்டியில் சோழவந்தான் வாலிபர் சாதனை படைத்துள்ளார்.
    • இவருக்கு சொந்த கிராமத்தில் கிராம மக்கள் மற்றும் உறவினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தை சேர்ந்த கண்ணன்-கவிதா தம்பதி மகன் விக்னேஷ் (வயது22). இவர் நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் பரிசு பெற்றார். இவருக்கு சொந்த கிராமத்தில் கிராமமக்கள் மற்றும் உறவினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து விக்னேஷ் கூறுகையில், நான் விக்கிரமங்கலம் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்துள்ளேன்.ஆரம்பத்தில் இருந்து விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் எனக்கு விளையாட்டில் உயர்ந்த அளவில் பரிசு பெற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. பயிற்சி எடுக்க வசதி இல்லை ஆகையால் காலையில் மாலையிலும் கிராமத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடி பயிற்சி பெற்றேன். தஞ்சாவூர் மாவட்டத்திலும், காஷ்மீரிலும் நடந்த போட்டியில் பரிசு பெற்றேன்.என் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதால் அரசு எனக்கு உதவி செய்தால் இன்னும் திறமையாக விளையாடி அரசுக்கும் நாட்டிற்கும் நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

    ×