search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் அபார சாதனை படைத்தனர்.
    • மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 49-வது தமிழ்நாடு மாநில அளவி–லா ன ரோடு சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்க–ளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து ெகாண்டனர்.

    மாணவிகள் சாதனை

    இதில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி சி.சுவா–திகா முதலிடத்தை பிடித்து ரூ.9 ஆயிரம் ரொக்கப்பரி–சையும் வென்றார்.

    அதே பள்ளியில் படிக் கும் மாணவி மஞ்சரி இரண்டாமிடம் பிடித்து ரூ.7 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றார். மாநில அளவில் சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி–கள் சி.சுவாதிகா, மஞ்சரி ஆகியோரை பள்ளி தாளா–ளர் ஆர்.வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வர் எம்.சுந்தர–மகாலிங்கம் மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஆகி–யோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    பாராட்டு

    அதேபோல் மாணவிக–ளுக்கு உரிய பயிற்சி அளித்து ஆக்கமும், ஊக்கமும் அளித்த உடற்கல்வி ஆசிரி–யர்கள் தர்மராஜ், சக்தி–வேல் ஆகியோரும் பாராட்டி கவுரவிக்கப்பட்ட–னர்.

    • குரோசா -2023 கலைத்திறன் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

    சுரண்டை:

    தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளியில் குரோசா -2023 கலைத்திறன் போட்டி நடைபெற்றது. இதில் அழகர் பப்ளிக், பாரத் வித்யாமந்திர், கீதா மெட்ரிக், குட் ஷெப்பெர்டு, ஹோலிகிராஸ், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கலைத்திறன் போட்டியில் எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிவ டமோக்னஸ் ராஜேந்திரா குழுவினர் மேற்கத்திய நடனத்தில் முதலிடம் பெற்றனர். மேலும் இதே பள்ளியை சார்ந்த ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

    கணக்கதேஜஸ், சுபநந்தன் ஆகியோர் கணிதப்புதிர் போட்டியில் 3-வது இடம் பெற்றனர். குரோசா கலைத்திறன் போட்டியில் ஜீனியர் பிரிவில் எஸ்.ஆர். பள்ளி மாணவ, மாணவிகள் 3-வது இடம் பெற்றுச் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற அணியினரை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

    • ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர்.
    • உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி பட்டாளம் தென்காசி மாவட்ட ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர்.

    இரட்டையர்கள் சாதனை

    அதில் இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், சீவநல்லூர் சட்டநாதனின் பேரன்கள் 5 வயதுடைய இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.

    மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் மாநில அளவில் மூத்தோர் தடகளப் போட்டிகளில் 1500 மீட்டரில் தங்கம், 800 மீட்டரில் தங்கம், 400 மீட்டரில் வெள்ளி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

    கலெக்டர் பாராட்டு

    இந்நிலையில் மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த 5 வயது இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் மற்றும் தகடகங்களை போட்டியில் சாதனை படைத்துள்ள உடற்கல்வி ஆசிரியை பொன்னம்மாள் ஆகியோருக்கு தென்காசி கலெக்டர் வாழ்த்து க்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.

    மேலும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி பட்டாளம் ராணுவ வீரர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் என்.ஆர். மணி, தலைவர் ராம்குமார், செயலாளர் முருகன், துணை செயலாளர் ரஞ்சித், பொருளாளர் சங்கர், இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சிவகுமாரி, பள்ளியின் முதல்வர் செய்யது, துணை முதல்வர் கவுரி மற்றும் ராணுவவீரர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • அறிவியல் கண்காட்சியில் அந்தியூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • இதில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வாகனத்தை எப்படி பொருத்துவது என்பதை மாணவர்கள் செய்து காட்டி னார்கள்.

    அந்தியூர்,

    உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விதமான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வாகனத்தை எப்படி பொருத்துவது என்பதை மாணவர்கள் செய்து காட்டினார்கள். வெல்டிங் மற்றும் லேத் எந்திரம் பற்றிய செயல்முறை விளக்கம் மாணவர்களால் கொடுக்கப்பட்டது. சூரிய ஒளி மற்றும் காற்றாலை செயல்முறை விளக்கங்களும் மாணவர்களால் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி தலைமை தாங்கினார். தொழிற்கல்வி ஆசிரியர்கள் தேர்சாமி, பூவேந்திரன், நந்தகுமார், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர்களாக வேல் நம்பி மற்றும் சுதீஷ் செயல்பட்ட னர்.

    • மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் புன்னம் சத்திரம் அன்னை மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்
    • 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணி உறுப்பினர்கள் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

    வேலாயுதம்பாளையம்,

    தமிழ்நாடு கயிறு இழுக்கும் சங்கம் சார்பாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சி.எம்.அண்ணாமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் விளையாடி மூத்தோர் மகளிர் அணி உறுப்பினர்கள் தங்கம் வென்றனர். 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணி உறுப்பினர்கள் வெண்கலப்பதக்கம் வென்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற மாணவிகளை, ஸ்ரீஅரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மலையப்பசாமி, தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி, கல்லூரியின் முதல்வர் சாருமதி, இயக்குனர்கள், துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

    • கரூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்
    • மொத்த செயல்முறைக்கான முதலிடம் மற்றும் இரண்டாமிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையில் 30 மாணவிகள் சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2 நாள் நடைபெற்ற விழிப்புணர்வு நாள் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 180-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெவ்வேறு விதமான தலைப்புகளில் ஆய்வு செய்து கட்டுரைகளை விளக்கினர்.

    அதில் சிறந்த ஆய்விற்கான முதல் பரிசு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவிகள் பூமிகா, ரிலானா சாகின், ஆர்த்தி, சாரதி மற்றும் 2-ம் பரிசு மகேஷ்வரி, திலகவதி, பிருந்தாவனம், லோகப்பிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதில் சிறந்த ஆய்வு மற்றும் ஆய்வு கட்டுரைக்கான ஒட்டுமொத்த செயல்முறைக்கான முதலிடம் மற்றும் இரண்டாமிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது.

    இக்கருத்தரங்கில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் சாந்தி, துறைப் பேராசிரியர்கள் கவிப்பிரியா, சாலினி மற்றும் ராபிகா ஆகியோரும் கலந்து கொண்டனர். பரிசு வென்ற மாணவ, மாணவிகளை அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரூம் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான நடேசன், தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன், கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • மௌண்ட் சீயோன் கல்லூரி மாணவர்கள் திறனறிவு போட்டிகளில் சாதனை படைத்தனர்
    • வெற்றி பெற்ற இரு அணி மாணவர்களுக்கும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் சார்பாக சான்றிதழ்களும், ரூ.75,000க்கான காசோலையும் வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப க்கல்லூரியின் இசிஇ மற்றும் சிஎஸ்இ துறை மாணவர்கள் பெங்களுருவில் உள்ள பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற திறனறிவு போட்டிகளில் பங்கேற்றனர். மொத்தம் 39 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளை ஆக்ஸிஸ்கேட் மற்றும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின. இப்போட்டிகளில் எமது கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இசிஇ துறை மாணவர்கள்விக்ரம் மற்றும் விஜயன் ஆகியோர் மெக்கானிக்கல் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை தட்டிச் சென்றனர்.

    மேலும் எமது கல்லூரியின் மூன்றாம் ஆண்டு சிஎஸ்இ துறை மாணவர்கள்செந்தில்ராஜா, வாஞ்சிநாதன் மற்றும் சரவணன் ஆகியோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற இரு அணி மாணவர்களுக்கும் மிஸ்டரால் சொலுஷன்ஸ் சார்பாக சான்றிதழ்களும், ரூ.75,000க்கான காசோலையும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் பங்கு பெற்று கல்லூரிக்கு சிறப்பு சேர்த்த மாணவர்களை கல்லூரிஇயக்குனர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன், கல்லூரி டீன் ராபின்சன் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    • உலக சாதனை படைத்த சட்டக்கல்லூரி மாணவரை மற்றவர்கள் பாராட்டி வருகின்றனர்.
    • தமிழகத்தில் தட்டச்சு மூலம் ஓவியம் வரையும் முதல் நபர் என்ற பெருமையை மாதேஸ்வரன் பெற்றுள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கல்லை கிராமம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலித்தொழிலாளி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 22). இவர் சென்னை புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.ஏ. எல்.எல்.பி. இறுதி ஆண்டு படித்து வருகிறார். ேமலும் இவர் தட்டச்சில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் ஜூனியர், சீனியர் கிரேடுகள் மற்றும் உயர்வேகம் முடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு மாதேஸ்வரன் ஏ 4 காகிதத்தில் முதலில் இந்திய வரைபடத்தை வரைந்து, அதனை தட்டச்சு எந்திரத்தில் வைத்து இந்தியா என ஆங்கில எழுத்துகளில் தட்டச்சு செய்தார்.

    பின்னர் அவர் ஏ 4 தாளில் கடவுள்களின் உருவங்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களின் உருவங்களை, ஆங்கிலத்தில் அவர்களது பெயர்கள் மூலம் தட்டச்சு செய்து படமாக வரைந்துள்ளார். தட்டச்சு செய்து வரைந்த அரசியல் தலைவர்களின் உருவப்படங்களை அவர்களிடம் நேரில் காண்பித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் தட்டச்சு எந்திரத்தில் மொத்தம் 324 ஏ 4 தாள்களில் அம்பேத்கர் என்ற பெயரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து 17.8 அடி நீளம், 12.5 அடி அகலம் என்ற அளவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு உருவத்தை வரைந்து உலக சாதனை படைத்தார்.

    இந்த சாதனையை புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச சாதனை புத்தகம் என்ற நிறுவனம், சாதனை புத்தகத்தில் இடம் பெறச்செய்து மாதேஸ்வரனுக்கு தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி பாராட்டியுள்ளது. தமிழகத்தில் தட்டச்சு மூலம் ஓவியம் வரையும் முதல் நபர் என்ற பெருமையை மாதேஸ்வரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    • செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
    • ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பா. ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9-ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது-

    மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். 1947 இல் திருவாவடுதுறை ஆதீனம் அப்போதைய பிரதமர் நேருவி டம் வழங்கிய செங்கோலை நேரு கைத்தடியாக அலகாபாத் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.

    புதிய பாராளுமன்றத்தில் அதே செங்கோலைதிருவா சகம், கோளறு பதிகம் தேவாரத்தோடு பாராளு மன்றத்தில் செங்கோலை நிறுவி பாரத பிரதமர் மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.

    ஈழம் நன்றாக இருந்தபோது ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது அந்த தொடர்பு மீண்டும் வளர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் எண்ணமாக உள்ளது. நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது முக்கியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அகோரம் தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்,மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி வழக்கறிஞர் இராம. சிவசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வழக்கறிஞர் பிரிவு மாநில பார்வையாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

    தேசிய பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்க ராஜன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில் பாலு, உள்ளீட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

    • முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • மவுன்ட்சீயோன் கல்லூரியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் சிறப்பான திறன்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள கற்பக விநாயகா கலையரங்கத்தில் மாநில சட்டஅமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மவுண்ட் சீயோன் கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    மவுன்ட்சீயோன் கல்லூரியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் சிறப்பான திறன்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர். மாணவர்கள் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஒவ்வொரு விளையாட்டுகளிலும் 2-ம் பரிசைப் பெற்றனர். இறகுபந்து விளையாட்டில் மாவட்ட அளவில் முதல் மற்றும் 3-ம் பரிசுகளை தட்டிச்சென்றனர். இந்த ஆண்டு மவுண்ட்சீயோன் கல்லூரி மாணவர்கள் 7 விளையாட்டு பிரிவுகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மவுண்ட்சீயோன் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ஜெய்சன் ஜெயபாரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டினர். மாணவர்களின் விடாமுயற்சி, குழுப்பணி மற்றும் விளையாட்டில் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பாராட்டினர். மேலும் மாணவர்களின் முழுத்திறனையும் அடைய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலில் அயராது முயற்சி செய்து வரும் உடற்கல்வி இயக்குநர் டாக்டர் செல்வகண்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

    • திருப்பூர் டேக்வாண்டோ சங்கம் நடத்திய 8-வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் எம்.என்.சி. பள்ளியில் நடைபெற்றது.
    • தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் டேக்வாண்டோ சங்கம் நடத்திய 8-வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் எம்.என்.சி. பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் அங்கேரிப்பாளையம் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவர்கள் கவின், சங்கரன், ஹரிணி ஆகியோர் தங்க பதக்கம் பெற்றனர். மாணவர்கள் ஹரீஸ், சந்தோஷ், ஹரிஸ், தமீம் ஹமீது அன்சாரி ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர். மாணவர்கள் கார்த்திக்கேயன், அர்பித், பூமேஷ் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி, உப தலைவர்க்ள முருகசாமி, டிக்சன், குப்புசாமி, செயலாளர் கீதாஞ்சலி, கோவிந்தப்பன், பொருளாளர் கந்தசாமி, இணை செயலாளர் துரைசாமி, பள்ளி முதல்வர் சுமதி, துணை முதல்வர் விஜயா ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   

    • கம்பன் கழக போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி சாதனை படைத்துள்ளது
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கம்பன் பெருவிழா நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தொடர்ந்து 10-வது ஆண்டாக கம்பன் பெருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு அதிக பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் நடத்தப் பட்ட கம்பராமாயணப் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியிலும், கம்பராமாயணப் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியிலும் வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அதிக அளவிலான பரிசுகளை வென்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கம்பன் பெருவிழா நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும். கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, திட்டமாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ், பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரிரியர்கள் வாழ்த்தினர்.


    ×