என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 222245"
- விழாவில் பலூன் உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
- போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ரஜினி ரசிகர் மன்றமும், பெரியசாமி நகர் பொதுமக்களும் இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு தைத்திருநாள்விழா நடைபெற்றது. வக்கீல் மாரீஸ்வரன், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட இணை செயலாளர் தவமணி ஆகியோர் தலைமை தாங்கினார்.
ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்கொடி, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் மகேஷ்பாலா, பா.ஜனதா வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் பழனிமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பெண்க ளுக்கான கோலப்போட்டி, பெரியவர் சிறியவர் மியூசிக்கல் சேர், பெரியவர் சிறியவர் பலூன் உடைத்தல், சிறுவர்க ளுக்கான ஓட்டப்பந்தயம், சிறுவ ருக்கான ஸ்லோ சைக்கிள் ரேஸ், சிறுவருக்கான சாக்கு போட்டி, தண்ணீர் நிரப்புதல். சிறுவர், சிறுமிகளுக்கான நடனப்போட்டி, பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் சிறுவர், சிறுமிகளுக்கான பரிசுப் பொருட்களை கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை முன்னாள் வியாபாரிகள் சங்கத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான முத்துராஜன், ரஜினி ரசிகர் மன்றமாவட்ட துணை செயலாளர் பெரியசாமி, நாதன், விஜய் ஆனந்த், வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், ஐக்கிய அரபு அமீரக பொருளாளர் பொன்முருகன்லட்சுமண ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.
தொழிலதிபர் அண்ணாதுரை, ஆசிரியர் வரப்பிரசாதம் கண்ணன், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், ஜோதி காமாட்சி, சையத் அலி, காளி ராஜன், சந்தன மாரியப்பன், முருகன், சதீஷ், ராஜீவ் காந்தி, மலர் மாடசாமி, கணேசன், சேக் முகமது உள்ளிட்ட ஏராளமான ரஜினி ரசிகர்கள் பெரியசாமி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- புற்றுக்கோவிலில் தைப் பொங்கல் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
- பூஜையில் அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் தைப் பொங்கல் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
- கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்தனர்.
- தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரசார கூட்டம்கடலையூர் சாலையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் 22வது வார்டு செயலாளர் அந்தோணி பிரகாஷ் வரவேற்று பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரசார கூட்டம் 22-வது வார்டு கடலையூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான, கருணாநிதி தலைமை தாங்கினார். 21வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உலக ராணி, 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி, 23வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுதா குமாரி, 23வது வார்டு செயலாளர் குமாரசாமி, 24வது வார்டு செயலாளர் அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சாரக் கூட்டத்தில் 22வது வார்டு செயலாளர் அந்தோணி பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார். மாநில கழக கொள்கை பரப்புச் செயலாளர் கரூர். முரளி, தலைமை கழக பேச்சாளர் ஆனந்த், ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இரா. மணி, நகர அவைத் தலைவர் முனியசாமி, நகர பொருளாளர் ராமமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல், விஜயன், நகர கழக வார்டு செயலாளர்கள் பூல் பாண்டியன், செந்தில்நாதன், தாமோதரன் 22வது வார்டு துணைச் செயலாளர் ராமர், வார்டு பிரதி நிதிகள் கிருபாகரன், சுமதி, வார்டு அவைத் தலைவர் மிக்கேல், வார்டு பொருளாளர் நாகராஜ், நகர இலக்கிய அணி நிர்வாகிகள் வசந்த், ராஜன், ராஜகோபால், உள்ளிட்ட ஏராளமானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
- நிகழ்ச்சியில் கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடைப்பெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைப்பெற்றது. தொடர்ந்து சிவன் சன்னதியில் நடராஜர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோமாதாவிற்கு சிறப்பு பூஜை தீபாராதனை ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். முடிவில் பக்தர்களுக்கு களி பிரசாதமாக வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி பயணிர் விடுதி முன்பு தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணி தி லிட்டரரி அசோசியேஷன் கிளப் முன்பு நிறைவடைந்தது.
- மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் சென்றவாறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
கோவில்பட்டி:
தி லிட்டரரி அசோசி யேசன் மற்றும் ராஜ் யோகா ஸ்கேட்டிங், ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் இணைந்து புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு ஸ்கேட் டிங் பேரணியை நடத்தினர்.
கோவில்பட்டி பயணிர் விடுதி முன்பு தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணி மாதா கோவில் ரோடு வழியாக சென்று புது ரோட்டில் அமைந்துள்ள தி லிட்டரரி அசோசியேஷன் கிளப் முன்பு நிறைவடைந்தது. சாலை விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் .
பேரணிக்கு துரைச்சாமி நாடார், மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளரும் தொழிலதிபருமான எஸ்.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார். எவ ரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஏ.மகாலெட்சுமி , சிறப்பு மகப்பேறு நிபுணரும் அனுபாலா இருதயம் மற்றும் மகப்பேறு மருத்துவ மைய மருத்துவருமான எம்.தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் சொக்கலி ங்கம், போக்கு வரத்து காவலர் இளையராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்கேட்டிங்கில் மாணவ, மாணவிகள் சென்று சாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் ராஜயோக ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் மாநில ஆலோசகர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல், தொழிலதிபர் சடகோபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். யோகா ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை தி லிட்ட ரரி அசோசி யேசன்ஸ் ஸ்போர்ட்ஸ் செயலாளர் வி.ஆர். ராஜ மாணிக்கம், ராஜ் யோகா ஸ்கேட்டிங், ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
- சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யார் செய்தார்.
இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
- நேற்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பிரதான சாலை மார்க்கெட் அருகே கழிவு நீர்நீர்வரத்து ஓடையின் மேல்புறம் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதனை அகற்ற வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஓடை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.இதற்கிடையே பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வணிக வைசிய சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது பாலத்தை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலை கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் தாசில்தார் சுசிலா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், சிவசுப்பு, இன்ஸ்பெக்டர்கள் சுகாதேவி, பத்மாவதி உட்பட போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.
இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல பாலம் இல்லாததால் கழிவு நீர் ஓடையில் இறங்கி சுவாமி, அம்பாளை வழிபட்டனர். இதில் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- கோவில்பட்டியில் ஸ்ரீ ஹரிஹர புத்ர அய்யப்பா சேவா சங்கம் சார்பில் 17-ம் ஆண்டு கூட்டு கன்னி பூஜை நடைபெற்றது.
- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ஸ்ரீ ஹரிஹர புத்ர அய்யப்பா சேவா சங்கம் சார்பில் 17-ம் ஆண்டு கூட்டு கன்னி பூஜை, மண்டல பூஜை, மகா அன்னதான விழா செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்யா, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வக்குமார், மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலெட்சுமி, செயற்குழு உறுப்பினர் ஹேமலா, ஆவின் தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கோபி, குமார், மற்றும் அ.தி.மு.க.வினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. சார்பில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், விநாயகா ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி:
பெரியார் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், நெசவாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, மாணவரணி துணை அமைப்பாளர்கள் கணேசன், செல்வ மணிகண்டன், தாமோதரக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், நிர்வாகிகள் முத்துசெல்வம், கணேசன், நகர செயலாளர் பால்ராஜ், இளைஞர் அணி செயலாளர் முத்து கிருஷ்ணன், முத்துப்பாண்டி, நாகராஜ், செண்பகராஜ், கோடையிடி ராமச்சந்திரன், சிவராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான ம.தி.மு.கவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
- மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
- அனுமனுக்கு வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர், அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், மா பொடி திரவியம், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஆஞ்ச நேயர்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பி ரமணியன் மாரிஸ்வரன் பூஜைகளை செய்தனர். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா மற்றும் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா சிறப்புப் பூஜையில் கணபதி பூஜை, கும்ப கலச பூஜை தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து அனுமனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
- ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார்.
- ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ, விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுடன் ம.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். பின்னர் ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ, விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளின் அட்ட காசம் அதிகமாக உள்ளது.காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியிடம் பேசினேன். தி.மு.க. அரசு, வனத்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைத்துள்ளனர். இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள மாநிலத்திலும் காட்டுப்பன்றி களின் தொல்லை அதிகம் உள்ளது.
1972-ம் ஆண்டு வனவிலங்கு சட்டப்படி 6 அட்டவணை உள்ளது. இதில் காட்டுப்பன்றி 3-வது அட்டவணையில் உள்ளது. 5-வது அட்டவணையில் உள்ள விலங்குகளை யார் வேண்டுமானாலும் அழிக்கலாம். ஏனென்றால், அது மனிதர்களுக்கு, விவசாயத்திற்கு தொல்லை கொடுக்கக் கூடியது. எனவே, அந்த 5-வது அட்டவணையில் காட்டுப்பன்றிகளை சேர்க்க வேண்டும்.
காட்டுப்பன்றியை 5-வது அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என கேரள மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இது சாத்தியப்படாது என மத்திய அரசு பதில் கூறியுள்ளது. இதே மத்திய அரசு, உத்தரப்பிரகேசம், பீகார் மாநிலங்களில் காட்டுப்பன்றி களை அட்டவணை 5-க்கு மாற்றி, ஓராண்டு நடைமுறைப்படுத்தியது. அந்த ஓராண்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.
கேரளாவில் ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை கொடுத்து, கிராமக்குழுக்களை கொண்டு காட்டுப்பன்றி களை வேட்டையாடலாம் என சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுபோன்று தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தலைமையில் மனு அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், ம.தி.மு.க. ஒன்றிய செயலர்கள் கேசவ நாராயணன், சரவணன், மாரிச்சாமி, நகர செயலர் பால்ராஜ், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவி விஜயலட்சுமி, நிர்வாகிகள் சிவகுமார், கோடையிடி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், முத்துச்செல்வம், வன ராஜன், முத்துபாண்டியன், நாகராஜன், லியோ செண்பக ராஜ், கணேசன், பவுன்மாரியப்பன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்