search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222245"

    • போலீசாரை கண்டதும் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
    • விசாரணையில் தப்பி ஓடியவர்கள் மகேஷ்குமார்,ராமகிருஷ்ணன் என்பதும் தெரிய தெரியவந்தது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் கோவில்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் போலீசார் அவர்களில் 3 பேரை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரை சேர்ந்த பொன்பிரகாஷ் (வயது 26), செக்கடி 3-வது தெருவை சேர்ந்த ராகேஷ் சர்மா (26), ராஜூ நகர் இ.பி. காலனியை சேர்ந்த விஷ்ணு (22) என்பது தெரியவந்தது.

    மேலும் தப்பி ஓடியவர்கள் பசும்பொன் நகரை சேர்ந்த மகேஷ்குமார் ( 27), ஸ்ரீராம் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் ( 27) என்பதும் தெரிய தெரியவந்தது. மேலும் அவர்கள் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலோசனை கூட்டத்திற்கு சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார்.
    • கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க 2022 -25-ம் ஆண்டுக்காண நிர்வாக குழுவினை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பசுவந்தனை சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

    கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். உற வின்முறை சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான ஆர்.எஸ். ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரைட் வே குளோபல் மார்க்கெட்டிங் சண்முகராஜா வரவேற்று பேசினார்.

    சட்ட நகல் எரிப்பு போராட்ட வீரர் நாஞ்சில் குமார் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் எம்.எஸ்.எம்.ஆர். ராஜசேகர், ராஜன் மேட்ச் வொர்க்ஸ் ராஜவேல், மகாலட்சுமி மேட்ச் ஒர்க்ஸ் ஜெயபிரகாஷ், காமாட்சி மேட்ச் ஒர்க் சுரேஷ், ஸ்ரீ கண்ணன் லாரி சர்வீஸ் ரத்னாகரன், அரசன் அண்ட் கோ நெல்லையப்பன், ஆரா செல்டர்ஸ் ஜேசுமணி, ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல் குறித்தான சட்ட ஆலோசனைகளை வக்கீல் செல்வம் மற்றும் ரத்தினராஜா, ஆகியோர் வழங்கினர்.

    கூட்டத்தில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வத்திற்கு ஆதரவு கேட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.

    • கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் தத்துவம் போன்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசி வரு கிறார். அண்ணமாலை அரசியலுக்கு வந்து ஒராண்டு தான் ஆகிறது. நான் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என சுய புராணம் பாடி வருகிறார்.

    நான் அரசியலுக்கு வந்து 26 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்றும் ஒரே கொள்கை பிடிப்போடு இருக்கிறேன்.எதிலும் தி.மு.க.வினர் துணிந்து நிற்போம். அண்ணா மலையின் பேச்சைக்கேட்டு யாரும் ஏமாற மாட்டார்கள். இது பெரியார், அண்ணா, கருணாநிதியை பெற்ற மண். சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதன் கொள்கைகளை மைக் பிடித்து பேசுகிறார்கள். சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை திராவிட இயக்கம் தான் மாற்றியது. பெண்களுக்கு கல்வி கிடையாது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கல்வி கிடையாது. கோவி லுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையை மாற்றி அமைத்தது நீதிகட்சியும், தி.மு.க.வும் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

    சாதி, மத பிரச்சினையை உருவாக்கி தமிழகத்தில் பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். நிச்சயமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளையும் படிப்ப டியாக நிறைவேற்றி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ரசிகர்கள் கல்வித் திருவிழாவாக கொண்டாடினர்.
    • மாணவ, மாணவிகளுக்கு ரஜினி ரசிகர்கள் கல்வி உபகரணங்களை வழங்கினர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ரசிகர்கள் கல்வித் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வேலாயுதபுரம் அன்னை பத்திரகாளி அம்மன், காளியம்மன், கோவில் முன்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற ஜோதி காமாட்சி வரவேற்றார். விழாவிற்கு நகர ரசிகர் மன்ற நிர்வாகியும் தொழிலதிபருமான சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    நகர இணைச் செயலாளர் சந்திரசேகரன் ஒன்றிய ரசிகர் மன்ற பாண்டியராஜ், வேலாயுதபுரம் முருகன், புதுக்கிராமம் மகேஷ் பாலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் தவமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவில்பட்டி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்ற ஜெயக்கொடி, ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர் பொன்முருகன் ஆகியோர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற இந்து ராஜ், கனிராஜன், சண்முகராஜ், ஆறுமுகசாமி, மேரி, நிர்வாகிகள் முருகன், மகாலிங்கம், பாலமுருகன், ஆறுமுகசாமி, கனகவேல், ஜெயராம், குமார், பாண்டியராஜன், அண்ணாமலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருவிழாவையொட்டி, சப்த நதி தீர்த்தம் அம்மன் சன்னதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது
    • விழாவின்போது தெப்பக்குளத்தை சுற்றி 3333 அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

    கோவில்பட்டி:

    இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோவில் அகத்திய மாமுனிவரால் தோற்றுவிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு மஹா கங்கா ஆரத்தி திருவிழாவையொட்டி, 7 குடங்களில் சப்த நதி தீர்த்தம் அம்மன் சன்னதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதையடுத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தெப்பக்குளம் அருகேயுள்ள ஆதி குறைதீர்க்கும் விநாயகர் கோவிலில் மகா கணபதி பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புன்னியாகவாசனம் நடைபெற்றது. தொடர்ந்து சப்த நதி நீரை கும்பத்தில் வைத்து கும்ப பூஜை நடைபெற்றது. பின்னர் கும்பத்தை கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் தெப்பத்தில் தீர்த்த அபிஷேகம் மற்றும் புஷ்பம் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மஹா கங்கா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, தெப்பக்குளத்தை சுற்றி 3333 அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

    ஏற்பாடுகளை இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச்செயலர் பரமசிவம், மாவட்ட செயலர் அய்யம்பெருமாள் ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை நடத்தியது.
    • ஓவியர்களுக்கு சான்றிதழ்களை மாநிலத் தலைவர் அடைக்கலம் வழங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் மற்றும் நிப்பான் பெயிண்ட்ஸ் இணைந்து தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை நடத்தியது. விழாவில் "முன் கற்றலை அங்கீகரிக்கும் " தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு என்.சி.வி.இ.டி.யால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மத்திய அரசின் 10 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சியும், மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை, மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள தேவர் மகாஜன சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சம்சுகனி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் தங்கமாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர் மற்றும் ஓவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் அட்டையை மாநிலத் தலைவர் அடைக்கலம் உறுப்பினர்களுக்கு வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் கயத்தாறு ஒன்றியத் தலைவர் ஜெயபால், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நகர தலைவர் அருண் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கோவில்பட்டியில் பிரச்சாரகூட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறை வேற்றபட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோ சனை கூட்டம் நகர தலைவர் அருண் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட துணை தலைவர்கள் திருப்பதிராஜா, முத்து, மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரை 100-வது நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் சிறப்பாக பிரச்சாரகூட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறை வேற்றபட்டது.

    இதில் மாவட்ட பொது செயலாளர்கள் ஐ.என்.டி.யூ.சி. ராஜாசேகரன், சிவப்பிரகாசம், மாவட்ட மனித உரிமை துறை மாவட்ட தலைவர் காளிதாஸ், மாவட்ட செயலாளர் ஜோஷ்வா, மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரபு, கோவில்பட்டி இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சுடலைமணி, கோவில்பட்டி கிழக்கு வட்டார தலைவர் மாரியசூசைராஜ், நகர துணை தலைவர் முருகன் கிறிஸ்து ராஜா, நகர பொது செயலாளர்கோபால், நகர செயலாளர் சசி, கோவில்பட்டி தொகுதி மாணவர் காங்கிரஸ் டேனியல், பாலமுருகன், செந்தில் குமார், அருணாச்சலம், மகேந்திரன், அய்யாதுரை, முருகன், ஜான்சன், பரமேஷ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காமராஜர் அரங்கில் ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய துணை செயலர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய், ஒன்றிய பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய செயலர் பீக்கிலிபட்டி முருகேசன் வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    தி.மு.க. சமூகத்துக்கான அடிப்படை கருத்துக்களை தாங்கி நிற்கக் கூடிய இயக்கமாகவும் அந்த இயக்கத்தின் கருத்துக்களை மேம்படுத்தக் கூடிய கட்சியாக இயங்கி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் இந்த சமூகத்தில் சமமான ஓர் இடம் உண்டு. அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு சமமாக கிடைக்க வேண்டும். இதற்கு எதிரே இருக்கக் கூடிய அனைத்தையும் கேள்வி கேட்பது தான் தி.மு.க. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய உலகத்தை, நாட்டை உருவாக்க வேண்டும். இது தி.மு.க.கொள்கை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை.

    இதற்கு நேர் எதிராக இருக்கக் கூடிய கொள்கை பா.ஜ.க.வின் கொள்கை. திராவிட இயக்கத்திற்கு எதிர் கருத்துக்களை கொண்டுள்ளது தான் பா.ஜ.க. திராவிட இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறோம் என சொல்லக்கூடிய அ.தி.மு.க., சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் உள்ள ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என கூறுகிறது.

    இப்படிப்பட்ட மோசமான நிலையில் அ.தி.மு.க. தன்னை வைத்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.தமிழகத்தில் காலூன்ற முடியாது. தமிழகத்தில் உள்ள மக்கள் மத நம்பிக்கை உள்ள வர்களாக இருப்பார்கள். எது நம்முடைய முன்னேற்றத்திற்கு பயன்படும், எது எதிராக கொண்டு போய் சேர்க்கும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ளவர்கள். அதனால் பா.ஜ.க. கூறுவதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.

    தி.மு.க. ஆட்சி அமைந்த பின், பெண்கள், விவசாயிகள், பள்ளி மாணவர்களுக்கு புதுமை திட்டம், மகளிருக்கு நகர பேருந்தில் இலவச பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    இந்த திட்டங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களை வருகின்ற மக்களவை தேர்தலில் வாக்குகளாக மாற்ற வேண்டும். கடந்த முறை ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை முழுமையாக வெற்றி பெற வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் சந்திரசேகர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கட்சியின் மாவட்ட துணை செயலர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் ராமர், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் சண்முகராஜ் (விவசாய தொழிலாளரணி), ரமேஷ் (பொறியாளரணி), சந்தானம் (விவசாய அணி), மத்திய ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் பிரேமா துரைமுருகன், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
    • வங்கியின் பணிகள் குறித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    கோவில்பட்டி:

    வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை அமைப்ப தற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, இந்தியன் வங்கி பொதுமேலாளர் கணேஷ்ராம், மண்டல அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் வங்கியின் பணிகள் குறித்து எம்.எல்.ஏ., கேட்டறிந்தார். இந்த வங்கி சிறப்பாக செயல்பட வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஒத்துழைப்பார்கள் என எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் அழகர்சாமி, பழனிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறினார்.
    • கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீப்பெட்டி தொழில்

    டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தீப்பெட்டி தொழிலுக்கு பாதகமான லைட்டர்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும். கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

    அதன்படி தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் வில்லிசேரி கிராமத்தில் இந்த மாதத்துக்குள் வங்கி கிளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வங்கி திறப்பு விழாவுக்கு நிர்மலா சீதாராமன் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. பொதுக்குழு ஏற்கனவே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. இதில் 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அதன் பின்னர் அவர் கூறும் கருத்துகள் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது.

    கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தி.மு.க.வினர் யாரும் வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக முதல்வரின் தொகுதியில் நடந்துள்ளது. கால்பந்து வீராங்கனை மரணத்தில் தவறு நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே தமிழகத்தில் சிகிச்சை தேவைப்படும் நிலையில் சுகாதாரத்துறை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் நடைபெறுகிறது.
    • 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

    இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும். மேலும் அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டு புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க மும்முரமாக களப்பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
    • 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனையடுத்து வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகிகளும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், அ.தி.மு.க. அவைத் தலைவர் பெருமாள், மாவட்ட துணைச் செயலர் முருகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலர் விஜயபாண்டியன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராமர், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அ.தி.மு.க. நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் தாமோதரன், ஆபிரகாம் அய்யாதுரை, மாதவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலர் சிவபெருமாள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×