search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 830-ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.61 ஆயிரத்து 300-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 830-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.61 ஆயிரத்து 300-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30-க்கு விற்கிறது.

    • கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் முழுவதும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் பல இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவா் மற்றும் இறக்குமதியாளர்களை கண்டறிதல், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக 27 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 7 இடங்களில் முரண்பாடுகள் கண்டறிப்பட்டு உரிமை யாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 'பதிவுச் சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர்கள் உரிய பதிவுச் சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிக்கைகள் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 704-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 838 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.62 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.40-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று 4-வது நாளாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 704-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 838 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.62 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.40-க்கு விற்கிறது.

    • பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், தண்ணீர் சுற்றுகள் குறைவு.
    • நூற்பாலை நிறுவனங்களின் தேவைக்கும், பருத்தி உற்பத்திக்கும் பெரிய இடைவெளி உள்ளது.

    குடிமங்கலம் :

    உடுமலை சுற்றுப்பகுதியில் பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், தண்ணீர் சுற்றுகள் குறைவு, தொழிலாளர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், நிலையில்லாத விலை உள்ளிட்ட காரணங்களால் பருத்தி சாகுபடி பரப்பை விவசாயிகள் கைவிட துவங்கினர்.இதனால் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி பரப்பு சில ஏக்கராக சரிந்தது.

    கடந்த 2008ல் மிக நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு நல்ல விலை கிடைத்ததால் குடிமங்கலம் வட்டாரத்தில், 100 ஏக்கருக்கும் குறைவாக பருத்தி சாகுபடியானது.இதே போல் 2012-13ம் ஆண்டில் பருவமழை மற்றும் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் போது 200 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்தனர். அப்போது மத்திய அரசின் சிறப்பு மானியத்திட்டமும் செயல்படுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பருத்திக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

    நாமக்கல், கொங்கணாபுரம் உள்ளிட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் ஏலத்தில், பருத்தி அதிக விலைக்கு விற்பனையானது.குறிப்பாக மிக நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு, அதிகப்பட்சமாக குவிண்டால் 10,399 ரூபாய், நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு அதிகப்பட்சமாக குவிண்டால் 12,900 ரூபாய் வரையும் விலை கிடைத்தது.இதனால் நடப்பு சீசனில் பருத்தி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    நூற்பாலை நிறுவனங்களின் தேவைக்கும், பருத்தி உற்பத்திக்கும் பெரிய இடைவெளி உள்ளது. இதனால் இச்சாகுபடி பரப்பை அதிகரிக்க முன்பு மத்திய அரசு சார்பில் மானியத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அத்தகைய சிறப்புத்திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். விதை, இடுபொருட்களை மானியத்தில் வழங்குவதுடன், உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறை வாயிலாக வழங்க வேண்டும்.மேலும் அருகிலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் மத்திய பருத்திக்கழகம் வாயிலாக நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்.

    இதனால், நூற்பாலை நிர்வாகத்தினர், விவசாயிகள் என இருதரப்பினரும் பயன்பெறுவார்கள்.விவசாயிகள் கூறுகையில், பருவமழை சீராக பெய்ததால் நடப்பு சீசனில், பருத்தி சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தொழிலாளர் பற்றாக்குறையே இச்சாகுபடியில் முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணியாளர்களை சாகுபடி பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசு உத்தரவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • ரூ. 4.20ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.20ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனை யாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.00 கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்)வருமாறு:-

    சென்னை 445, பர்வாலா 415, பெங்க ளூர் 425, டெல்லி 429, ஹைதராபாத் 395, மும்பை 440, மைசூர் 423, விஜயவாடா 432, ஹெஸ்பேட் 380, கொல்கத்தா 495. பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.94 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 100 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • சேலம் மார்க்கெட்டுகளில் ஆரஞ்சு பழங்கள் விலை 240 ரூபாக உயர்ந்துள்ளது.
    • இந்த ஆரஞ்சு பழங்கள் கடந்த மாதம் 150 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த பழங்களை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக ஆரஞ்சு பழங்களின் விலை சமீப காலமாக அதிக அளவில் உயர்ந்து ள்ளது. நாட்டு ஆரஞ்சு பழங்களின் சீசன் முடிந்துள்ள நிலையில் அதன் வரத்து இல்லாததால் அனைத்து கடைகளிலும் கமலா ஆரஞ்சு பழங்கள் தான் விற்பனைக்கு வைக்க ப்பட்டுள்ளன.

    இந்த ஆரஞ்சு பழங்கள் கடந்த மாதம் 150 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ 240 ரூபாய்க்கு விற்கப்ப டுகிறது. இதனால் பொது மக்கள் விலையை கேட்டு விட்டு அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாத வர்களுக்கு கூட ஆரஞ்சு பழங்கள் வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆப்பிள் ஒரு கிலோ ரூ.200, மாதுளை 120, திராட்சை நீலம் 100, பச்சை 120, சப்போட்டா 30, பேரிக்காய் 120, கொய்யா 40, பப்பாளி 30 ரூபாய்க்கும் விற்பனை யாகிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 312-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 914 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ. 64 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 312-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 914 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ. 64 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,120-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராம் ரூ. 64.20-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64.200-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று கிராம் ரூ.4,885-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,890 ஆக உயர்ந்து உள்ளது. பவுன் ரூ.39,080-ல் இருந்து ரூ.39,120 ஆக அதிகரித்து உள்ளது.

    தங்கம் ஒரே நாளில் கிராம் 5 ரூபாயும். பவுன் 40 ரூபாயும் உயர்ந்து உள்ளது.

    வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராம் ரூ. 64.20-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64.200-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

    • ஏற்கனவே ரூ. 4 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனை யாளர்க ளுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 3.90 கிடைக்கும். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-

    சென்னை 425, பர்வாலா 400, பெங்களூர் 405, டெல்லி 422, ஹைதராபாத் 385, மும்பை 435, மைசூர் 415, விஜயவாடா 402, ஹெஸ்பேட் 370, கொல்கத்தா 475.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.94 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணை யாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39 ஆயிரத்து 144-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 893 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 200-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39 ஆயிரத்து 144-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 893 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது.

    • தமிழகத்தில் ஊட்டி, மேட்டுப்பாளையம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கேரட் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
    • இதன் காரணமாக சேலம் மாவட்டத்துக்கு கேரட், பீன்ஸ் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் ஊட்டி, மேட்டுப்பாளையம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கேரட் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கேரட் தமிழகத்தில் சேலம் மாவட்டம் உள்பட பல பகுதிகளுக்கும், இதை தவிர வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதேபோல் ஓசூர், பெங்களூரு பகுதிகளில் பீன்ஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சேலம் மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பீன்ஸ் லோடு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் பெங்களூரு, ஓசூரில் பெய்து வரும் தொடர் மழையால் பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சேலம் மாவட்டத்துக்கு கேரட், பீன்ஸ் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ரூ. 60க்கு விற்ற பீன்ஸ் தற்போது ரூ.78 முதல் ரூ.80 என்றும், ரூ.60க்கு விற்ற கேரட் ரூ.85 முதல் ரூ.90 வரை என விலை உயர்ந்துள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 38,800-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.63-க்கு விற்றது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,000-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,760-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் ரூ.4,845-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,850-க்கு விற்கப்படுகிறது.

    வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.63-க்கு விற்றது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,000-க்கு விற்கப்படுகிறது.

    ×