search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்கிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது.

    இதன் காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 505-க்கு விற்றது.

    இதற்கிடையே நேற்று தங்கம் விலை குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43 ஆயிரத்து 520-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்தது. இதனால் தங்கம் பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5 ஆயிரத்துக்கு 335 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்கிறது.

    தங்கம் பவுன் 2 நாட்களில் ரூ.1,360 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்ததால் வரும் நாட்களில் மேலும் விலை உயரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து விலை குறைந்துள்ளது ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆறுத லாக அமைந்துள்ளது.

    • சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.
    • சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதைத்தவிர தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    சேலம் பூ சந்தையில் இருந்து தினமும் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிைலயில் தை மாதத்தில் திருவிழாக்கள், பல்வேறு சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற 5-ந்தேதி தைப்பூசம் பண்டிகை தினமாகும். இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    இதனிடையே இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பூக்கள் விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது.

    இன்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.320-க்கும், கலர் காக்காட்டான் ரூ.320, மலை காக்கட்டான் - ரூ.240, சாதா சம்பங்கி ரூ.80, உயர் ரக சம்பங்கி ரூ.50, அரளி -ரூ.70, வெள்ளை அரளி ரூ.70, மஞ்சள் அரளி- ரூ.70, செவ்வரளி ரூ.140, ஐ.செவ்வரளி-ரூ.100, நந்தியாவட்டம் ரூ.150, சி.நந்தியாவட்டம் ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    • தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளது.
    • இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய்

    இடையாறு, குப்பிச்சிபாளை யம், மோகனுார், பரமத்தி வேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், சிறு

    நல்லி கோவில், அய்யம்பா

    ளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், இருக்கூர், ஜமீன் இளம்பள்ளி, சோழசி ராமணி உள்ளிட்ட பல்வேறு

    பகுதிகளில் பூவன், கற்பூர வள்ளி, பச்சநாடன், ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை

    யான வாழை, ஆயிரக்க ணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்படும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வாங்கப்படும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம்,

    கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் அதிக பட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும் , மொந்தன் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது. தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்கப்பட்டது.
    • இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,800-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒருவார காலமாக ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,704-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.42,880-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,338-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.5,360-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்கப்பட்டது.

    இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,800-க்கு விற்பனையாகிறது.

    • கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்தது.
    • தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட பண்ணைகளில் 5.50 கோடி, முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்கான விற்பனை விலையை, இந்தியா முழுவதும் உள்ள விலையை அனுசரித்து, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.

    கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக உள்ளது. ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.05 சரிவடைந்ததால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்புக்குழு துணைத்தலைவரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தலைவருமான சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கோழி முட்டை விலை இந்தியா முழுவதும் சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஐதராபாத் மண்டல என்.இ.சி.சி, இனி முட்டை விலை குறைக்கப்படமாட்டாது, குறைந்த விலை ஒரு முட்டைக்கு 415 பைசாதான் என அறிவித்துள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று 3 பைசா உயர்த்தி 418 என ஐதராபாத் என்.இ.சி.சி அறிவித்துள்ளது.

    பர்வாலா மண்டலத்தில் முட்டை மார்க்கெட் நிலவரம் சரியாகி வருகிறது. மேலும் ஹொஸ்பேட் மண்டலத்திலும், முட்டை விலை இதற்கு கீழ் குறையாது என அறிவிப்பு செய்துள்ளது. மண்டலங்களின் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு, நாமக்கல் விலையும் இதற்கு கீழ் குறையாது.

    எனவே பண்ணையாளர்கள் முட்டைகளை விற்கும் பொழுது, முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு, என்.இ.சி.சி விலையில் இருந்து 30 பைசாவுக்கு கீழ் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு பண்ணையாளர்கள் யாரும் முட்டைகளை, குறைவான விலைக்கு விற்பனை செய்யாமல், அறிவிக்கப்பட்ட 30 பைசா மட்டுமே குறைத்து விற்பனை செய்ய வேண்டும்.

    வரும் நாட்களில் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது. எனவே பண்ணையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

    • முட்டை கொள்முதல் விலை அண்டை மாநிலங்களில் உள்ள விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மைனஸ் விலையை, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு தினசரி அறிவிக்கிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தில், நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1,000 முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5.50 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டை, தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், லாரிகள் மூலம், தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 நாட்கள் முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. என்.இ.சி.சி நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.

    இந்த முட்டை கொள்முதல் விலை அண்டை மாநிலங்களில் உள்ள விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மைனஸ் விலையை, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு (நெஸ்பேக்) தினசரி அறிவிக்கிறது.

    நாமக்கல் மண்டலத்தில், கடந்த 2022 டிசம்பர் 24-ந்தேதி, ரூ.5.50 இருந்த முட்டை கொள்முதல் விலை, கடந்த ஜனவரி 9-ந் தேதி ரூ.5.65 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த உயர்ந்தபட்ச விலை, 20 நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த 21-ந்தேதி 20 காசு, 25-ந்தேதி 30 காசு, 27-ந்தேதி 25 காசு என 6 நாட்களில் ஒரு முட்டைக்கு என்.இ.சி.சி விலை 75 காசு சரிந்தது.

    இந்தநிலையில், இன்று நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மேலும் 30 காசு குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.05 சரிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் நெஸ்பேக் அமைப்பு ஒரு முட்டைக்கு 30 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.30 மட்டுமே கிடைக்கும். ஒரு வாரத்தில், முட்டை கொள்முதல் விலை ரூ.1.05 சரிவடைந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைத் தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் கடும் கவலையில் உள்ளனர்.

    • தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • தங்கம் விலை கடந்த நவம்பர் மாதம் 3-ந்தேதி பவுன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. 2 மாதங்களில் பவுனுக்கு ரூ.5320 அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை 1 பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு உள்ளேயே இருந்தது.

    கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38160-க்கு விற்கப்பட்டது.

    அடுத்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. நவம்பர் 11-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.39240 ஆக உயர்ந்தது.

    டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. டிசம்பர் 2-ந்தேதி தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் ரூ.40,160-க்கு விற்பனையானது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கம் டிசம்பர் மாதம் 31-ந்தேதி பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.41,040 ஆக விற்கப்பட்டது.

    அதன்பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 9-ந்தேதி பவுன் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.42,080-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை கடந்த நவம்பர் மாதம் 3-ந்தேதி பவுன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. 2 மாதங்களில் பவுனுக்கு ரூ.5320 அதிகரித்துள்ளது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5345-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.5380-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.75-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 345 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 840-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42 ஆயிரத்து 760-க்கு விற்றது.

    ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 345 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.74 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.74 ஆக உள்ளது.

    • வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது.
    • ஒரு கிராம் ரூ.74.50-ல் இருந்து ரூ.74.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.74,500-ல் இருந்து ரூ.74,300 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. நேற்று பவுன் ரூ.42,600-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.42,560 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,325-ல் இருந்து ரூ.5,320 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. ஒரு கிராம் ரூ.74.50-ல் இருந்து ரூ.74.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.74,500-ல் இருந்து ரூ.74,300 ஆகவும் குறைந்து உள்ளது.

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது.
    • பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, பூக்கள் விலை குறைந்து வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை இரு நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து தேவை குறைந்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்து வருகிறது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய (20. 1.23) பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) : மல்லிகை - ரூ.1600, முல்லை - ரூ.1600, ஜாதி மல்லி - ரூ.1200, காக்கட்டான் - ரூ.600, கலர் காக்கட்டான் - ரூ.600, மலை காக்கட்டான் - ரூ.500, சி.நந்தியா வட்டம் - ரூ.90, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.200, வெள்ளை அரளி - ரூ.200, மஞ்சள் அரளி - ரூ.200, செவ்வரளி - ரூ.220, ஐ.செவ்வரளி - ரூ.220, நந்தியா வட்டம் - ரூ.90, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் , பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது .

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. அப்போது கறிக்கோழியின் உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .அதன்படி கறிக்கோழி விலை இன்று 91 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ. 760 அதிகரித்து இருக்கிறது.
    • 11-ந்தேதி பவுன் ரூ. 41,840-ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து வருகிறது.

    சென்ற மாதம் தொடக்கத்தில் பவுன் ரூ.39 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் பவுன் 42 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.

    நேற்று பவுன் ரூ.42,320 ஆக இருந்தது. இன்று இது ரூ.42,600 ஆக உயர்ந்தது. இன்று பவுன் ரூ.280 அதிகரித்து இருக்கிறது. கிராம் நேற்று ரூ.5,290-க்கு விற்பனை ஆனது. இன்று இது உயர்ந்து ரூ.5,325 க்கு விற்பனை ஆகிறது. இன்று கிராம் ஒரே நாளில் ரூ.35 உயர்ந்து இருக்கிறது.

    கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ. 760 அதிகரித்து இருக்கிறது. 11-ந்தேதி பவுன் ரூ. 41,840-ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பாதுகாப்பானது என கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் நகை வாங்க உள்ள பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ.73.50-ல் இருந்து ரூ.74.50 ஆகவும் கிலோ ரூ. 73,500-ல் இருந்து ரூ.74,500 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    ×