search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223226"

    • பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது.
    • டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது. 75 டிராக்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றன.

    75வது சுதந்திர தினத்தை குறிக்கும் டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம்தொடங்கி வைத்தார். மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.

    விவசாய அணி மாவட்டத்தலைவர் தர்மபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட பார்வை யாளர்மோகன்மந்தராச்சலம், நிர்வாகிகள் குமரேசன், ஆனந்த், மகேஷ், ரவி உட்பட பலர்பங்கேற்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார்
    • கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க வைர நகை களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் ரபிதீன் (வயது 46). இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி ரபிதீனின் அண்ணன் இறந்து விட்டார்.

    இதனையடுத்து அவர் தனது வீட்டை பூட்டி விட்டு மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டில் உள்ள பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அறையில் இருந்த பிரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ், வளையல், வைர மோதிரம், கம்மல், கைசெயின் உள்பட 19½ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலையில் வீட்டிற்கு திரும்பிய ரபிதீன் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த தங்க வைர நகை களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பொள்ளாச்சி மேற்கு போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். உடன டியாக போலீ சார் சம்பவ இடத்துக்கு விரை ந்து சென்று விசார ணை நடத் தினர்.

    பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளை யர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பேக்கரி உரிமையாளர் வீட்டில் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளை யர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் பொருத்த ப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளை யர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

    • மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

    பொள்ளாச்சி:

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து இன்று பொள்ளாச்சி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    அப்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

    இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மின்வாரிய ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில அரசுகளின் உரிமையை அடியோடு பறிக்கப்படும் நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், மற்றும் ஏழை மக்களுக்கு வழங்கப்படும்100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிபோகும் நிலை ஏற்படும்.

    எனவே இந்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

    • சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார்.
    • செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத் (வயது 29). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார். இரவு தோட்டத்து வீட்டில் தங்கினார்.

    நள்ளிரவு விஷ்ணு பிரசாத் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு பிரசாத் டவுன் கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • தலைமறைவாக உள்ள சிறுமியின் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த மாதம் 14-ந் தேதி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி (வயது 22) என்பவருக்கும் சிறுமியின் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து ஆனைமலை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சிறுமியின் ஊருக்கு சென்று அவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜோதிமணி சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 15 வயது சிறுமியை திருமணம் செய்த ஜோதிமணியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் நடத்தினர். தலைமறைவாக உள்ள சிறுமியின் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சாலையோரத்தில் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

    ஆனைமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனசரகங்களில் யானை, புலி, கரடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக வில்லோனி, வேவர்லி, தோணிமுடி, நடுமலை, கவர்க்கல், அக்காமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் கரடிகள் நடமாட்டம் உள்ளது.

    இந்த நிலையில் ஆழியாறு-வால்பாறை சாலையில் காண்டூர் கால்வாய் கடக்கும் பகுதியில் கரடி ஒன்று சாலையோரத்தில் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியாறு அருகே வால்பாறை சாலையில் கரடி ஒன்று சுற்றி திரிவதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

    வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்வது, புகைப்படம் எடுப்பது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனவிலங்குகளை அதன் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

    வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுலா பயணிகளால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும் வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் வனச்சட்டங்களையும், விதிகளையும் மதித்து நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பிரதீபன் (வயது 33). பெயிண்டர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கை அகதியாக வந்தார்.

    அதே முகாமுக்கு பவித்ரா (27) என்பவரும் வந்தார். அப்போது இருவருக்கும் இடைேய பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர். 3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் பிரதீபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று பிரதீபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்ேபாது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபன் தனது மனைவி பவித்ராவிடம் நீ இறந்தால் தான், நான் நிம்மதியாக வாழ முடியும் என திட்டினார்.

    இதனால் பவித்ரா மனவேதனையுடன் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ அடத்துக்கு வந்து பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து பவித்ராவின் தந்தை நடராஜன் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீபனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
    • தலை , உதடு, மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பத்திரகாளி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 31).


    இவர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்த போது ஜோதி நகரில் மூதாட்டி ஒருவர் இறந்து விட்டதாகவும், அவரது மகன் பாபு என்பவர் மது குடித்து விட்டு தகராறு செய்வதாகவும் தகவல் வந்தது. இனையடுத்து போலீஸ்காரர் ராஜபாண்டி தகவல் வந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.


    அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாசானி (41) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி கைகளால் தாக்கினார். இந்த தாக்குதலில் போலீஸ்காரர் ராஜபாண்டிக்கு தலை , உதடு, மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கு இருந்தவர் போலீஸ்காரரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீ சார் போலீஸ்கா ரரை தாக்கிய மாசானியை கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாசானியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • வேலைக்கார பெண் ஆப்பிள் ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்
    • நகை மற்றும் பணம் கொள்ளை போனது

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 63). பூ வியாபாரி.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு 35 வயது மதிக்க தக்க இளம்பெண் ஒருவர் காலை மற்றும் மாலை வேலைகளில் அடிக்கடி வந்து முத்துலட்சுமிக்கு உதவி செய்து வந்தார். சம்பவத்தன்று அந்த இளம்பெண் ஆப்பில் ஜூசில் மயக்க மருந்தை கலந்து முத்துலட்சுமிக்கு கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

    பின்னர் அந்த பெண் அவரது வீட்டை திறந்து வீட்டில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    மயக்கம் தெளிந்து எழுந்த முத்துலட்சுமி இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயக்க மருந்து கலந்து கொண்டு மூதாட்டியின் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • பரம்பிக்குளம் -ஆழியாறு பி.ஏ.பி திட்டத்தில் 9 அணைகள் உள்ளன.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர்ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன.

    இந்த தொகுப்பு அணைகள் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் வழக்கமாக நிரம்பிவிடும். இந்த ஆண்டும் அதேபோன்று தென்மேற்கு பருவமழை கை கொடுத்த நிலையில், பி.ஏ.பி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகள் நிரம்பி விட்டன.

    திருமூர்த்தி அணை மட்டும் நிரம்பாமல் உள்ளது. மற்ற அணைகள் நிரம்பி விட்டதால் பி.ஏ.பி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பி.ஏ.பி தொகுப்பு அணைகள் நிறைந்தாலும் ஒப்பந்தப்படி தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய 30.5 டி.எம்.சி தண்ணீரை எடுத்துக் கொள்வது என்பது நிறைவேற்ற முடியாத செயலாக உள்ளது.

    அதற்கு காரணம் பி.ஏ.பி திட்டத்தில் உள்ள சோலையார் மற்றும் பரம்பிக்குளம் அணைகள் அதிகமான நீர்வரத்து ஏற்பட்டாலும் தமிழகத்திற்கு ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே சுரங்கப்பாதைகள் வழியாக கொண்டு வர முடியும் என்ற நிலை உள்ளது.

    இதனால் மழைப்பொழிவு அதிகமாக கிடைத்தாலும் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனைமலையாறு மற்றும் நல்லாறு போன்ற திட்டங்களை நிறைவேற்றினால் தான் பி.ஏ.பி திட்டத்தில் ஒப்பந்தப்படி தமிழகம் தண்ணீர் பெரும் வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

    அணைகளின் நீர்மட்டம் விவரம் வருமாறு:-சோலையார் அணை நீர்மட்டம் 161.33அடியாக உள்ளது. இதில் நீர்வரத்து 3865.88 கன அடியாகவும், வெளியேற்றம் 4596.20க.அடியாகவும் உள்ளது. பரம்பிக்குளம் நீர்மட்டம் 70.50/72 அடியாக உள்ளது.நீர்வரத்து:2779க.அடி.வெளியேற்றம்:1300 க.அடி.

    ஆழியார் அணை நீர் மட்டம்:107.70/120அடி.நீர்வரத்து:1198 கன அடி. வெளியேற்றம்: 159 கன அடி. திருமூர்த்தி அணை நீர்மட்டம்: 28.74/60அடி நீர்வரத்து: 25 கன அடி வெளியேற்றம்: 27கன அடி. அமராவதி அணை நீர்மட்டம்: 88.42/90அடி. நீர்வரத்து: 1884 கனஅடி வெளியேற்றம்: 1926 கன அடி. 

    • ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடவேண்டும்,
    • தமிழக அரசு கூடுதல் கொள்முதல் மையங்களை ஏற்படுத்தி கொப்பரை கொள்முதல் செய்யவேண்டும்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை தனிமாவட்டமாக்க வேண்டும் என பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூரில் நடைபெற்றது. மாவட்ட த்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆனைமலை மேற்கு ஒன்றியத்தலைவர் வெள்ளியங்கிரி வரவேற்றார்.

    மாவட்ட பார்வையாளர் மோகன்மந்தராச்சலம், கரூர் மாவட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் துரை, கோவிந்தராஜ், ஆனந்த், மாவட்டதுணைத்த லைவர் தனபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ெபாள்ளாச்சி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கவேண்டும், ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றவேண்டும், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடவேண்டும், அதற்கான அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகாரிகள் உதவியுடன் அதிக அளவு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. கனிம வளங்கள் கடத்தலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 55 ஆயிரம் டன் கொப்பரையை கொள்முதல் செய்ய மத்திய அரசு கூறியும், தமிழக அரசு 20 ஆயிரம் டன் கொப்பரையை மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. தமிழக அரசு கூடுதல் கொள்முதல் மையங்களை ஏற்படுத்தி கொப்பரை கொள்முதல் செய்யவேண்டும்.

    வெள்ளலூர் பஸ் நிலைய பணிகள் கடந்த ஆட்சியில் 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் பணிகள் நிறுத்தப்பட்டு ள்ளது. அந்த பணிகளை தொடங்க வேண்டும். பொள்ளாச்சி நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை கைவிடவேண்டும். இளை ஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டம் பாராட்டுக்குரியது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • வீட்டில் இருந்த சினேகா தனது மாமியாரிடம் பொள்ளாச்சிக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி சென்றார்.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அருகே சமத்தூரை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது22). இவரது மனைவி சினேகா(20). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சினேகா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    சம்பவத்தன்று மகேந்திரன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த சினேகா தனது மாமியாரிடம் பொள்ளாச்சிக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து மகேந்திரன் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கர்ப்பிணி பெண்ணை தேடி வருகின்றனர்

    ×